சனி, 8 ஆகஸ்ட், 2009

வக்பு வாரிய சொத்துக்களை மீட்க தொடர் நடவடிக்கை* த.மு.மு.க., தலைவர் தகவல்

ஊட்டி : ""சென்னையில் மட்டும் 50 கோடி ரூபாய் மதிப்பிலான வக்பு வாரிய சொத்துக்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன; இதே போன்று மாநிலம் முழுவதிலும் உள்ள சொத்துக்களை மீட்க தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என த.மு.மு.க., தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில தலைவர் ஜவாஹிருல்லா, ஊட்டியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலின் போது, பல்வேறு இடங்களிலும் ஜனநாயகத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழக்கும் விதமான சம்பவங்கள் நடந்தன; ஓட்டுக்காக பணம் கொடுக்கும் முறைகேடுகளும் சிலரால் நடத்தப்பட்டன.தொழிற்நுட்பத்தில் நம் நாட்டை விட பலமடங்கு முன்னேறிய மேற்கத்திய நாடுகளில் கூட, ஓட்டு இயந்திரம் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் நான் போட்டியிட்ட தொகுதியில், எனக்கு ஓட்டு அளித்தவர்களுக்கு, "கை' சின்னம் தான் இரண்டு இடங்களில் பதிவானது. இதன்பின் தான் நான், முதன் முறையாக ஓட்டு இயந்திரத்தை பயன்படுத்தக்கூடாது என புகார் அளித்தேன். அதன்பின் தான் பிற அரசியல் கட்சிகள் குரல் கொடுத்தன.கடந்த 2004ம் ஆண்டு சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு குறித்து காங்கிரஸ் அறிக்கையில் கூறப்பட்டது.

இதற்கான ஆய்வறிக்கை 2007ம் ஆண்டு மே 22ம் தேதி சமர்ப்பிக்கப்பட்டும், காங்கிரஸ் அரசு இதுவரை அதை நிறைவேற்றவில்லை. இதை வலியுறுத்தி, த.மு.மு.க., சார்பில் மாநிலம் முழுவதும் வரும் 10 நாட்களுக்குள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.பாபர் மசூதி தொடர்பான வழக்கு, வரும் டிசம்பர் வந்தால், 60 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதனால், டிசம்பர் மாதத்துக்குள் இதன் தீர்ப்பை அளிக்க வேண்டும்.ஓரினச் சேர்க்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளோம்.

தமிழகத்தில் நடக்கவுள்ள இடைத்தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி போட்டியிடுவது குறித்து வரும் 1ம் தேதி சென்னையில் நடக்கும், நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.மாநிலத்தில் உள்ள வக்பு வாரியத்துக்கு சொந்தமான சொத்துகளை மீட்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் 50 கோடி ரூபாய் மதிப்பிலான வக்பு வாரிய சொத்துக்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. இதேபோன்று மாநிலம் முழுவதிலும் உள்ள சொத்துக்களை மீட்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு, ஜவாஹிருல்லா கூறினார்.

நன்றி: தினமலர்

1 கருத்து:

கூத்தாநல்லூர் ஜின்னா சொன்னது…

ஊர் சுத்தினு பேர் வச்சிக்கிட்டு காதுல பூ சுத்தாதிங்க சாதிக் பாய் முதல்ல ஹைதர் அலி பாய் கொள்ளை அடித்ததை மீட்க சொல்லுங்க வாத்தியாரே தப்பு கணக்கு போட்டா எப்படி?