செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

ஈரான் இஸ்லாமிய புரட்சியின் 31-வது நினைவு தினம்: ஈரானில் கொண்டாட்டம்

டெஹ்ரான்:1979 ஆம் ஆண்டு பிப்ரவரி'1 ஆம் நாள் ஈரானின் 2500 ஆண்டுகால மன்னர் ஆட்சி வரலாறு மாற்றியமைக்கப்பட்ட நாள்.
ஆம் அந்த நாளில்தான் நாடு கடத்தப்பட்டு 15 ஆண்டுகளுக்கு பின்னால் இஸ்லாமியப் புரட்சியின் ஸ்தாபகரும்,தலைவருமான இமாம் கொமைனி அவர்கள் மெஹ்ராபாத் சர்வதேச விமானநிலையத்தில் வந்திறங்குகிறார். லட்சக்கணக்கான மக்கள் வெள்ளம் அவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்தது. அவர் ஈரானை வந்தடைந்து 10-வது நாள் ஈரான் இஸ்லாமிய குடியரசாக பிரகடனப்படுத்தப்பட்டது.

சர்வாதிகாரி ஷா பஹ்லவியின் அரியணைத் தூக்கியெறியப்பட்டு இஸ்லாமிய விடியலுக்கான துவக்கம் ஆரம்பமான 1979 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 முதல் 10 வரையிலான நாட்களை நினைவுக் கூறும் விதமாக ஈரானில் சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முதல் நாளான இன்று ஈரானின் அதிபர் அஹ்மத் நிஜாதும் கேபினட் அமைச்சர்களும் இமாம் கொமைனியின் சிந்தனைகளை புதுப்பிக்கும் வண்ணம் உறுதிமொழி எடுத்துக் கொள்வார்கள். இதில் இமாம் கொமைனியின் பேரர் ஹஸன் கொமைனியும் கலந்துக் கொள்கிறார்.

ஈரானின் வெளிநாட்டு ஊடக விவகாரத்திற்கான கலாச்சாரத்துறை அமைச்சக பொது இயக்குநர் முஹம்மது ஜவாது அகஜாரி நேற்றுக் கூறுகையில் இந்த விழா நிகழ்ச்சிகளை பற்றிய செய்திகளை சேகரிக்க 120 வெளிநாட்டு மீடியாக்களிலிருந்து 226 ரிப்போர்டர்கள் வருகைத் தருவார்கள் என்றார். இதுவரை 100 க்கு மேற்பட்ட வெளிநாட்டு ரிப்போர்டர்கள் விசாவிற்காக மனு செய்துள்ளார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
செய்தி:presstv

கருத்துகள் இல்லை: