சனி, 9 ஜனவரி, 2010

வெளிநாட்டு இந்தியர்களுக்கு ஓட்டுரிமை:பிரதமரின் பேச்சுக்கு இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் வரவேற்பு

தம்மாம்:வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான வாக்குரிமை அளிக்க அனுமதியளிக்கப்படும் என்ற பிரதமர் மன்மோகன் சிங்கின் அறிவிப்பை வரவேற்பதாக இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் கூறியுள்ளது.

சொந்த தேசத்தின் ஜனநாயக உரிமையில் பங்குக்கொள்ள வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் கோரிக்கைக்கு நீண்ட கால பழக்கமுள்ளது. இந்தியப் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக திகழும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு இது நாள் வரை கடைப்பிடித்து வந்த பாரபட்சமான நீதியில் மாற்றம் வருவது குறித்தான் அறிவிப்பு சுபச்செய்தியாகும்.

வெளிநாட்டு இந்தியர்களுக்கான வாக்குரிமைக் குறித்து துவக்க காலம் முதலே இந்தியா ஃபெடர்னிடிஃபாரம் களத்திலுள்ளது. கேரள உயர்நீதிமன்றத்தில் ஃபாரம் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட ரிட் ஹர்ஜியில் சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா துணைக்கட்சிதாரராக இணைந்தது.

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு ஏற்கனவே கொடுத்துள்ள வாக்குறுதிகளைப் போல் இதனையும் கருதாமல் இவ்விஷயத்தில் மன்மோகன் சிங் அரசு செயல்படுத்துவதில் உறுதியைக் காண்பிக்க வேண்டுமென்று இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் சவூதி ஒருங்கிணைப்பாளர் பஷீர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் சாதிக் மீரான் ஆகியோர் வெளியிட்டுள்ள ஒருங்கிணைந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: