வியாழன், 7 ஜனவரி, 2010

2010 ஆம் ஆண்டில் அரசின் உணவுக்கூப்பன்களை பெறும் அமெரிக்க குடிமகன்களின் எண்ணிக்கை 2.8 கோடியாகும்

இந்த ஆண்டில் அரசின் உணவுக்கூப்பன்களை எதிர்பார்க்கும் அமெரிக்க குடிமகன்களின் எண்ணிக்கை எதிர்பார்க்காத வகையில் 2.8 கோடியாக அதிகரிக்கும் என அமெரிக்காவிலிலுள்ள தி கங்கிரஸனல் ஆஃபீஸ்(CBO) அறிவித்துள்ளது.இவ்விஷயத்தில் அமெரிக்க அரசு நிர்வாகம் உணவுத்தேவை அதிகரித்து அரசின் உணவுக்கூப்பன்களை பெறும் மக்களின் எண்ணிக்கையை குறைப்பதில் தோல்வியை தழுவியுள்ளது. இதனால் இந்த ஆண்டு நவம்பரில் நடைபெறும் இடைத்தேர்தலில் அதிபர் ஒபாமாவின் ஜனநாயக கட்சி நல்ல முடிவை பெற இயலாது என்றும் கூறப்படுகிறது. ஆயினும் ப்ரூக்கிங்ஸ் இன்ஸ்ட்டிடியூட்டைச் சார்ந்த இஸாபெல் கூறுகையில் அமெரிக்க அரசு நலவாழ்வுத் திட்டங்களுக்கு செலவிடுவது அதிகரித்துள்ளது பொருளாதார நெருக்கடியை தீர்க்க உதவும் என கூறுகிறார்.

தங்களது பொருளாதார திட்டம் வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது என்று தம்பட்டம் அடிக்கும் அமெரிக்காவில் உணவுப்பற்றாக் குறையால் அரசின் உணவுக்கூப்பன்களை எதிர்பார்க்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதான் உண்மையான நிலவரம் என பி.பி.சி தெரிவிக்கிறது.
செய்தி:presstv

கருத்துகள் இல்லை: