திங்கள், 8 பிப்ரவரி, 2010

இஸ்ரேலிய போர்க்கப்பல்கள் மத்திய ஆசிய கடற்பகுதிக்கு சென்றுள்ளதாக தகவல்

கெய்ரோ:போர் பீதி நிலைநிற்கவே இஸ்ரேலின் போர்க்கப்பல்கள் மத்திய ஆசிய கடற்பகுதிக்கு சென்றுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

பாரசீக வளைகுடா பகுதிக்கு இஸ்ரேலிய கப்பற்படை இரண்டு ஏவுகணைகள் தாங்கிய கப்பல்களை அனுப்பியுள்ளதாக எகிப்து மாரிடைம் அதிகாரிகளை மேற்க்கோள்காட்டி யதியத் அஹ்ரநோத்(Yediot Ahronot ) என்ற பத்திரிகை கூறுகிறது.

இரண்டு இஸ்ரேலிய போர்க் கப்பல்கள் சூயஸ் கால்வாய் வழியாக செங்கடல் பகுதிக்கு சென்றுள்ளது. கப்பல் பாதுகாப்பாக செல்வதற்கு எகிப்து கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. 4 நாட்களுக்குள் இக்கப்பல்கள் பாரசீக வளைகுடா பகுதியை இவை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஒருவருடமாக பாதுகாப்பு காரணத்தை முன்னிட்டு இஸ்ரேலிய போர்க்கப்பல்கள் எகிப்திய கடற் எல்லையை போக்குவரத்திற்காக பயன்படுத்தியதில்லை.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: