வாஷிங்டன்:அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகளில் தேவாலாய வட்டாரங்களில்(parish) பணியாற்றிய 70 அயர்லாந்து நாட்டு பாதிரியார்கள் சிறுவர்களை பாலியல் ரீதியான தொந்தரவுக்கு ஆளாக்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனை அமெரிக்காவில் போஸ்டன் தேவாவாலய வட்டாரமும் உறுதிப்படுத்துகிறது. மறைந்த பாதிரியார் ப்ரண்டன் ஸ்மித்தும் இத்தகைய பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளதாக அந்த தேவாவாலய வட்டாரம் கூறுகிறது.
www.bishopaccoutanability.org என்ற இணையதளம் பாலியல் பலாத்காரங்களில் ஈடுபட்ட 70 பாதிரியார்களின் பெயர்களை வெளியிட்டபிறகுதான் போஸ்டன் தேவாலாய வட்டாரமும் அப்பெயர்களை வெளியிட்டுள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்ட பாதிரியார்களை ஐரிஷ் சர்ச் அதிகாரிகள் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பிவிட்டனர் என பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவானவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். பாதிரியார்களின் பாலியல் பலாத்காரங்களை குறித்து விசாரித்த மர்ஃபி அறிக்கையில் சர்ச் அதிகாரிகள் சிறுவர்களை பாலியல் பலாத்காரத்தில் ஆட்படுத்தும் பாதிரியார்களின் தகவல்களை மூடிமறைத்ததாக கூறியுள்ளது. இதனை அங்கீகரிக்க டப்ளின் பிஷப் தயாரில்லை.
மர்ஃபி அறிக்கையை அங்கீகரிக்காமலிருப்பது சர்ச்சில் சிறுவர்களை பாதுகாப்பாக படிக்க சேர்ப்பதை தடைச்செய்யும் என பாதிக்கப்பட்டவர்களை ஆதரிக்கும் அமைப்பு ஒன்று கூறுகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக