திங்கள், 3 ஆகஸ்ட், 2009

அரியலூர் அருகே 41 டைனோசர் முட்டைகள் கண்டெடுப்பு !

கும்பகோணம்: அரியலூர் அருகே உள்ள செந்துறை பகுதியில், 41 டைனோசர் முட்டைகள் கண்டு எடுக்கப்பட்டுள்ளதாக தொல்லியலாளர் குடவாயில் சுந்தரவேலு கூறினார்.

இதுகுறித்து கும்பகோணத்தில் வரலாற்று தொல்லியலாளர் குடவாயில் சுந்தரவேலு செய்தியாளர்களிடம் கூறியதாவது..

அரியலூர் மாவட்டத்தில் தற்போதுள்ள நிலப்பகுதிகள் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் கடல் பகுதிகளாக இருந்துள்ளன.

பூமிக்கு அடியில் உள்ள பாறை தட்டுகள் ஒன்றின் மீது ஒன்று ஏறி கொண்டிருப்பதால், அரியலூர் பகுதி மேலே உயர்த்தப்பட்டு கடல்நீர் வடிந்து வற்றியுள்ளது.

அரியலூர் மாவட்டம் செந்துறைக்கு அருகில் 10 அடி ஆழத்துக்கு மழை நீரால் மண் அரிப்பு ஏற்பட்டுள்ள இடத்தில், அதன் அடி மட்டத்திலும் அதற்கு மேல் 3.5 அடி சரியான மற்றொரு மட்டத்திலும் 2 அடுக்குகளில் 40 அடி நீள எல்லைக்குள் 41 டைனோசர் முட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மழைநீர், வெப்பம் போன்ற காரணங்களால் 4 முட்டைகளை தவிர பிறமுட்டைகள் சேதமான நிலையில் உள்ளது. இவைகள் அனைத்தும் புதையுண்ட நிலையில் அரை குறையாக வெளிப்பட்டுள்ளன.

முட்டைகளில் பெரும் பாலானவை ஏறக்குறைய கோள வடிவில் 20 இஞ்ச் உள்ளன. ஒவ்வொன்றும் தலா 5 கிலோ எடை உள்ளதாக உள்ளன.

சில முட்டைகள் மட்டும் சிறியவையாகவும் பெரியவையாகவும் உள்ளது. இந்த முட்டைகள் 2 வட்டங்களில் உள்ளொன்று, வெளியொன்றாக நெருக்கமாக இடப்பட்டுள்ளன என்றார்.

கருத்துகள் இல்லை: