புதன், 27 ஜனவரி, 2010

சியோனிஸ்டுகளின் அரசு ஒரு நாள் காணாமல் போகும்: ஈரான் ஆன்மீகத் தலைவர்

டெஹ்ரான்:மத்திய கிழக்கு நாடுகள் பார்த்துக் கொண்டிருக்கவே சியோனிஸ்டுகளின் அரசு ஒரு நாள் காணாமல் போகும் என ஈரான் இஸ்லாமிய புரட்சியின் தலைவர் ஆயத்துல்லாஹ் செய்யது அலி காமினி கூறினார்.
IRNA செய்தி நிறுவனம் இச்செய்தியை வெளியிட்டுள்ளது. மெளரிட்டானியா அதிபர் முஹம்மது ஓத் அப்துல் அஸீஸ் டெஹ்ரானில் காமினியை சந்தித்து பேசும் பொழுதுதான், "சந்தேகமின்றி ஒருநாள் சியோனிஷ ஆட்சி காணாமல் போகும்.அதற்கு மத்திய கிழக்கு நாடுகள் சாட்சி பகருவார்கள்" என்றார்.

இந்த சந்திப்பின்போது ஈரான் அதிபர் மஹ்மூத் நிஜாதும் உடனிருந்தார். மேலும் காமினி கூறுகையில், "அந்த நாள் அருகிலோ அல்லது தொலைவிலோ உள்ளது அது முஸ்லிம் நாடுகளின் நடவடிக்கையைப் பொறுத்தது. இஸ்ரேல் முஸ்லிம் நாடுகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். ஏனெனில் இஸ்ரேல் இந்தப் பகுதியில் ஆதிக்கம் செலுத்த விரும்புகிறது.முஸ்லிம் நாடுகளுடான உறவு என்பது ஈரானின் வெளியுறவுக்கொள்கையின் தூணாகும்.மேலும் மெளரிட்டானியா அதிபரின் வருகை இரு நாடுகளுக்கு இடையேயான உறவை விரிவுப்படுத்தும். இஸ்ரேலுடனான உறவை துண்டித்த மெளரிட்டானியாவின் நடவடிக்கை வரவேற்கத்தக்க ஒன்று. இந்நடவடிக்கை சில அரபு நாட்டு அரசுகளுக்கு சிறந்த முன்மாதிரியாகும்." என்றார்.

மெளரிட்டானியா அதிபர் கூறுகையில்,"ஈரானின் விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப முன்னேற்றம் உலக முழுவதுமுள்ள முஸ்லிம்களை பெருமிதம் கொள்ளவைக்கிறது" என்றார். மேலும் அவர் ஈரான் மற்றும் மெளரிட்டானியா நாடுகளுக்கிடையேயான உறவை விரிவுப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
source:presstv

கருத்துகள் இல்லை: