சனி, 13 பிப்ரவரி, 2010

முஸ்லிம் வழக்கறிஞர் ஷாஹித் அஸ்மி சுட்டு கொலை: கொன்றது ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகளா?


புதுடெல்லி:மாலேகான் மற்றும் மும்பை ரெயில் குண்டுவெடிப்புகளில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் வாடிவரும் ஏறத்தாழ 50 முஸ்லிம் இளைஞர்களுக்காக வாதாடிய எதிர்தரப்பு வழக்கறிஞர் ஷாஹித் ஆஸ்மி 11/02/2010 ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கபடுகிறது.

இச்சம்பவம் மும்பை குர்லா கிழக்கு பகுதியில் டாக்ஸிமேன் காலனியின் அருகில் அமைந்துள்ள அவருடைய சேம்பரில் வைத்து நடந்தது. 5 அடையாளம் தெரியாத நபர்கள் கிளையண்டுகள் என்றுக் கூறிக்கொண்டு அவருடைய சேம்பரில் நுழைந்து 5 ரவுண்டுகள் சுட்டதில் நிலைகுலைந்த ஆஸ்மியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபொழுது இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

32 வயதாகும் ஷாஹித் ஆஸ்மி மஹாராஷ்ட்ரா மாநிலம் ஜம்மியத்துல் உலமா சார்பாக மாலேகான் மற்றும் மும்பை ரெயில் குண்டுவெடிப்புகளில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் வாடும் கிட்டதட்ட 50 முஸ்லிம் இளைஞர்களுக்காக வாதாடிவரும் வழக்கறிஞராவார்.

ஆஸ்மியின் நெருங்கிய நண்பரான முஸ்லிம் அரசியல் கவுன்சிலின் தலைவர் டாக்டர் தஸ்லீம் ரஹ்மானி தெரிவிக்கையில், "ஆஸ்மி 16 வயதாக இருக்கும்பொழுது தடா ச்சட்டத்தில் கைதுச் செய்யப்பட்டு சிறைச் சென்றவர். பின்னர் அவர் குற்றமற்றவர் எனக்கூறி விடுதலைச் செய்யப்பட்டார். அவர் நெஞ்சுறுதியும், அறிவுத்திறனும், திறமையும், தாழ்மையும் கொண்டவர். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக குறைந்த கட்டணத்திலேயே வழக்குகளில் வாதாடுவார். இவரது கொலைக்குப்பின்னால் எவர்கள் நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை சதிச்செய்து தீவிரவாத வழக்குகளில் சம்பந்தப்படுத்தினார்களோ அவர்களாகத்தான் இருப்பார்கள்" என்றார்.

மலேகானைச் சார்ந்த உம்மித் டாட் காம் என்ற இணையதள இதழ் தெரிவிக்கையில், "ஷாஹித் ஆஸ்மி கடந்த 7/11 மற்றும் இதர தீவிரவாத வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களின் வழக்குகளை கையாண்டபொழுதுதான் வெளியில் தெரியவந்தார். மஹாராஷ்ட்ரா மாநில அரசுக் கொண்டுவந்த MCOCA தீவிரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான ஜம்மியத்துல் உலமா சார்பாக ஆஸ்மி தாக்கல் செய்த மனு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பிற்காக கிடப்பில் உள்ளது." என்று கூறுகிறது.

கருத்துகள் இல்லை: