பீடிசுற்றும் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்கவேண்டும் என்று நெல்லையில் நடந்த த.மு.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொதுக்குழு கூட்டம்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தின் நெல்லை மாவட்ட பொதுக்குழு கூட்டம் நெல்லை விஜயாகார்டனில் நேற்று நடந்தது. பொதுச்செயலாளர் ஹைதர்அலி தலைமை தாங்கி பேசினார். மாநில துணை செயலாளர் மைதீன்சேட்கான் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தனி நல வாரியம்
பீடி சுற்றும் தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்க்க அவர்களுக்கு தனி நல வாரியம் அமைக்கவேண்டும்.
நெல்லை மாநகராட்சியின் வளர்ச்சி பணியில் தேக்கம் இல்லாமல் செயல்பட ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியை மாநகராட்சி ஆணையாளராக நியமிக்கவேண்டும்.
மேம்பாலத்தின் கீழ் பகுதியில் முன்பு போல கடைகளை அமைக்கவேண்டும். முதியோர் ஓய்வூதியம் பெற தகுதியான அனைவருக்கும் வழங்கவேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
யார்-யார்?
கூட்டத்தில் மாவட்ட தலைவர் மைதீன்பாரூக், துணை தலைவர் ரசூல்மைதீன், செயலாளர் உஸ்மான்கான், துணை செயலாளர்கள் சுல்தான், சர்தார் அலிகான், பொருளாளர் மிஸ்பாகி, மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பாளை.ரபீக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நன்றி: தினத்தந்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக