
செளதி அரேபியாவுக்கான இந்திய தூதராக பணியாற்றி வரும் எம்.ஓ.எச் ஃபாரூக் மரைக்காயரின் ஐந்தாண்டுக்கால பணி நிறைவடடைவதையொட்டி தல்மிஷ் அஹ்மத் அப்பொறுப்பை ஏற்க உள்ளார்.
தல்மிஷ் அஹ்மத் ஏற்கனவே 2000 முதல் 2003ம் ஆண்டு வரை செளதி அரேபியாவுக்கான இந்தியத் தூதராக பணி புரிந்துள்ளார். இப்போது இரண்டாவது முறையாக மீண்டும் அப்பொறுப்பை ஏற்க உள்ளார்.
தனது 35 ஆண்டு இந்திய வெளியுறவுத்துறைப் பணியில் தல்மிஷ் அஹ்மத் குவைத், பாக்தாத், ஏமன், செளதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலும், நியூயார்க், லண்டன் மற்றும் பிரிட்டோரியா ஆகிய நாடுகளிலும் பணி புரிந்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக