சரத்குமார் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஜக்குபாய் படத்தின் காட்சிகள் இணையதளத்தில் வெளியானதாக சொல்லி சரத்குமார் மற்றும் நடிகலிநடிகையர்கள் செய்த அமளிதுமளி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிடி தயாரிக்கும் பணமெல்லாம் மும்பை குண்டு வெடிப்பு போன்ற தீவிரவாத செயல்களுக்கு பயன்படுவதாகவும், தீவிரவாதிகள் இதற்கு பின்புலமாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். தனது படத்தின் சி.டி. கூட பûமா பஜாரில் விற்கப்பட்டது என்றார். சிடி வியாபாரத்தில் பெரும்பாலும் ஈடுபடுவது பெரும்பாலும் மார்க்கப் பற்றற்ற முஸ்லிம்கள் தான். எனவே அவர் தீவிரவாதி என்று குறிப்பிட்டது யாரை என்று எல்லாருக்கும் நன்றாகவே புரிந்தது.
நடிகர்களின் கோரிக்கையை ஏற்ற முதல்வர் , தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற கொலைகளில் தொடர்புடைய குற்றவாளிகளை இன்னும் கைது செய்யாமல் தலையை பியத்துக் கொண்டிருக்கும் ஸ்காட்லாந்து காவல் துறைக்கு இணையான தமிழக காவல்துறைக்கு ஆணையிட்டு கள்ளத்தனமாக படத்தை இணைய தளத்தில் வெளியிட்ட இரண்டு நபர்களை உடனடியாக கைது செய்தார்.
கமலின் துரதிர்ஷ்டம், கைதான இரண்டும் பேரும் முஸ்லிம்கள் அல்ல, உடனடியாக இனிமேல் திருட்டு விசிடி விற்கும் நபர்கள் அதே போல் வாங்கும் நபர்கள் அனைவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர் திரையுலக பிரமுகர்கள்.
திருட்டு விசிடி வாங்குபவர்களும் குண்டர் சட்டத்தில் கைது என்ற கோமாளித்தனமான கோரிக்கையை தமிழக அரசு கூடிய விரைவில் பரிசிலித்து சட்டமாக்கும் என்று தெரிகிறது. ஏனெனில் பொது மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை விட முதல்வருக்கு நடிக, நடிகைகளின் கோரிக்கைதான் முக்கியம்.
எனவே முதல்வர் குண்டர் சட்டத்தை கொண்டு வரலாம். ஆனால் அப்படி ஒரு சட்டம் வந்தால் டிக்கெட் எடுக்க வசதி இல்லாமல் திருட்டு விசிடியில் குடும்பத்தோடு படம் பார்க்கும் பாமர தமிழன் போன்று, Slum dog Millionire’ போன்ற அயல் மொழி படங்களை திருட்டு விசிடியில் பார்க்கும் சினிமாகாரர்களும் ஆங்கிலப்படங்ளை பார்த்து காப்பி அடிக்க சி.டி. வாங்கும் இயக்குனர்களும் (?), கதாசிரியர்களும் (?) அல்லவா சிக்குவார்கள்.
எது எப்படியோ, முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் உன்னைப்போல் ஒருவன் படம் எடுத்து முஸ்லிம் சமுதாயத்தின் கவனக் குறைவால் தப்பித்த கமல், இப்போது முஸ்லிம் சமூகத்தை திரும்ப ஒரு முறை சீண்டியிருக்கிறார். தொடர்ந்து இது போன்ற வேலைகளில் கமல் ஈடுபடுவாரானால் முஸ்லிம் சமுதாயம் அதை வேடிக்கை பார்க்காது என்று கமலுக்கு எச்சரிக்கை விடுக்கிறோம்.
நீலாங்கரை இரட்டை கொலை தொடர்பாக கருத்துக்களை தெரிவித்த விஜயகாந்துக்கு நோட்டீஸ் அனுப்பிய காவல்துறை, திருட்டு சி.டி.க்காரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் உள்ள தொடர்பை நன்கு (?) அறிந்த கமலுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பினால் பல உண்மைகள் (?) வெளிவரும், செய்வார்களா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக