சனி, 20 பிப்ரவரி, 2010

நவீன ஏவுகணை தாங்கிய கப்பலை அறிமுகப்படுத்தியது ஈரான்

தெஹ்ரான்:ஈரான் தனது நாட்டு பாதுகாப்பிற்காக தயாரித்த முதல் ஏவுகணை கப்பலை அறிமுகப்படுத்தியது.

ஈரான் ஆன்மீகத்தலைவர் ஆயத்துல்லாஹ் அலி காம்னியின் முன்னிலையில் ஜம்ரான் என்ற பெயரிலான நவீன தொழில்நுட்பத்தில் தயாரான கப்பலை நாட்டுக்குஅர்ப்பணிக்கப்பட்டது. 30 நாட்டிக்கல் (கடல் நீட்டலளவை அலகு) மைல் வேகத்தில் செல்லும் இக்கப்பலில் நவீன ரேடாரும், விமான எதிர்ப்பு கருவியும் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 140 பேர் பயணம் செய்யலாம். பீரங்கிகள், ஆயுத பாதுகாப்பு சாலைகள் ஆகியன இதில் உள்ளன.

ஏவுகணைகளை ஏவவும், தடுக்கவும் இதனால் இயலும். இதன் நீளம் 94 மீட்டர் ஆகும். தடைகளுக்கு மத்தியிலும் புதியதொரு திட்டத்தை செயல்படுத்த முடிந்ததற்கு காரணம் இந்நாட்டின் பேரார்வத்தை காண்பிப்பதாக காமினி தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ்

கருத்துகள் இல்லை: