செக்ஸ் நேர்முகம் நடத்தியதாக லெபனான் நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றை காலவரையன்றி மூட சவூதி அரசு உத்தரவிட்டுள்ளது.
சவூதி அரேபியா உள்ளிட்ட சில முஸ்லிம் நாடுகள் ஒழுக்கவியலை தீவிரமாக கடைபிடித்து வருகின்றன.அதுவும் சவூதி அரேபியா தொலைக்காட்சி ஒளிபரப்பிலும் கூட ஆபாசம் கலந்து விடாமல் கண்ணும் கருத்துமாக இருந்துவருகின்றது.
இந்நிலையில் லெபனானை தலைமையிடமாகக்கொண்டு சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் செயல்படும் எல்.பி.சி என்றழைக்கப்படும் தொலைக்காட்சி சானல் ஒன்று சவூதி அரேபியாவைச்சார்ந்த குடிமகன் ஒருவரிடம் அவரின் பாலியல் அனுபவத்தையும் அதில் அவர் எதிர்க்கொண்ட பிரச்சனைகளையும் பேட்டி எடுத்து ஒளிபரப்பியது. இந்நிகழ்ச்சியின் பெயர் "அஹ்மார் பில்காத் அல் அரீத்" அல்லது Bold Red Lines Programme என்று பெயர். இதில் பாலியலைத்தூண்டும் விதமான பொம்மைகளும் பயன்படுத்தன. இதில் கலந்துக்கொண்டவர் அப்துல் ஜவாத் என்ற நான்கு வயது குழந்தைகளின் தந்தையான சவூதி குடிமகன். இதில் அவர் விகாரமானமுறையில் பாலியல் அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிகழ்ச்சி சவூதியில் பெரும் அதிர்ச்சி அலைகளை கிளப்பியது. இதனைத்தொடர்ந்து உடனடியாக அப்துல்ஜவாத் கைதுச்செய்யப்பட்டார். தொலைக்காட்சி நிறுவனமும் காலவரையன்றி மூடப்பட்டதாக அரசுதரப்பு செய்தியாளர் குறிப்பிட்டார். அப்துல் ஜவாதை மன்னித்து விடுமாறு சவூதி சமூகம் கோரியுள்ளது. அப்துல் ஜவாதின் வழக்கறிஞர் கூறுகையில் தனது கட்சிக்காரர் எதிர்பாராத விதத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றதாகவும், இதனைத்தூண்டியது தொலைக்காட்சி நிறுவனம்தான் என்றும் தெரிவித்தார். அப்துல் ஜவாத் மீது வெளிப்படையான முறையில் ஒழுக்கக்கேட்டை கற்பித்ததாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
இதுபற்றி லெபனான் தொலைக்காட்சி நிறுவனமான LBC ஒப்புக்கொள்ளவோ மறுப்போ தெரிவிக்கவில்லை.
செய்தி:அல் ஜஸீரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக