டெல்லி: தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீட்டை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வகை செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
2010ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதியுடன் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு தரப்பட்டு 60 ஆண்டுகள் பூர்த்தியாகிறது.
இந்நிலையில், இந்தப் பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை நீட்டிக்க வகை செய்யும் 109வது திருத்த மசோதா மாநிலங்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து மக்களவையில் இந்த மசோதா 375 உறுப்பினர்களின் ஆதரவுடன் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு எதிராக ஓர் உறுப்பினர் வாக்களித்தார். ஒருவர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
இந்த மசோதா மக்களவை மற்றும் சட்டப் பேரவைகளுக்கு ஆங்கிலோ இந்தியர்களை நியமனம் செய்யவும் வகை செய்கிறது.
மக்களவையில் மொத்தமுள்ள 543 இடங்களில் 79 இடங்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் 41 இடங்கள் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக