வியாழன், 11 பிப்ரவரி, 2010

பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் முற்றிலும் போலியானது: டெல்லி இமாம்

ஆஸம்கர்:பட்லா ஹவுஸ் என்கவுண்டர் முற்றிலும் போலியானது என டெல்லி ஜும்ஆ மஸ்ஜித் ஷாஹி இமாம் அஹ்மது புஹாரி தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களோ அல்லது ஆஸம்கர் வாசிகளோ தீவிரவாதிகளல்ல என்றும் அரசு அவர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

காங்கிரஸின் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முஸ்லிம்களை வேட்டையாடுகிறது எனவும் இமாம் அஹ்மத் புஹாரி தெரிவித்தார். 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற பட்லா ஹவுஸ் போலி என்கவுண்டரில் தொடர்புடையதாக குற்றஞ்சாட்டி கைதுச் செய்யப்பட்டுள்ள ஷஹ்ஷாதின் உறவினர்களை சந்திப்பதற்காக அவருடைய வீட்டிற்கு சென்றிருந்தார் இமாம்.

"முஸ்லிம்களை முட்டாள்களாக்க வேண்டிதான் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் ஆஸம்கருக்கு சுற்றுப்பயணம் மேற்க்கொண்டார். இங்கே கூறிய விஷயங்களை டெல்லிக்கு திரும்பிச் செல்லும்போது வேறுவிதமாக கூறியுள்ளார். ஒன்றுக் கொன்றுத் தொடர்பில்லாத அறிக்கைகளை வெளியிடுவதை நிறுத்திவிட்டு நீதியான ஒரு விசாரணைக்கு உத்தரவிடாமலிருப்பது ஏன்?" என இமாம் கேள்வியெழுப்பினார்.

பொய் வழக்குகளை சுமத்தி சிறையிலடைக்கப்பட்ட குற்றமற்ற முஸ்லிம் இளைஞர்களை விடுதலைச் செய்யாமல் ஆஸம்கரில் அவர்களின் குடும்பத்தினரை காண்பதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வந்தால் அதனை கடுமையாக எதிர்ப்போம் என இமாம தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: