வியாழன், 21 ஜனவரி, 2010

வேலூர் கோட்டை மசூதியை மீட்க தடையை மீறி ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் உள்பட 682 பேர் கைது




காவல் துறையின் தடையை மீறி புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்பட 682 பேர் கைது செய்யப்பட்டனர்.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மசூதி மீட்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில் திருமாளவன் பேசியது:

இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் தொப்புள்கொடி உறவு உள்ளது. கட்டுப்பாட்டை கடைபிடிப்பவர்கள் இஸ்லாமியர்கள். அவர்கள் வேலூர் கோட்டைக்குள் இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள மசூதியில் தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும். வழிபாடு உரிமை ஜனநாயக உரிமை. அதனால் வேலூர் கோட்டையில் உள்ள மசூதி முஸ்லிம்கள் தொழுகைக்காக திறக்கப்பட வேண்டும். அது வரை விடுதலை சிறுத்தைகள் கட்சி போராடும் என்றார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 80 பெண்கள் உள்பட 682 பேரை போலீஸôர் கைது செய்தனர். கைதான திருமாவளவன் உள்ளிட்ட 682 பேரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை: