சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் உள்ள சர்வதேச இந்தியப் பள்ளியில் தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்திலிருந்து 4500 மாணவ, மாணவியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பள்ளியின் மகளிர் வளாகப் பகுதியில் இந்த விபத்து நடந்தது. இந்த வளாகம் 3 மாடிக் கட்டடமாகும். அங்குள்ள பாதுகாப்பாளர் அறைக்கு வெளியே தீவிபத்து ஏற்பட்டது.
இந்த தீவிபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பொருட் சேதமும் ஏற்படவில்லை என்று பள்ளியின் தலைவர் இம்தியாஸ் தெரிவித்தார்.
தீவிபத்து குறித்து ஆசிரியை ஒருவர் கூறுகையில், வகுப்புகள் நடந்து கொண்டிருந்தபோது திடீரென புகையுடன் தீ கிளம்பியதால் அனைவரும் மாடிக்கு ஓடினோம். அங்கிருந்த குழந்தைகளை பத்திரமாக மீட்டு வெளியேற்றினோம். இதனால் மாடிப்படிகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இருப்பினும் யாரும் காயமடையவில்லை என்றார்.
தீவிபத்தைத் தொடர்ந்து அனைவரும் வகுப்பறைகளை விட்டு வெளியேற்றி மைதானத்திற்குக் கொண்டு வரப்பட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக