செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

சமாதானத்திற்கான நோபல் பெற்ற ஒபாமா அணு ஆயுதத்திற்காக ஒதுக்கிய தொகை புஷ் ஒதுக்கியதை விட அதிகம்

வாஷிங்டன்:சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா சில மாதங்களுக்குள்ளாகவே சொந்த நாட்டின் அணுசக்தி திட்டத்திற்கு பட்ஜெட்டில் பெருந்தொகையை ஒதுக்கியுள்ளார்.

இன்று அமெரிக்க காங்கிரசில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் அமெரிக்க அணு சக்தி திட்டத்திற்கான புனர் நிர்மாணம் மற்றும் வளர்ச்சிக்கு 700 கோடி டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது.

போர் ஆர்வலராக கருதப்படும் ஜார்ஜ் புஷ் ஆட்சியின் கடைசி வருடத்தில் அணு ஆயுத திட்டங்களுக்கு 670 கோடி டாலரைத்தான் ஒதுக்கினார். மாற்றத்திற்காக வாக்களியுங்கள் என்று கூறித்தான் ஒபாமா அதிகாரத்திற்கு வந்தார். அடுத்த 5 வருடங்களில் அணு ஆயுத துறையில் 500 கோடி டாலர் செலவழிக்கவும் ஒபாமா அரசிற்கு திட்டமுண்டு.

அணு ஆயுத ஒழிப்பைக் குறித்து வாய்மூடாமல் பேசித்தான் ஒபாமா தனது அரசின் ஒரு ஆண்டை பூர்த்திச் செய்தார். நாட்டின் பாதுகாப்பை உறுதிச் செய்வதுடன், அணுசக்தித் துறையில் பணியாற்றிவரும் விஞ்ஞானிகளுக்கும், ஆராய்ச்சிக்கும் ஏற்பட்டுள்ள வளர்ச்சியின்மை போக்குவதுதான் இத்திட்டத்தின் பிரதான நோக்கமென அமெரிக்க துணை அதிபர் ஜோசஃப் பைடன் ஒபாமா அரசின் நடவடிக்கையை நியாயப்படுத்துகிறார்.

கருத்துகள் இல்லை: