செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

கத்தரில் கருத்து சுதந்திரத்திற்கு தடையில்லை: டாக்டர் யூசுஃப் அல் கர்தாவி


தோஹா:1961 ஆம் ஆண்டு முதல் கத்தரில் வசித்துவரும் எனக்கு கத்தர் அரசு அதிகாரிகளிடமிருந்து எந்தவொரு தடையும் ஏற்பட்டதில்லை என பிரபல இஸ்லாமிய அறிஞர் டாக்டர் யூசுஃப் அல் கர்தாவி தெரிவித்தார்.

கர்தாவி தனது சீடர்களின் சங்கம நிகழ்ச்சியின் இறுதியில் உரையாற்றும் பொழுது இதனை தெரிவித்தார்.மேலும் அவர் கூறியதாவது, "தீவிரவாதிகளுக்கு நான் ஊக்கமளிக்கிறேன் என்றுக்கூறி கருப்பட்டியலில் எனது பெயரை உட்படுத்த முயலும் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுத்தது கத்தரின் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானியாவார். வகுப்புகள், ஜும்ஆ குத்பா, ரேடியோ-டெலிவிஷன் உரைகள், அல்ஜஸீராவில் நேர்முகம் உள்ளிட்ட வழிகளின் மூலம் நான் ஏற்றுக்கொண்ட கருத்துக்களை வெளிப்படையாக கூறுவதற்கு கத்தர் அரசு ஒரு தடையையும் இதுவரை ஏற்படுத்தவில்லை.

நான் எகிப்திலிருந்தால் எனது சகசெயல்வீரர்களைப் போல் சிறையிலிருந்திருப்பேன். தோஹாவில் இஸ்ரேலின் வியாபாரமையம் திறந்தது, கத்தரில் அமெரிக்க ராணுவ மையத்தின் ஆதிக்கம், அரசியல் சட்டத்தில் சில பிரிவுகள் குறித்து எனது கடுமையான எதிர்ப்பை வெளிப்படையாகவே கூறியுள்ளேன்" என்றும் அவர் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: