அந்த நாள் நினைவிருக்கிறதா? 1983 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே தினத்தில் அஸ்ஸாம் மாநிலம்
கவுஹாத்தியிலிருந்து சுமார் 40 கி.மீ. தூரத்திலுள்ள நெல்லி எனும் கிராமத்தில் 1983, பிப்ரவரி 18 அன்று திட்டமிட்ட இனப்படுகொலை நடைபெற்றது. 2,191 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். 370 குழந்தைகள் அநாதையாக்கப்பட்டனர். 16 கிராமங்களிலிருந்த முஸ்லிம்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன. அந்த நினைவலைகள் தொடர்பாக முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஹர்ஷ் மந்தர்(குஜராத் இனப்படுகொலையை கண்டித்து பதவி விலகிய இவர் தற்ப்பொழுது சமூக சேவையாற்றி வருகிறார்) தி ஹிந்து நாளிதழில் கட்டுரையொன்றை இங்கு பிரசுரிக்கிறோம்.

ஹர்ஷ் மந்தர் :
"நவம்பர் 26, 2008. அன்று தான் இந்தியாவின் வர்த்தக தலைநகரம் மும்பை மீது மூர்க்கத்தனமான அதி பயங்கர தீவிரவாத தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. அன்றைய தினம் நான் வெகு தூரத்தில் அஸ்ஸாமிலுள்ள நெல்லியில் இருந்தேன்.
1983இல் மறக்க முடியாத படுபயங்கர கூட்டுக் கொலைகள் நடைபெற்றதே அதே நெல்லியில் தான். 25 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் கடைக்கோடியிலுள்ள இக்கிராமத்தில் 1983ல் வன்முறையில் தப்பிப் பிழைத்தவர்கள் தங்களது உணர்வுகளை பகிர்ந்து கொள்வதற்காக என்னை அழைத்திருந்தனர்.
மிதமான வெயிலடிக்கும் முன்பனிக் கால நேரத்தில் வெட்ட வெளியில் நாங்கள் கூடியிருந்தோம். கிழக்கு வங்காள முஸ்லிம்கள் என எளிதில் அடையாளம் கூறக்கூடிய முதியவர்கள் கட்டம் போட்ட லுங்கி அணிந்து தாடியுடன் அங்கு குழுமினர். பெண்கள் மற்றும் இளவயது ஆண்கள் அஸ்ஸாமிய கிராமத் தவர்போல் ஆடையணிந்து காணப்பட்டனர். ஆரம்ப நல விசாரிப்பு, வரவேற்பிற்குப் பின் எங்களுக்கு சிவப்பு எம்ப் ராய்டரி செய்யப்பட்ட வெள்ளை சால்வைகளை தங்களின் பாரம்பரியப்படி பரிசளித்தனர்.
கடந்த கால வலி மிகுந்த வேதனைகளை மீண்டும் கிளறுவது, மக்கள் அவற்றை மறந்து சகஜமாகி விட்ட சூழ்நிலையில் அறிவுடமை ஆகாது என என்னுடன் பயணித்த உயர் அதிகாரிகள் நாசூக்காக எடுத்துரைத்தனர். அப்படியானால் எமது பயணம் எதற்காக? புதைக் கப்பட்ட நினைவுகளை மீண்டும் அசை போடத்தானா? இதே அறிவுரையை அதிகார வர்க்கத்தில் இல்லாத தன்னார்வ சுயமுன்னேற்ற குழுக்களைச் சார்ந்த நமது நண்பர்களும் கூட நம்மிடம் சுட்டிக்காட்டினர். மேலும், இப்பயணம் மறந்து விட்ட பல வேதனைகளை கிளறு வதாகக் கூட அமையும் என்றும் குறிப் பிட்டனர். ஆனால் என்னை அழைத்தவர்கள் அவர்கள் தரப்பு வாதம் கேட்கப்பட வேண்டும் என விரும்பியதால் என்னால் மறுக்க இயலவில்லை.
கவுஹாத்தியிலிருந்து சுமார் 40 கி.மீ. தூரத்திலுள்ள நெல்லி எனும் கிராமத்தில் 1983, பிப்ரவரி 18 அன்று திட்டமிட்ட இனப்படுகொலை நடைபெற்றது. வங்காள தேசத்திலிருந்து வந்து குடியேறிய 2,191 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். 370 குழந்தைகள் அநாதையாக்கப்பட்டனர். 16 கிராமங்களிலிருந்த முஸ்லிம்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன. அதில் தப்பிப் பிழைத்தவர்கள் 25 வருடங்களுக்குப் பிறகு, ஒவ்வொருவராக பேச ஆரம்பித்தனர். அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள், சமூக சேவையாளர்கள் என அதனைக் கேட்ட ஒவ்வொருவரும் அதிர்ச்சியடைந்தோம். வெட்கப்பட்டோம். மிக சமீப காலம் வரையிலும் கூட, மிஞ்சியிருந்த அவர்கள் அனுபவித்த பகிஷ்காரங்கள் பற்றியெல்லாம் எடுத்துரைத்தனர். முறையான கவனமில்லா மல் சிகிச்சையளிக்கப்பட்ட காயங்களினால் பலரின் தேகம் அடைந்த மாற்றங்களை காண முடிந்தது. சிலர் தங்களின் ஆடைகளை விலக்கி தலைமுறைகளுக்கு முன் ஏற்பட்ட காயங்களின் தழும்புகளை காண்பித்தனர். முகத்தில் படுகோரமான வெட்டுக்காய தழும்புடன் காணப்பட்ட ஹாஜர் காத்தூன் என்பவர், எங்களின் முன் சம்மணமிட்டு அமர்ந்து தனது மடியை சுட்டிக்காட்டி உடைந்த சன்னமான குரலில் கூறினார். "இங்கு தான் எனது குழந்தையை படுக்க வைத்திருந்தேன். பாவிகள் அவனை பிளந்து இரு கூறுகளாக்கி விட்டனர்".
அலெக்ஜான் பீவி சற்று அமைதியாக காணப்பட்டார். அவரது தேகம் மாற்றமடைந்திருந்தது. அவர், உடற்கூறு சமநிலையை இழந்திருந்தார். அவரது குடும்ப உறுப்பினர்கள் 11 பேர் அன்றய வன்முறையில் பலியாகி இருந்தனர். வன்முறையாளர்கள் எப்படி தனது குடும்ப உறுப்பினர்களை கொன்றார்கள். எவ்வாறு அவர்களிடமிருந்து தான் தப்பித்தார். எங்கு மறைந்திருந்தார் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டு காயப்படுத்தப்பட்டார் என ஒவ்வொன்றையும் எங்கள் முன் அபிநயத்துக் காட்டினார். "இவ்வுலகில் எனக்கென்று யாரும் இல்லை" அழுத்த மான அமைதியுடன் கூறி முடித்தார்.
முப்பதுகளில் இருந்த முஹம்மது முனீருத்தீன் எங்கள் முன் வந்த போது கட்டுக்கடங்காத கண்ணீருடன் காணப்பட்டார். "என் கண் முன்னே எனது சகோதர சகோதரிகள் வெட்டிக் கொல்லப்பட்டனர். அப்பொழுது நான் 7 வயது சிறுவனாக இருந்தேன். என் பெற்றோர் வெட்டிக் கொலை செய்யப்படுவதை என் கண்ணால் கண்டேன். வேறொரு பெண்ணின் கையிலிருந்து குழந்தை பறிக்கப்பட்டு நெருப்பில் வீசி எறியப் படுவதையும், அத்தாய் கொடூரமாக கொல்லப்படுவதையும் கண்டேன். அன்றய தினம் முழுவதும் நான் பயத்தால் அழுதபடியே இருந்தேன். அன்று மாலை சுகுழு படையினரால் காப்பாற்றப்பட்டேன். பிறகு எங்களது வீடு தீயிட்டு கொளுத்தப்பட்டதை அறிந்தேன். எங்களது அரிசிக்கடை உள்ளிட்ட அனைத்து உடமைகளும் தீக்கிரையாக்கப்பட்டு விட்டன. நாகாவ் னிலிருந்த எனது மூத்த சகோதரன் என்னை எடுத்து வளர்த்தார். ஆனாலும் நான் தனிமைப்படுத்தப்பட்டதாக உணருகிறேன்" - இதேபோல் மற்றும் பலரும் தாங்கள் தனிமைப்படுத்தப் பட்டதாக குறிப்பிட்டனர்.
நூர் நஹார் பேகம் கலவரம் நடந்த அந்நாளில் பத்து வயதுடையவராக இருந்தார். தப்பி ஓட முற்பட்டு தாக்கப்பட்டு கடுமையான காயமடைந்தார். இரண்டு மாத காலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருந்தார். அவரது தாயும், நான்கு பச்சிளம் பாலகர்களும் கொலை செய்யப்பட்டனர். "நாம் இன்று நிற்கும் இதே இடத்தில் தான் அவர்கள் கண்டதுண்டமாக வெட்டியெறிப்பட்டனர். கடந்த 25 வருடங்களாக எனக்கு மன அமைதி இல்லை. எனது மன உளைச்சலுக்கு தீர்வாக நீதி கிடைக்க வேண்டும். இது மிகப்பெரும் குற்றம் எனவே நீதி அவசியம் தேவை. நான் தனிமைப் படுத்தப்பட்டதாக உணர்கிறேன். எனது குடும்பத்தினரை நான் இழந்து விட்டேன்".
பாபுல் அஹமது. ஒரு டெய்லரான இவர் தனது பெற்றோரை இழந்த அன்று வெறும் இரண்டே வயதான குழந்தை. தனது தாத்தா - பாட்டியினரால் வளர்க்கப் பட்டார். இவரது சகோதரிகள் ளுழுளு கிராமத்தில் வளர்கின்றனர். இதே போல் பலரின் சரிதங்கள். மடைதிறந்த வெள்ளம் போல் கரை புரண்டு வரும் கவலைகள். வெகுகால மாக புறக்கணிக்கப்பட்ட, மறுக்கப்பட்ட அவர்களின் உரிமைகள். மறக்கப்பட்ட நெல்லியின் 1983 கலவரங்கள், இனப்படு கொலைகளுக்கான, ஒரு முன்னோட்ட மாகவே மாறிவிட்டது. இதனைத் தொடர்ந்தே டெல்லியில் 1984லும், பாகல்பூரில் 1989லும், மும்பையில் 1993லும் மாநிலம் தழுவிய இனப்படுகொலைகள் நடைபெற்றன. இதனுடைய உச்சகட்ட நிகழ்வுதான் 2002 குஜராத்.
இதனைத் தொடர்ந்து, பல குழு மோதல்கள் தொடராக அஸ்ஸாமில் நிகழ்ந்தேறியது. ஒடுக்கப்பட்ட சமூகங்கள், மற்ற குழுக்களுடன் அடிக்கடி மோதத் துவங்கின. 1993 இல் போடோ போராளிகளுக்கும் அரசுக்குமிடையே இடைத்தரகர்களின் முயற்சியால் ஓர் ஒப்பந்தம் உருவானது. அதன்படி போடோ இன மக்கள் அதிகமாக உள்ள இடங் களில் சுயாட்சி உறுதிசெய்யப்பட்டது. இதன் மூலம் இனப்படுகொலைக்கு அரசே அடிகோலியது போல் ஆகியது. வங்க தேசத்திலிருந்து வந்து குடியேறி இருந்த முஸ்லிம்கள் துரத்தியடிக்கப் பட்டனர். 1993 முழுக்க இப்பயங்கரம் கொலைகளும், தாக்குதல்களும், தீவைப்பு களுமாக நீடித்தது. மேலும் 1996 இல் சன்ந்தல் மற்றும் முன்டா பழங்குடியினருக்காக (ஆதிவாசிகளுக்காக) மீண்டும் இப்பயங்கரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் 15 வருடங்களுக்கும் மேலாக தத்தமது வீடுகளுக்கு திரும்ப முடியாமல் பீதியில் நிவாரண முகாம்களிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
நெருப்பு மூட்ட பயன்படும் சருகுகளைப் போல, அஸ்ஸாம் இன்றும் இன துவேஷத்தின் பிடியில் சிக்கியிருக்கிறது. அதனால் தான் சமீபத்திய பீகார் தொழிலாளர்கள் மீதான தாக்குதல் கவுகாத்தியில் ஜார்க்கண்ட் கிளர்ச்சியாளர்களுடன், வெடி வைப்புகள், பெங்காலி முஸ்லிம்கள் மீதான போடோக் களின் தாக்குதல் என்று இன்றுவரை இப்பட்டியல் நீளுகிறது. இதனால் அனேகர் இறந்தும், ஆயிரக்கணக்கானோர் அகதி முகாம்களில் வாழ்வதுமாக நிலைமை நீடிக்கிறது.
அரசு நெல்லியில் உயிரிழந்தோருக்கான நிவாரணத் தொகையாக ரூ 5,000 வீதம் வழங்கியது. அதே சமயம் இதற்கு ஒரு வருடத்திற்கு பிறகு நடைபெற்ற சீக்கியர் படுகொலைக்காக ரூ.7 இலட்சத்தை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. நெல்லி படுகொலைக்காக 688 குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் 310 வழக்குகளுக்கு குற்றப்பத் திரிக்கை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 378 வழக்குகள், போதிய ஆதாரம் காவல் துறையினரால் சமர்ப்பிக்கப்படாததைத் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டன. ஆனால் குற்றப்பத்திரிக்கை வழங்கப் பட்ட 310 வழக்குகளும் கூட அஸ்ஸாம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அஸ்ஸாம் கன பரிஷத் அமைச்சரவையினால் விலக்கிக் கொள்ளப்பட்டு விட்டன. இதன் மூலம் இப்பயங்கரவாத இனச் சுத்திகரிப்பில் ஈடுபட்ட ஒருவர் கூட சட்டத்தின் விசாரணையை எதிர் கொள்ளாமல் சுதந்திரப் பறவையாகி விட்ட கொடுமை அரங்கேறியுள்ளது.
2008 மும்பை கலவரம் புரிந்து கொள்ளக் கூடிய பொது மக்களால் அதீத கோபத்துடன் கவனிக்கப்படு கிறது. ஒரு பலவீன மான நிர்வாகத் தால் ஒவ்வொரு வரும் பாதுகாப் பற்ற நிலையை உணருகின்றனர். ஆனால் அரசு சாதாரண குடி மக்களை பாதுகாக்கவும், நீதியை நிலைநாட்ட வும் அனேக சந்தர்ப்பங் களில் தவறிவிடுகின்றது. மும்பை தாஜ் ஹோட்டலில் பலியான உயிர்கள் பெரு மதியானவை. அதேசமயம் நெல்லி போன்ற தொலை தூர குக்கிராமங்களில் வாழ்பவர்களும், டெல்லி, பாகல்பூர், குஜராத் மற்றும் மாலே காவ்ன்ஐ சேர்ந்தவர்களும் கூட அவ்வாறு தான். நம் முடைய கவனமும், பரிவும், கவலையும் அனைத்து துயரங்களையும் சமமாக பாவிக்கும் ஒரு நாள் வந்தே தீர வேண்டும்.நாம் ஒன்றிணைந்து பரிவுடன் ஒற்றுமையாக இருப்பதே நமது பாதுகாப் பிற்கு உகந்த வழியாகும்".
தமிழில் - அபூஹாஜர்
நன்றி - ஹிந்து நாளிதழ்,tmmk.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக