புதன், 10 பிப்ரவரி, 2010

பள்ளிசெல்லும் முஸ்லிம் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!


அபூஸாலிஹ்

பள்ளிசெல்லும் முஸ்லிம் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
தேசிய சராசரியை விஞ்சியது முஸ்லிம் பெண் குழந்தைகளின் கல்வி முன்னேற்றம்!
பெண்களின் முன்னேற்றமே, நாட் டின் நிலையான முன்னேற்றத்துக்கு அடித்தளம் அமைப்பதாகும். நாட்டின் இரண்டாவது மிகப்பெரும் சமூகமான முஸ்லிம் சமூகம் கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக சூழ்நிலையில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாக சச்சார் அறிக்கை அபாய எச்சரிக்கை செய்தது நினைவிருக்கலாம். இந்நிலையில் National University of Education Planing and Administration (NUEPA) அமைப்பின் வருடாந்திர அறிக்கை பல முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள 633 மாவட்டங்களிலும் உள்ள 12 லட்சத்து 29 ஆயிரம் அரசு அங் கீகாரம் பெற்ற பள்ளிக்கூடங்களில் மேற் கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி 2008லி2009 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி ஆரம்ப கல்வி நிலையில் ஒரு கோடியே 48லட்சத்து 30 ஆயிரம் முஸ்லிம் குழந்தைகள் படித்து வருவதாக அறிக்கை குறிப்பிடுகிறது. ஆரம்பகல்வியில் முஸ்லிம் குழந்தை களின் சேர்க்கை கணக்கு மொத்த எண்ணிக்கையில் 11.03 சதவீதம் ஆகும்.
நடுநிலை வகுப்புகளில் 40 லட்சத்து 87 ஆயிரம் முஸ்லிம் குழந்தைகளின் சேர்க்கை விகிதமாக உள்ளது. இது மொத்தத்தில் 9.13 சதவீதமாகும்.
2006லிலிருந்து 2007லிம் ஆண்டு வரை ஆரம்பக்கல்வியில் சேர்ந்த முஸ்லிம் மாணவமணிகளின் எண்ணிக்கை 9.39 சதவீதமாக இருந்தது. அதுவே 2007லி2008 ஆம் ஆண்டு 10.49 ஆக உயர்ந்தது. 2008லி2009 ஆண்டில் 11.03 ஆக உயர்ந்திருக்கிறது.
நடுநிலைப்பள்ளி சேர்க்கை விகிதத்தில் 2006லி2007ல் 7.52 சதவீதமாக இருந்த முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை 2007லி2008ல் ஆம் ஆண்டில் 8.54 சதவீதமாகவும், 2008லி2009ஆம் ஆண்டு 9.13 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.
ஆரம்ப கல்வி வகுப்புகளில் மொத்த முஸ்லிம் குழந்தைகளின் சேர்க்கையில் குறிப்பாக முஸ்லிம் பெண் குழந்தைகளின் சேர்க்கையில் 48.93 சதவீதமாக உயர்ந்துள்ளது.(கடந்த ஆண்டு 48.67) இது தேசிய விகிதாச்சார விகிதமான 48.38 விகிதத்தை விட அதிகமாகும்.
கடந்த ஆண்டு முஸ்லிம் பெண் குழந்தைகளின் சேர்க்கை 49.49. சதவீதமாகும், இது தேசிய விகிதச்சாரமான 47.58விட அதிகமாகும்.
கடந்த ஆண்டு ஆரம்ப நிலைக் கல்வியில் 87 ஆயிரத்து 690 பள்ளிகளில் முஸ்லிம் மாணவர்களின் சேர்க்கை 25 சதவீதத்திற்கு மேல் வளர்ச்சி விகிதத்தை எட்டியது.
ஜம்முலிகாஷ்மீரில் 12 மாவட்டங்களில் 90 சதவீதம் முஸ்லிம் மாணவமணி களின் வருகை உள்ளது. ஜம்முலி காஷ்மீரில் 15 மாவட்டங்களிலும் பீகார், மேற்கு வங்காளம், ஆந்திரா, லட்சத்தீவுகள் மற்றும் கேரளா மாநிலங் களில் தலா ஒரு மாவட்டங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான அளவு முஸ்லிம் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தில் 5 மாவட்டங் களில் முஸ்லிம் மாணவர்களின் வருகை 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது, இது ஒரு வியப்புக்குரிய விஷயம் எனினும் அதே அஸ்ஸாம் மாநிலத்திலும், கேரளா, உத்தர்கண்ட் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் ஆரம்பநிலை மற்றும் நடுநிலை வகுப்புகளில் பள்ளிச்சேர்க்கை திருப்திகரமான அளவில் இல்லை என்ற அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அருணாச்சலப்பிரதேசம், பீகார், சத்தீஸ் கர், கோவா, குஜராத், ஹரியானா, ஜார்கண்ட், மத்தியப்பிரதேசம், மேகாலயா, மிஜேராம், நாகலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் முஸ்லிம்களின் மக்கள் தொகை விகி தாச்சாரத்திற்கேற்ப ஆரம்பநிலை மற்றும் நடுநிலைக் கல்விக்கூடங்களில் முஸ்லிம் மாணவர்களின் சேர்க்கை அமையவில்லை என அதிர்ச்சி அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது

கருத்துகள் இல்லை: