சனி, 1 ஆகஸ்ட், 2009

மத்திய அரசு பதவிகளில் சிறுபான்மையினருக்கு தனி இடஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்துள்ள மிஸ்ரா ஆணைய அறிக்கையை அமுல்படுத்த வலியுத்தி மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப

முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் கடந்த முறை பிரதமராக இருந்தபோது ஒய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரங்காநாத் மிஸ்ரா தலைமையில் தேசிய மத மற்றும் மொழி வாரி சிறுபான்மை ஆணையத்தை அமைத்தது.


ஈராண்டுகள் தாமதத்திற்கு பிறகு மே 21,2007 அன்று நீதிபதி ரெங்கநாத் மிஸ்ரா தனது ஆய்வறிக்கையை பிரதமரிடம் சமர்பித்தார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

  • மத்திய அரசு பணிகளில் 15 சதவீதம் சிறுபான்மையினருக்கு ஒதுக்கப்பட வேண்டும். அதில் 10 சதவீதம் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடாக கொடுக்கப்பட வேண்டும்.

  • சிறுபான்மையினர் அல்லாதவர் நடத்தும், அனைத்து கல்வி நிறுவனங்களிலும் 10 சதவீதம் முஸ்லிம்களும், 5 சதவீதம் இதர சிறுபான்மையினருக்கும் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.

  • முஸ்லிம்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு கூடுதல் மாணியமும், இதர வசதிகளும் செய்து கொடுக்கப்படவேண்டும்.

நீதிபதி ரெங்கநாத் மிஸ்ராவின் பரிந்துரைகளை மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போருக்கு கூட்டணி அரசு கிடப்பில் போட்டுவிட்டது. வழக்கம் போல் காங்கிரஸ் கட்சி சமூக நீதியில் இரட்டை வேடம் போடுகிறது. சிறுபான்மையினரின் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று அவர்களுக்கு சமூக நீதியை மறுக்கிறார்கள்.


ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள திமுக, திரிணமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகளும் மௌனம் காக்கின்றன.

எனவே, நீதிபதி ரெங்காநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து, அவற்றை உடனடியாக அமல்படுத்தி சமூக நீதியை பேனுமாறு மத்திய அரசை வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் தமிழ்நாடு - புதுச்சேரி மாநிலங்களில் மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கை ஆர்ப்பாட்டங்கள் நடத்துகிறோம்.


சென்னையில், சென்னை மொமோரியல் ஹால் அருகில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது அவர்களின் தலைமையில் மாலை 4.30 மணி அளவில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வடசென்னை மாவட்ட செயலாளர் முஹம்மது தமீம், தென் சென்னை மாவட்ட செயலாளர் அப்துல் சலாம் மற்றும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட பெரும் திரளானோர் கலந்துக் கொண்டனர்.

கருத்துகள் இல்லை: