ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

ஹமாஸ் தலைவர் படுகொலையின் பின்ணணியில் மொஸாத் இருப்பது உறுதியானால்; இஸ்ரேல் பிரதமருக்கு சர்வதேச அரெஸ்ட் வாரண்ட்: துபாய் காவல்துறை

துபாய் :சமீபத்தில் துபாயில் ஹமாஸ் தலைவர்களில் ஒருவரான மஹ்மூத் அல் மப்ஹுஹ் படுகொலை செய்யப்பட்டதில் இஸ்ரேலின் பங்கு உறுதிப்படுத்தப்பட்டால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹீக்கு சர்வதேச அரெஸ்ட் வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று துபாய் காவல் துறை தலைவர் எச்சரித்துள்ளார்.

ஹமாஸ் தலைவர் மஹ்மூத் கடந்த ஜனவரி 20 அன்று துபாய் ஹோட்டலில் வைத்து கொலை செய்யப்பட்டார். இதை செய்தது இஸ்ரேல் தான் என்று ஹமாஸ் ஆணித்தரமாக சொல்லி வருகிறது.

இது பற்றி கருத்து தெரிவிக்க மறுக்கும் இஸ்ரேல் மஹ்மூத் துபாயில் சில ஈரான் தலைவர்களை சந்திக்க வந்ததாகவும் அவரின் வேறு எதிரிகள் இக்கொலையில் பின்னால் இருக்க வாய்ப்புண்டு என்றும் தெரிவித்தது.

இச்சூழலில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த துபாய் காவல் துறை தலைவர் ஜெனரல் தஹி கஃபன் தமீம் "இக்கொலையின் பின்னால் இருப்பது மொஸாத் என்பது உறுதிப்படுத்தப்பட்டால் இஸ்ரேலிய பிரதமருக்கு சர்வதேச அரெஸ்ட் வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தார். ஏனென்றால் மொஸாத் பிரதமரின் ஒப்புதல் இல்லாமல் செய்திருக்க முடியாது" என்றும் அவர் விளக்கினார்.

மேலும் "மஹ்மூத் ஈரானிய அதிகாரிகளை சந்திக்க விரும்பினால் அவர் எளிதாக ஈரானுக்கோ அல்லது சிரியாவிற்கோ சென்று சந்தித்திருக்க முடியும். அவர் துபாய்க்கு ஹமாஸின் அலுவலாக வரவில்லை என்றும் எதிர்காலத்தில் ஹமாஸ் மற்றும் மொஸாத்தும் தங்கள் அரசியல் எதிரிகளை பழிவாங்கும் தளமாக துபாயை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்" என்றும் கூறினார்.
source:inneram

கருத்துகள் இல்லை: