இரானின் மனித உரிமைகளின் நிலை குறித்த ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகளின் மீளாய்வின் போது வெளியாகியுள்ள விமர்சனங்களை இரான் நிராகரித்துள்ளது. ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இடம்பெற்ற விவாதம் ஒன்றின் போது கருத்து தெரிவித்த பிரான்ஸ் தூதுவர், இரானில் கடந்த வருடம் நடைபெற்ற தேர்தல்களின் பின்னர் அங்கு ஏற்பட்டுள்ள இரத்தக் கறைபடிந்த ஒடுக்குமுறைகளுக்கு இரான் அதிகாரிகளே பொறுப்பு எனக்கூறினார். இந்த நிலைமைகள் குறித்து இரான் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்த முன்வரவேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.
இதன்போது கருத்து தெரிவித்த மனித உரிமைகள் பேரவைக்கான இரானிய தூதுவர், சர்வதேச உடன்பாடுகளுடன் இரான் இசைவான போக்கையே கொண்டுள்ளதாகவும், மனித உரிமைகளை பாதுகாப்பது தொடர்பில் நேர்மையான அணுகு முறைகளையே இதுநாள் வரை கைக்கொள்வதாகவும் சுட்டிக்காட்டினார். உலகம் முழுவது மனித வுரிமை மீறல்களை நடத்திவரும் இவர்கள் மனித வுரிமை பற்றி பேச எந்த அருகதையும் இல்லாதவர்கள் என்றும் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக