இறை நம்பிக்கை கொண்டோர்களே உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் பயபக்தயுடையோர் ஆகலாம். திருக்குர்ஆன் 2:183)
ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010
சவூதியில் ஃபத்வா வழங்கும் அதிகாரம் உயர் அறிஞர்கள் சபைக்கு மட்டுமே
மார்க்க அறிவில் போதிய அறிவில்லாத பலரும் ஃபத்வா வெளியிடுவது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதால் இந்த உத்தரவு வெளியிடப்பட்டதாக நேற்றுமுன் தினம் வெளியிடப்பட்ட அரசுக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இத்தடையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த உத்தரவில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சவூதி க்ராண்ட் முஃப்திக்கு வழங்கப்பட்டுள்ள இந்த அரசக்கட்டளையின் நகல், உயர் அறிஞர்கள் சபை, உள்துறை அமைச்சர், மார்க்க விவகார அமைச்சகம், உயர் கல்வித்துறை, நீதித்துறை, சட்ட அமைச்சகம், கலாச்சார-செய்தி ஒலிபரப்பு அமைச்சகம், புனித ஹரமை மேற்பார்வைப் பொறுப்பு வகிக்கும் பிரிவு ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
அறிஞர் சபையைத் தவிர வேறு ஏதேனும் நபர் ஃபத்வா வழங்குவதற்கான தகுதி உண்டென்றால் அதனை க்ராண்ட் முஃப்தியை சாட்சியாக வைத்து ஆவணம் மூலம் அறிவித்திருக்க வேண்டும் என்பது சட்டம்.
வணக்கவழிபாடுகள் மற்றும் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக தகுதி வாய்ந்த அறிஞர்களிடமிருந்து மார்க்கசட்டங்களைக் கேட்டு அறிவது இதில் உட்படாது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
புதன், 4 ஆகஸ்ட், 2010
அங்கீகாரமில்லாத ஃபத்வாக்களை வழங்காதீர்கள்- சவூதி அரசு
தனிப்பட்ட ரீதியில் சமீபத்தில் பல ஃபத்வாக்களை சில மார்க்க அறிஞர்கள் வழங்கியது திருப்தியில்லை என்பதால் இத்தகையதொரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என இஸ்லாமிய விவகாரத்துறை அமைச்சர் ஸாலிஹ் அல் ஷேக் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
சவூதியில் 65 சதவீதம் பெண்கள் பணி புரிகிறார்கள்
அஸட் மேனேஜ்மெண்ட் நிறுவனமான அல் மஸஹ் கேப்பிட்டல்தான் இந்த புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளது. பெரும்பாலான பெண்கள் பணிபுரிவது அரசுத் துறைகளிலாகும்.
தேசத்தின் சொத்தில் பெரும்பாலும் கையாளுவது பெண்களாகும். 1190 கோடி டாலர் பணம் சவூதியில் பெண்கள் வசமுள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது. பெரும்பாலும் வெறுமனே இருக்கும் இப்பணத்தை சரியான வழியில் பயன்படுத்தினால் பொருளாதாரத் துறையில் பெரியதொரு மாற்றத்தை ஏற்படுத்த இயலும் என அல் மஸஹ் கேப்பிட்டலின் நிறுவனர் ஷைலேஷ் தாஷ் தெரிவிக்கிறார்.
சொத்து விஷயத்தில் சவூதி பெண்கள் மட்டுமல்ல, மேற்காசியாவின் மொத்த சொத்துக்களின் 22 சதவீதமும் பெண்களின் கட்டுப்பாட்டில் உள்ளது என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.இதில் மேற்காசிய உலகில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
திங்கள், 15 பிப்ரவரி, 2010
ரியாத் சர்வதேச இந்தியப் பள்ளியில் தீவிபத்து
பள்ளியின் மகளிர் வளாகப் பகுதியில் இந்த விபத்து நடந்தது. இந்த வளாகம் 3 மாடிக் கட்டடமாகும். அங்குள்ள பாதுகாப்பாளர் அறைக்கு வெளியே தீவிபத்து ஏற்பட்டது.
இந்த தீவிபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பொருட் சேதமும் ஏற்படவில்லை என்று பள்ளியின் தலைவர் இம்தியாஸ் தெரிவித்தார்.
தீவிபத்து குறித்து ஆசிரியை ஒருவர் கூறுகையில், வகுப்புகள் நடந்து கொண்டிருந்தபோது திடீரென புகையுடன் தீ கிளம்பியதால் அனைவரும் மாடிக்கு ஓடினோம். அங்கிருந்த குழந்தைகளை பத்திரமாக மீட்டு வெளியேற்றினோம். இதனால் மாடிப்படிகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இருப்பினும் யாரும் காயமடையவில்லை என்றார்.
தீவிபத்தைத் தொடர்ந்து அனைவரும் வகுப்பறைகளை விட்டு வெளியேற்றி மைதானத்திற்குக் கொண்டு வரப்பட்டனர்.
திங்கள், 28 டிசம்பர், 2009
சவூதியில் வேலை செய்யும் வெளிநாட்டவர்களுக்கு “ஃபேமிலி விசா”
சவூதி அரேபியாவில் வேலை செய்யும் வெளிநாட்டவர்கள், குறிப்பாக இந்தியர்களுள், வெகு சிலரே தங்கள் மனைவி-மக்களோடு தங்கி பணிபுரிந்து வருகின்றனர். மற்ற பெரும்பாலோர் தங்கள் குடும்பத்தை தாயகத்திலிருந்து பிரிந்தே, சவூதியில் பணிபுரிந்து வருகின்றனர். மிகக்குறைந்த சம்பளத்தில் கடுமையான வேலைகளைச் செய்யும் அதே நேரத்தில், தங்கள் இளமையையும் தொலைக்க நேரிடுகின்றது. அவர்களும், தங்கள் குடும்பத்தை சவூதிக்கு கொண்டு வர முடியாததற்கு குறைந்த சம்பளம், அரசாங்கம் விசா தராமை போன்ற பல காரணங்கள் உள்ளன.
சவூதி அரேபியாவில் பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையில் (இக்காமா) அவர்களின் செய்யும் தொழிலும் (புரஃபஷன்) குறிப்பிடப்பட்டிருக்கும். அதில் நிறைய பேர்களுக்கு, அவர்கள் செய்யும் வேலைக்கும், இக்காமா குறிப்பிடப்பட்டிருக்கும் தொழிலுக்கும் சம்பந்தமே இருக்காது. ஆனால், தங்கள் மனைவி-மக்களை ஃபேமிலி விசாவில் அழைத்து வருவதற்கு, சவூதி வெளியுறவு அமைச்சகம், “மருத்துவர், பொறியியலாளர், டெக்னீஷியன், மேலாளர்கள்” போன்ற புரஃபஷன் உள்ளவர்களுக்கு இத்தனை நாட்கள் விசா வழங்கி வந்துள்ளது. பலரும், நல்ல வேலையில், நல்ல சம்பாத்தியத்தில், நல்ல படிப்பு படித்திருந்தாலும், அவர்களது இக்காமாவில் புரஃபஷன் தவறாக இருந்ததால், தங்கள் குடும்பத்தோடு சேர்ந்து தங்கி வேலை புரிய முடியாமல் இருந்து வந்தது.
தற்போது, நல்ல சம்பளத்தில் நல்ல வேலையில் உள்ளவர்களின் புரஃபஷன் என்னவாக இருந்தாலும், அவர்களுக்கு ஃபேமிலி விசா வழங்க சவூதி சவூதி அரசு முன்வந்துள்ளது. இதன் மூலம், சுமார் 70 லட்சம் வெளிநாட்டவர்கள் பயன் பெறுவார்கள் என்று, “அல்-யவ்ம்” அரபு பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. இனி ஃபேமிலி விசாவானது அவரவர்கள் வாங்கும் சம்பளத்திற்கேற்ப நிர்ணயிக்கப்பட உள்ளது. இதற்கான முன்னறிவிப்பாக, ஓரிரு வாரங்களுக்கு முன்னதாக, மூன்று நாட்களுக்கு மட்டும் ரியாதில் விண்ணப்பித்த அனைவருக்கு ஃபேமிலி விசா வழங்கப்பட்டது. தற்போது, அதுவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல், அரசின் அறிவிப்பிற்குப் பிறகு, சம்பள அடிப்படையில் மட்டும் ஃபேமிலி விசா வழங்கப்படும் என்றும் அந்த பத்திரிகை கூறியுள்ளது. இம்மாதிரியாக விசா வழங்குவது எந்த தேதியில் அமுலுக்கு வரும் என்பதை பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். முன்னதாகவே, தங்களது பாஸ்போர்டில் தங்களது மனைவியின் பெயரைச் சேர்க்கவும் (Spouse Name), இந்தியன் எம்பஸியை அணுகி வருகின்றனர்.
அதே வேளையில், குறிப்பிட்ட நாட்கள் மட்டும் தங்கும் வகையில் வழங்கப்படும் “விசிட் விசா”, விண்ணப்பிக்கும் அனைவருக்கும், புரஃபஷனை கணக்கில் கொள்ளமால், கடந்த மூன்று வாரங்களாக ரியாத் வெளியுறவுத் துறை அலுவலகத்தில் வழங்கபட்டு வருவது குறிப்பிடத் தக்கது. தற்போது ஓட்டுநர், வீட்டு வேலை செய்பவர்களுக்கு விசிட் விசா வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது என்பதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.
அரசின் இந்த முடிவிற்கு பலரும் நன்றி தெரிவித்துள்ள இவ்வேளையில், தற்போது குடும்பத்தோடு சவூதியில் பணிபுரிபவர்களில் சிலர், வீட்டு வாடகையும் இதன் மூலம் துபாய் போல அதிகரிக்கும் என அச்சம் தெரிவித்துள்ளனர்.
செய்தி: ரியாதிலிருந்து ஃபெய்ஸல்
திங்கள், 10 ஆகஸ்ட், 2009
செக்ஸ் நேர்முகம்:லெபனான் தொலைக்காட்சி நிறுவனத்தை மூட சவூதி உத்தரவு
