செவ்வாய், 12 ஜனவரி, 2010

பிரிட்டீஷ் ராணுவம் ஈராக்கில் மூதாட்டியை சித்தரவதைச் செய்து கொன்றது

லண்டன்:பிரிட்டீஷைச் சார்ந்த ராணுவ வீரர்கள் ஈராக்கில் 62 வயதான மூதாட்டியை வீட்டிலிருந்து பிடித்துச் சென்று சித்தரவதைச் செய்துக் கொன்றதாக பிரிட்டனிலிருந்து வெளிவரும் இண்டிபெண்டண்ட் பத்திரிகைச்செய்தி வெளியிட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து பிரிட்டனில் ராயல் மிலிட்டரி போலீஸ் விசாரித்துவருகிறது. 2006 இல்தான் இச்சம்பவம் நடைபெற்றது. பஸராவைச்சார்ந்த ஸபீஹா குதர் தாலிபா என்பவர்தான் கொல்லப்பட்டவர். நவம்பர் 15 ஆம் தேதி ராயல் ரெஜிமண்டில் பிடித்துச் செல்லப்பட்ட இவருடைய மரணித்த உடல் சாலையருகில் வீசப்பட்டிருந்தது. வயிற்றில் குண்டடிப்பட்ட அடையாளமும், முகம் முழுவதும் படுகாயமடைந்த அடையாளம் காணப்பட்டது. பஸராவில் அல்கிப்லா போலீஸ் இதனை முதலில் விசாரித்தது. இவருடைய கைகளில் விலங்கிடப்பட்டிருந்தது. உடல்முழுவதும் தாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்பட்டன உடல் ஆடையற்ற நிலையில் இருந்ததாக போலீஸ் ரிப்போர்டில் கூறப்படுகிறது.

இச்சம்பவத்தை பிரிட்டீஷ் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புக்கொண்ட போதிலும் சித்திரவதைச் செய்ததை அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. காயமடைந்த அப்பெண்மணி ராணுவ மருத்துவமனையில் இறந்ததாக பிரிட்டீஷ் பாதுகாப்புத்துறையின் செய்தித்தொடர்பாளர் கூறுகிறார். இப்பெண்மணியின் குடும்பத்தினர் பிரிட்டீஷ் பாதுகாப்புத்துறைக்கெதிராக லண்டன் உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடர முயற்சித்துவருகின்றனர்.

வீட்டில் அத்துமீறி நுழைந்த பிரிட்டீஷ் ராணுவத்தை எதிர்த்த ஸபீஹாவின் மகன் அல்மாலிகியை ராணுவம் சுட்டுக்கொன்றதாக இவர்களின் வழக்கறிஞர் கூறுகிறார். ஸபீஹாவின் மற்றொரு மகனை பிரிட்டீஷ் ராணுவம் சித்திரவதைச் செய்ததையும் வழக்கறிஞர் குறிப்பிடுகிறார்.
ஸபீஹாவின் மகன் கூறியதாவது "அதிகாலையில் திடீரென வீட்டில் துப்பாக்கிச் சத்தம் கேட்டது. திருடர்கள் யாரோ வீட்டில் நுழைந்து சுடுகின்றார்கள் என்று கருதி எனது சகோதரர் வீட்டின் மேல்பகுதியிலிருந்து அவர்களை திருப்பிச் சுட்டான். 20 நிமிடங்கள் அவர்கள் வீட்டை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் எனது சகோதரர் மரணமடைந்தார். வீட்டை சுற்றிவளைத்து வீட்டிலிலுள்ள அறையில் அத்துமீறி நுழைந்த பிரிட்டீஷ் ராணுவத்தினர் என்னை கடுமையாக தாக்கிய பிறகு வெளியேக் கொண்டு நிறுத்தினர். இதைப்பார்த்து சப்தமிட்டுக் கொண்டே வந்த தடுத்த எனது உம்மாவை அவர்கள் பிடித்து இழுத்துச்சென்றனர். எனது உம்மாவை நான்கு அல்லது ஐந்து பிரிட்டீஷ் ராணுவ வீரர்கள் பிடித்துச்சென்றதை பார்த்தேன். அப்பொழுது எனது உம்மாவின் உடலில் ஒரு காயமும் இல்லை. ஒரு பிரிட்டீஷ் ராணுவ வீரன் எனது உம்மாவை துப்பாக்கியால் அடித்தான்.பின்னர் அவர் மீதிருந்த போர்வையை பிடித்து இழுத்துவிட்டு அவரை ராணுவ ஜீப்பில் தூக்கியெறிந்து அழைத்துச் சென்றனர். பின்னர் நான் எனது உம்மாவைக்கண்டது சாலையோரத்தில். என்னை வேறொரு வாகனத்தில் ராணுவ முகாமிற்கு கொண்டுச் சென்றனர். கடுமையான சித்தரவதைக்குப் பிறகு என்னிடம் விசாரணை நடத்தினர்.

அல்காயிதாவின் ராக்கெட் தாக்குதலைக் குறித்து கூறக்கூறி அவர்கள் என்னை பிழிந்து எடுத்தனர். மறுநாளும் இதுத்தொடர்ந்தது, பின்னர் ஒரு ராணுவ வீரன் நான் நிரபராதி என்பதையறிந்து என்னிடம் ஐந்து டாலர்கள் தந்து ஒரு டாக்சியில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பிவைத்தான்" இவ்வாறு ஸபீஹாவின் மகன் கூறினார்.
செய்தி:மாத்யமம்

கருத்துகள் இல்லை: