கடந்த 2003 ஆம் ஆண்டு தனது 3 குழந்தைகளுடன் கடத்திச் செல்லப்பட்ட மருத்துவரான டாக்டர் ஆஃபியா சித்திக்கியை 2008 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் கஜ்னி மாகாணத்தில் கண்டுபிடித்ததாக கூறி அவருக்கு அல்காயிதாவுக்கும் தொடர்பு இருப்பதாகவும், அமெரிக்க ராணுவத்தினரைக் கொலைச் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு அமெரிக்காவிலிலுள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டால் அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும்.இந்நிலையில் அவர் விசாரணைக்காக நியூயார்க் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டார். இந்நிலையில் டாக்டர் ஆஃபியா சித்தீகி நீதிபதியை நோக்கி கூறியதாவது, "எனக்கு பேசுவதற்கு வாய்ப்பே அளிக்கப்படுவதில்லை. சிறிதளவு என்னை பேசவிடுங்கள்.எனது குழந்தைகளை அவர்கள் சித்தரவதைக்குள்ளாக்கினார்கள். என் மீது போடப்பட்ட வழக்கு போலியானது.நான் எந்த குண்டுவெடிப்பிற்கும் திட்டமிடவில்லை. நீங்கள் என் மீது பொய்யை சுமத்துகிறீர்கள்." இவ்வாறு ஆஃபியா ஆவேசமாக கூறினார்.
பாகிஸ்தான் கராச்சியிலிருந்து கடத்தப்பட்ட மருத்துவரான ஆஃபியாவையும், குழந்தைகளையும் அமெரிக்க ராணுவம் பக்ராம் சிறையில் 5 ஆண்டுகளாக சித்தரவதைக்குள்ளாக்கியது என்று ஏற்கனவே மனித உரிமை ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர். அவர் சிறைக்கைதி எண் 650 என்று அழைக்கப்பட்டார் என்றும் கூறப்பட்டது.
source:presstv
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக