கெய்ரோ:காஸ்ஸாவிற்கு நிவாரணப் பொருட்களுடன் சென்ற விவா ஃபலஸ்தீன் குழுவினரில் உட்பட்ட பிரிட்டீஷ் எம்.பி ஜார்ஜ் கல்லோவேயை எகிப்திய அரசு பிரிட்டனுக்கு வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பியது.
நிவாரண குழுவினரை காஸ்ஸாவிற்கு அனுப்புவதற்கு தாமதம் ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அரசை விமர்சித்ததால் கல்லோவேயை பிரிட்டனுக்கு திருப்பு அனுப்பியது. மீண்டும் எகிப்தில் நுழைவதற்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நிவாரணக்குழுவில் உட்பட்ட ஏழுபேரை கைதுச்செய்த தகவலை அறிந்து கால்லோவே மீண்டும் காஸ்ஸாவிற்குள் செல்ல முயற்சித்தபோது தடைச்செய்த எகிப்திய அதிகாரிகள் அவரை பலவந்தமாக விமான நிலையத்திற்கு கொண்டுச்சென்று பிரிட்டன் செல்லும் விமானத்தில் ஏற்றிவிட்டனர். அவருடன் வந்த ரோன் மக்கெயும் விமானத்தில் ஏற்றிவிடப்பட்டார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக