புதன், 3 பிப்ரவரி, 2010

எல்லைகளை கடந்த நட்பு: இந்திய- பாகிஸ்தான் மாணவர்கள் இணைந்து உருவாக்கிய விண்வெளியூர்தி

புதுடெல்லி:பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு சஞ்சரிக்கும் மாதிரி விண்வெளியூர்தி ஒன்றை இந்தியா பாகிஸ்தான் மாணவர்கள் ஒன்றிணைந்து தயாரித்துள்ளனர்.

நேசனல் ஏரோநாடிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேசன்(நாஸா) நடத்திய போட்டியொன்றில் பங்கேற்ற இந்தியா பாகிஸ்தானைச் சார்ந்த மாணவர்கள் இணைந்து மற்றநாடுகளின் மாணவர்களை தோற்கடித்தனர்.

லாகூரைச் சார்ந்த 15 மாணவர்களும், டெல்லி அமிட்டி இண்டர்நேசனல் ஸ்கூலைச்சார்ந்த 12 மாணவர்களும்தான் ஒன்றிணைந்து இந்த விண்வெளியூர்தி ஒன்றை தயார் செய்துள்ளனர்.

இத்திட்டத்தின் படி 2300 பணியாளர்களும், 6500 பயணிகளுமடங்கிய மொத்தம் 8800 பேர் இந்த ஊர்தியில் பயணம்செய்து செவ்வாய் கிரகத்திற்கு செல்லலாம்.
மாணவர்கள் நேற்று அமெரிக்க தூதர் திமோத்தி ஜெ ரோமரை சந்தித்தனர். புவியியல் ரீதியாக எல்லைகளிலிருந்தாலும், இரு நாடுகளின் மாணவர்கள் கற்பனையில் விண்வெளியூர்தியை உருவாக்கியது நமது எதிர்கால கலாச்சாரம் என்றும் அவர்களை பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: