செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009

மாயாவதிக்கு சிலை வைக்க 556 கோடி:வறட்சியை சமாளிக்க 250கோடி மட்டும்

Mayawati Statue

உத்தரபிரதேச சட்டசபையில் நேற்று துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஒவ்வொரு துறைக்கும் எவ்வளவு பணம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அதில் கேட்கப்பட்டிருந்தது.

முதலமைச்சர் மாயாவதி முழு உருவ சிலையை உத்தரபிரதேசம் முழுவதும் நிறுவ துணை நிதிநிலை அறிக்கையில் ஒப்புதல் பெறப்பட்டது. இந்த சிலை அமைப்புக் பணிகளுக்காக 556 கோடி ஒதுக்கீடு செய்யவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.


இதையடுத்து மாநில வறட்சிக்கு நிவாரணப் பணிகள் மேற்கொள்வது பற்றி நிதிநிலை அறிக்கையில் விளக்கப் பட்டிருந்தது. மாநிலம் முழுவதும் வறட்சியை சமாளிக்க 250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

வறட்சியை சமாளிப்பதை விட சிலைகள் வைக்க 2 மடங்கு பணம் ஒதுக்கீடு செய்யப் பட்டிருப்பதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் அதை மாயாவதி கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை.

அடுத்து பேசிய அவர், தன் பயணத்துக்கு புதிய ஹெலிகாப்டர் வாங்க 10 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்வதாக நிதிநிலை அறிக் கையில் உள்ளதை கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஒட்டு மொத்தமாக வெளி நடப்பு செய்தனர்.

கருத்துகள் இல்லை: