சென்னை: பி.இ. படிப்பில் இந்த ஆண்டு சுமார் 25,000 இடங்கள் காலியாக இருக்கும் என தெரிகிறது.
இந்த ஆண்டு பி.இ. படிப்பில் இன்னும் 45,420 இடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப இம் மாதம் 11ம் தேதி வரை கவுன்சலிங் நடைபெறுகிறது. இதற்கு 35,000 மாணவர்கள் அழைக்கப்பட உள்ளனர்.
அதே நேரத்தில் பி.இ. முதல்கட்ட கவுன்சலிங்குக்கு அழைக்கப்பட்ட மாணவர்களில் சுமார் 30 சதவீதம் பேர் வரவில்லை. இரண்டாம் கட்ட கவுன்சலிங்குக்கு வராதவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
கடந்த 2 நாட்களாக 43 சதவீதம் மாணவர்கள் கவுன்சலிங்குக்கு அழைக்கப்பட்டும் வரவில்லை. எனவே, இந்த ஆண்டு சுமார் 25,000இடங்கள் காலியாக இருக்கும் என்று தெரிகிறது.
பி.இ படிப்பில் மொத்தமுள்ள 44 பாடப் பிரிவுகளில் 16 பாடப் பிரிவுகளில் 100 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக