பாகிஸ்தான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாகிஸ்தான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 1 செப்டம்பர், 2010

பாக்.பெருவெள்ளம்:முஸ்லிம் நாடுகள் 100 கோடி டாலர் நிதியுதவி

இஸ்லாமாபாத்,செப்.1:பாகிஸ்தானில் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்பிற்கு நிவாரண நிதியாக 100 கோடி டாலர் அளிக்க முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பான ஆர்கனைசேசன் ஆஃப் இஸ்லாமிக் கான்ஃப்ரன்ஸ்(O.I.C) முடிவுச் செய்துள்ளது. இவ்வமைப்பின் தலைவர் இக்மாலுதீன் இஹ்ஸா நோக்லூ இதனை தெரிவித்துள்ளார்.

பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை காண வருகை புரிந்திருந்தார் அவர். நேற்று முன்தினம் தெற்கு சிந்துவில் சில பகுதிகள் வெள்ளத்தில் சிக்கித் தவித்தன.இது நிலைமை மேலும் மோசமடையச் செய்தது.இந்த சூழலில்தான் முஸ்லிம் உலகின் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வமைப்பில் உறுப்பு நாடுகளான சவூதி அரேபியா, குவைத், துருக்கி, கத்தர், ஐக்கிய அரபு அமீரகம் ஆகியன வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட பாதிப்பிற்கு உதவ நடத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலிருந்து கிடைக்கும் பணம் நிதியுதவியாக வழங்கப்படும் என இஹ்ஸா நோக்லூ தெரிவித்தார்.

இதற்கிடையே வெள்ளப்பெருக்கு நிவாரண உதவிகள் அரசு சாரா அமைப்புகள் மூலம் வழங்குவதை பாகிஸ்தான் பிரதமர் யூசுஃப் ரஸா கிலானி விமர்சித்துள்ளார். இத்தகைய உதவிகளை அரசுசாரா அமைப்புகள் தவறாக பயன்படுத்தும் என கிலானி சுட்டிக்காட்டினார்.

இரண்டுகோடி மக்களை பாதித்த வெள்ளப்பெருக்கில் 2000 பேர் மரணித்தனர். ஏறத்தாழ ஒருமாதம் ஆகியும் கூட முகாம்களில் துயருறும் மக்களுக்கு இதுவரை நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை. முகாமில் நோய் பரவுவதாக துயர்துடைப்பு அமைப்புகள் கூறுகின்றன.

இதற்கிடையேதான் சிந்துமாகாணத்தில் சுஜவான் பிரதேசமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

புதன், 23 ஜூன், 2010

இந்தியா பாகிஸ்தான் கைகள் இணைந்தால்

ஒரு வெறுப்பில் பிரிந்த இருவர் மீண்டும் இணைவதற்கான விருப்பு ஏற்பட வாய்ப்பே இல்லாமலிருப்பது இந்தியா பாகிஸ்தான் உறவில்தான். மூன்று போர்கள், எல்லைகளில் படை குவிப்பு, தூதரகங்களை மூடிக் கொள்ளுதல், பரஸ்பரம் குறை கூறிக் கொள்ளுதல், அமெரிக்க அண்ணாச்சியிடம் மாறி மாறி குற்றம் சாட்டு தல், சார்க் மாநாட்டை ஒத்திப் போடுதல், இதன் காரணங்க ளால் உள்நாட்டில் மதநல்லிணக் கத்திற்கு அச்சுறுத்தலும், சமூக பதற்றமும் உண்டாகுதல் என்று இந்த ‘வெறுப்பு’ ஏற்படுத்திய விளைவுகள் அதி பயங்கரமானவை.

இவை அனைத்தையும் கடந்து சமரசத்திற்கான ஏற்பாடுகளும் தடைபடாமல் நிற்கின்றன. ஆனால் பிரிந்த கைகள் இணைவதற்கும், இணைந்த கைகள் பிரிவதற்கும் காஷ்மீரும் அதன் பின்னணிகளும் தொடர காரணமாகவே இருந்து வருகின்றன, காஷ்மீரையும் தீவிர வாதத்தையும் எந்த அரசியல் ஆதாயத்திற்காகவும் பயன்படுத்திக் கொ ள்ளும் அவசியமற்றவர் இந் தியப் பிரதமர் மன்மோகன்சிங். ஆளும் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன்சிங்கும் பெரும்பான்மை இனத்தை மத அரசியலுக்கு இழுக்கவும், மத வாத வாக்குவங்கியால் அரசி யல் நடத்தவும் தேவையற்ற, சிறு பான்மை சமூகத்தை சார்ந்த தலைவர்கள் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

முதலாம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுஅமைந்த பொழுதே பாகிஸ் தானுடன் நட்புறவுக்கு அடியெடுத்து வைக்கப்பட்டது.பாகிஸ்தானும் தன் பங்கிற்கு இறங்கி வந்தது.

காஷ்மீர் நீங்கலாக, ஊடுறுவுதல், தீவிரவாதம், வர்த்தகம், நீர்பங்கீடு, போக்குவரத்து பற்றி பேசலாம் என இந்தியா அழைத்தது. காஷ்மீர் கதையை முதலில் பேசலாம், மற்ற வை அப்புறம்தான் என பாகிஸ் தான் இழுத்தடித்தது.

இந்த அரசியல் இழுபறிகள் இழுத்தடித்துக் கொண்டிருந்த போது தான் அமைதிப் பேச்சுகளை முறிக்கும் வகையில் மும்பை மாந கரத்தின் மீது பயங்கரவாத தாக் குதல்கள் நடந்தன. பேச்சுவார்த் தையின் அச்சு முறிந்து போக இந்த தாக்குதல்கள் கச்சிதமாக அமைந்தன. இதில் நிச்சயமாக ஓராண்டு ஓடிவிட்டது.

2010ல் மீண்டும் உறவாட பிரதமர் மன்மோகன்சிங் ஆர்வப்பட்டார். அதற்காக 2010, மே 25ஆம் தேதி பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா ஜீலானிக்கு நட்பின் அடிப்படையில் அல்போன்சா மாம்பழங்களை அனுப்பி வைத்தார். ஒருநாள் முன்னர், மே 24 ஆம் தேதி அவர் கூறிய ஒரு செய்தியில், இரண்டு நாடுகளும் சந்திக்கும் பெரிய சவாலாக இருப்பது ‘நம்பிக்கை குறைபாடு’ தான் என்றார். அல்போன்சா மாம்பழம் நம்பிக்கையின் வெளிப்பாடாக இருக்க வாழ்த்துகள். பாகிஸ்தானுடனும் காஷ்மீரின் பல்வேறு குழுக்களுடனும் இந்தியா பேச்சு வார்த்தை நடத்தப் தயாராக உள்ளதாக கூறினார். ஆனால் அவரது சமிக்ஞை காஷ்மீரில் பெரிய அளவு நம்பிக்கையைப் பெற வில்லை.

புத்துறவை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் ஜூன் 7&ம் நாள் பிரதமர் காஷ்மீர் பயணம் மேற்கொண்டார். காஷ்மீரில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் விவசாய பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதோடு அங்குள்ள அரசியல் தலைவர்க ளையும் பிரதமர் சந்திப்பது பயணத்தின் நோக்கம். எனினும் பிரிவினைவாதிகள், மிதவாதிகள் மற்றும் தீவிர நோக்காளர்கள் ஆகியவர்களுடன் சந்திக்கவில்லை. பிரதமரின் முக்கிய நோக்கம், காஷ்மீர் முன்னேற்றத்தில் காங் கிரஸ் கட்சியின் செயல் பாட்டினை உறுதி செய்வதாக இருந்தது.

உண்மையில், காஷ்மீரில் அசுத் தமாக்கப்பட்டுவிட்ட தால் ஏரி’ மத்திய அரசின் 356 கோடி ரூபாய் நிதியுதவியில் சுத்தம் செய்யப்பட்டது, சோனியா காந் தியின் தலையீட்டால் இந்த நிதி ஒதுக்கப்பட்டது. காஷ்மீரின் குஜ் ஜார் தேஷ் அறக்கட்டளை உண்டாக்கிய பழங்குடி கலாச்சார மையத்தை திறந்து வைப்பதற்கு மே 29 ஆம் தேதி சோனியா காஷ்மீர் சென்றிருந்தார்.

இதனிடையே, ஹுரியத் மாநாட் டுக் கட்சியின் இரண்டு பிரிவும் மன்மோகன் சிங்கின் பேச்சு வார்த்தைக்கான அழைப்பை நிராகரித்துவிட்டன. ஆனால் பா கிஸ்தான் வசமுள்ள காஷ்மீர் பகுதியில் செயல்படும் தீவிரவாத குழுக்கள், முக்கூட்டு (இந்தியா & பாகிஸ்தான் & பிரி வினை குழுக்கள்) பேச்சுவார் த்தைக்கு ஒப்புக் கொண்டனர். அதற்கு அவர்கள் சில நிபந்தனை கள் வைத்தனர். 1. காஷ்மீர் சர்ச் சைக்குரிய பகுதி என்று இந்தியா ஒப்புக்கொள்ள வேண்டும். 2. ஆயுத படைகளின் சிறப்பு பாதுகாப்புச் சட்டம் (கிதிஷிறிகி), பொது பாதுகாப்புச் சட்டம் ஆகிய சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். 3. அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும். 4. ஜம்மு & காஷ்மீரில் மனித உரிமைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை முடிவுக்கு கொ ண்டு வர வேண்டும். என்பது போன்றவை. “தன்னம்பிக்கையுடன் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்ட £ல் தீவிரவாத செயலுடைய வர்கள் தாங்களாகவே கட்டுபட்டு விடுவர்” என்றார் ஐக்கிய ஜிஹாத் குழுவின் தொடர்பாளர் சதகத் ஹுசைன். மன்மோகன்சிங் வழங் கும் யோசனை, "புதிய பாத்திரத்தில் பழைய பதார்த்தம்" தான் புதிதாக ஒன்றுமில்லை என்றார் மீர்வாய்ஸ் உமர் பாரூக். இவர் ஹுரியத் மாநாட்டுக் கட்சியின் மிதவாத பிரிவின் தலைவர். 2006 ஆம் ஆண்டு இவர் பிரதிநிதிகள் குழு ஒன்றினை வழிநடத்தி சென்று பிரதமரை சந்தித்தார். பின்னாளில், ‘காஷ்மீர் பிரச்சனையை தீர்ப்பதில் மத்திய அரசு நேர்மையாக நடந்து கொள்வதில்லை’ என்று குற்றம் சாட்டினார்.

மீண்டும் 2009 ஆம் ஆண்டு, அமைதியான சாதுர்யமான வழி கள் காஷ்மீர் விசயத்தில் கடைபிடிக் கப்படும் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்த பின்னர் மீர்வாய்ஸ் அமைப்பினருடன் பேச்சுவார்த்தைகள் தொடரப்பட் டன. ஆனால் ‘பஸல் ஹக்கீ ஹுரை ஸி’ என்ற மிதவாதி தாக்கப்பட்டதை தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் முறிந்து போனது. ப.சிதம்பரத்தின் அமைதி வழியிலான தீர்வை ஒரு சதி (மாவுர்சாயு) என்றார் கடின போக்குக் கொண்ட சயீத் அலிஷா ஜீலானி. காஷ்மீர் குறித்த மன்மோகன்சிங்கின் நிலை பாட்டையும் சதி என்றுதான் ஜீலானி கூறியிருந்தார். ஜம்மு காஷ்மீரை சர்ச்சைக்குரிய பகுதி என்று இந்தியா ஒப்புக் கொள்ளாதவரை எந்த ஒரு பேச்சுவார்த்தையும் ஏற்றுக் கொள்ளப்படாது. சர்வதேச சமூகத்தை ஏமாற்றவே இந்த வாய் ப்புகள் பயன்படுத்தப்படும் என்றும் ஜீலானி குற்றம் சாட்டினார்.

ஆனால் மன்மோகன்சிங் காஷ்மீர் செல்வதற்கு முன்னரே சில நம்பிக் கையூட்டும் நடவடிக்கைகளை மத் திய அரசும் காஷ்மீர் மாநில அர சும் எடுத்திருந்தன. மே 21 ஆம் தேதி மீர்வாய்ஸ்க்கு, அவரது தந் தை தீவிரவாதிகளின் குண்டுக்கு பலி யானதன் 20-ஆம் ஆண்டு நினைவுகூரும் பேரணி என்று ஸ்ரீ நகரில் நடத்திக் கொள்ள அரசு அனுமதி வழங்கியது. மேலு ம் பிரிவினைவாதியான நயீம் கான் சிறையிலிருந்து விடுவிக் கப்பட்டார். இந்த நடவடிக்கைகள் ஹுரைஸி தாக்கப்பட்டதில் கடும் கோபத்தில் இருக்கும் மிதவாதிகளை சமாதானப்படுத்தும் நோக்கத்தில் எடுக்கப்பட்டவையே.

பாகிஸ்தானுடன், எல்லைக் கட் டுப்பாட்டுக் கோடு, எல்லையில் ராணுவக் குறைப்பை கட்டுக்குள் வைப்பது நீர் ஆதாரம் மற்றும் சுற்றுலா ஆகிய துறையில் இணைந்து செயலாற்ற இந்தியாவும் விருப்ப மில்லாமல் இல்லை. ஆனாலும் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரி க்காவும் நேட்டோவும் வெளியேற உள்ளதான நிலைப்பாட்டை பொ றுத்து காஷ்மீர் தொடர்பான எதிர்கால பேச்சுவார்த்தைகளில் நீதமானதொரு நடையை தொ டர இந்தியா விரும்புகிறது. ஆப் கானிஸ்தானில் பாகிஸ்தான் ராஜ தந்திர செயல்களை பொறுத் தே காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா வின் நடவடிக்கையும் அமையும் என்பதில் சந்தேகமில்லை. ஆப்கா னிஸ்தானின் மக்கள் நலத் திட்டங்களில் இந்தியா குறிப்பிடத்தக்க அளவில் முதலீடு செய்திருக்கிறது. காஷ்மீர் உள்ளிட்ட பாகிஸ்தானுடனான அனைத்து பிரச்சனைகளையும் பேசித் தீர்ப்ப தில் இந்தியா&பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் எதிர் காலத் திற்கு நலனாகும். அது மட்டு மின்றி காஷ்மீர் மக்களின் பொ து வாழ்க்கையிலும் அமைதி உண்டாகும். அதே நேரம், நேட்டோ மற்றும் அமெரிக்கப் படைகள் ஆப்கனை விட்டு வெளியேறினால் மிச்சசொச்ச ஜிகாதிகளை காஷ் மீரை நோக்கி பாகிஸ்தான் திருப்பும் என்ற அச்சமும் இந்தியாவிற்கு உள்ளது.


நன்றி... தி வீக் (ஜூன் 13)

தமிழில்: அத்தேஷ்

செவ்வாய், 15 ஜூன், 2010

இந்தியா எரிசக்தி தேவைகளை நழுவவிட்டதா?

ஈரானிடமிருந்து பாகிஸ்தான் வழியாகக் குழாய் மூலம் எரிவாயு பெறும் திட்டத்தில் இந்தியா காட்டிய தயக்கங்கள் காரணமாக தனது எரிசக்தி பாதுகாப்புத் தேவைகளை எட்டும் ஒரு நல்ல சந்தர்ப்பத்தை இந்தியா இழந்துவிட்டதாகக் கூறமுடியுமா?

ஈரானிடமிருந்து எரிவாயுவை குழாய் மூலம் பாகிஸ்தானுக்கு வழங்கும் ஒரு திட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஈரானிய அமைச்சர்கள் தற்போது கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த திட்டம் முதலில் அறிவிக்கப்பட்டபோது, ஈரான் பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய மூன்று நாடுகளிடையே எரிவாயு குழாய்திட்டமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த திட்டத்தின் மூலம் இந்தியா தனது எரிசக்தி தேவைகளுக்கான எரிவாயுவை ஈரானிலிருந்து பாகிஸ்தான் வழியாக பெற்றுக்கொள்ள முடியும் என்றிருந்தது.

"ஈரானிடமிருந்து பாகிஸ்தான் வழியாகக் குழாய் மூலம் எரிவாயு பெறும் திட்டத்தில் இந்தியா காட்டிய தயக்கங்கள் காரணமாக தனது எரிசக்தி பாதுகாப்புத் தேவைகளை எட்டும் ஒரு நல்ல சந்தர்ப்பத்தை இந்தியா இழந்துவிட்டதாகக் கூறமுடியாது. ஏனென்றால் பின்னர்கூட இந்தியா மீண்டும் இந்த ஒப்பந்தத்தை எட்ட முடியும்." என்று மத்தியக் கிழக்கு மற்றும் மேற்காசிய வல்லுநர் பேராசிரியர் பி.ஆர்.குமாரஸ்வாமி கூறுகிறார்.

மேலும் அவர் கூறும்போது "இந்தியா,ஈரான் ஆகிய இருநாடுகளும் இதற்கான ஒப்பந்தத்தை 2005ம் ஆண்டிலேயே அறிவித்திருந்தாலும், எரிவாயு விலை குறித்த கருத்து வேறுபாடுகள் மற்றும் எரிவாயு குழாய் பாகிஸ்தான் ஊடாக வரும் நிலையில், அதற்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் போன்ற பிரச்சினைகளால் இந்த ஒப்பந்தத்தை முழுமைபடுத்துவதில் தாமதம் ஏற்பட்டது" என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

ஈரானுடன் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடக்கூடாது என்று இந்தியா மீது அமெரிக்கா செலுத்திய நிர்ப்பந்தங்களும் இதற்கு ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது என்று கூறும் குமாரஸ்வாமி, ஆனால் இதுவே ஒரு பெரிய காரணமல்ல என்று அவர் தெரிவிக்கிறார்.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்த குழாய் பாதைக்கு பாகிஸ்தானால் பாதுகாப்பு கொடுக்கமுடியாத நிலை இருப்பதாக பல மட்டங்களில் கூறப்பட்டு வந்தது.

"விலையைப் பற்றியும், பாதுகாப்பு குறித்தும் ஒரு முடிவு ஏற்படாத நிலையில், இந்த ஒப்பந்தம் ஏற்படுவது சாத்தியமல்ல" என்று குமாரஸ்வாமி கூறுகிறார்.

BBC

புதன், 3 பிப்ரவரி, 2010

எல்லைகளை கடந்த நட்பு: இந்திய- பாகிஸ்தான் மாணவர்கள் இணைந்து உருவாக்கிய விண்வெளியூர்தி

புதுடெல்லி:பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு சஞ்சரிக்கும் மாதிரி விண்வெளியூர்தி ஒன்றை இந்தியா பாகிஸ்தான் மாணவர்கள் ஒன்றிணைந்து தயாரித்துள்ளனர்.

நேசனல் ஏரோநாடிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேசன்(நாஸா) நடத்திய போட்டியொன்றில் பங்கேற்ற இந்தியா பாகிஸ்தானைச் சார்ந்த மாணவர்கள் இணைந்து மற்றநாடுகளின் மாணவர்களை தோற்கடித்தனர்.

லாகூரைச் சார்ந்த 15 மாணவர்களும், டெல்லி அமிட்டி இண்டர்நேசனல் ஸ்கூலைச்சார்ந்த 12 மாணவர்களும்தான் ஒன்றிணைந்து இந்த விண்வெளியூர்தி ஒன்றை தயார் செய்துள்ளனர்.

இத்திட்டத்தின் படி 2300 பணியாளர்களும், 6500 பயணிகளுமடங்கிய மொத்தம் 8800 பேர் இந்த ஊர்தியில் பயணம்செய்து செவ்வாய் கிரகத்திற்கு செல்லலாம்.
மாணவர்கள் நேற்று அமெரிக்க தூதர் திமோத்தி ஜெ ரோமரை சந்தித்தனர். புவியியல் ரீதியாக எல்லைகளிலிருந்தாலும், இரு நாடுகளின் மாணவர்கள் கற்பனையில் விண்வெளியூர்தியை உருவாக்கியது நமது எதிர்கால கலாச்சாரம் என்றும் அவர்களை பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

புதன், 26 ஆகஸ்ட், 2009

ஜின்னா மதச்சார்பற்றவர், ஒருங்கிணைந்த இந்தியாவையே விரும்பினார் ஜின்னா- சுதர்சன்

Sudarshan
இந்தூர்: பாகிஸ்தான் உருவாகக் காரணமாக இருந்தாலும் முகமது அலி ஜின்னா மதச்சார்பற்றவராகவே இருந்தார் என்று ஆர்எஸ்எஸ் முன்னாள் தலைவர் சுதர்சன் கூறியுள்ளார்.

ஜின்னாவை புகழ்ந்து எழுதியதற்காக பாஜகவிலிருந்து மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் பாஜகவின் முக்கிய அங்கமான ஆர்எஸ்எஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் சுதர்சன் ஜின்னாவை ஆதரித்துப் பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், ஒரு கட்டத்தில் லோகமான்ய திலகருடன் சேர்ந்து ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்க முகம்மத் அலி ஜின்னா பாடுபட்டார்.

ஜின்னாவுக்கு பல்வேறு முகங்கள் உண்டு. வரலாற்றை சரியாக படித்தால் அவர் திலகருடன் சேர்ந்து ஒருங்கிணைந்த இந்தியா உருவாக பாடுபட்டது நன்றாகத் தெரியும்.

மகாத்மா காந்தி வலியுறுத்தியிருந்தால் பாகிஸ்தான் பிரிவினையைக்கூட ஜின்னா கைவிட்டிருப்பார். அப்படிப்பட்ட மிகச் சிறந்த மதச்சார்பற்றவர் தான் ஜின்னா.

துருக்கியில் காலிப் ஆட்சியை, பிரிட்டிஷார் கலைத்ததைக் கண்டித்து அலி சகோதரர்கள் இந்தியாவில் கிலாஃபத் இயக்கத்தைத் தோற்றுவித்தனர். பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராட கிலாஃபத் இயக்கத்துக்கு ஒத்துழைப்பு அளிப்பதன் மூலம் இந்திய சுதந்திர போராட்டத்தில் இந்து-முஸ்லிம்களின் ஒற்றுமை வலுவடையும் என காந்திஜி கருதினார்.

ஆனால் இதற்கு ஜின்னா எதிர்ப்புத் தெரிவித்தார். கிலாபத் இயக்கத்தில் தலையிட வேண்டாம், அரசியலில் மதத்தை கொண்டு வர வேண்டாம் என்றார். அவரது வாதத்தை காந்தி உள்பட யாரும் ஏற்கவில்லை. இது அவருக்கு மிகுந்த மன வேதனையை அளித்தது. இதனால் அவர் காங்கிரஸிலிருந்து அவர் வெளியேறினார்.

காங்கிரஸை விட்டு விலகியதும் இங்கிலாந்து சென்ற அவர் 1927ம் ஆண்டுதான் மீண்டும் இந்தியா திரும்பினார்.

பிரிவினை வேண்டாம் என காந்தி திட்டவட்டமாக ஜின்னாவிடம் வலியுறுத்தியிருந்தால் நிச்சயம் பிரிவினை வந்திருக்காது. ஆனால் காந்தி அதைச் செய்யவில்லை.

பாகிஸ்தான் குறித்து அத்வானி கருத்து தெரிவித்தபோது அதற்கு ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. ஆனால் அத்வானி உரிய விளக்கத்தை அளித்ததால் அதைத் நான் ஏற்றுக் கொண்டேன்.

அதே நேரத்தில் பாஜகவிலிருந்து ஜஸ்வந்த் சிங் வெளியேற்றப்பட்டது அந்தக் கட்சியின் உள் விவகாரம். அதில் நான் கருத்து சொல்ல ஏதுமில்லை என்றார் சுதர்சன்.

சுதர்சன் அளித்த பேட்டி குறித்து கருத்துத் தெரிவித்த ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ், பிரிவினைவாத வரலாறு குறித்து மட்டுமே சுதர்சன் பேசியுள்ளார் என்று கூவிட்டு நிறுத்திவிட்டார்.

திங்கள், 17 ஆகஸ்ட், 2009

இந்தியா&பாகிஸ்தான் பிரிவினைக்கு முகமது அலி ஜின்னா காரணம் அல்ல--பா.ஜனதா தலைவர் ஜஸ்வந்த் சிங்!


இந்தியாவை ஆட்சி செய்த வெள்ளையர்கள் சுதந்திரம் அளித்தபோது இந்தியா-பாகிஸ்தான் என்று 2 நாடுகளாக உருவானது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் தனிநாடாக உருவாகவும், நாட்டின் பிரிவினைக்கு அவரே காரணமாக இருந்தார் என்று முஸ்லீக் தலைவர் முகமது அலி ஜின்னாவைக் கூறுவார்கள். இது குறித்து, பா.ஜனதா கட்சியின் முன்னாள் வெளியுறவு மந்திரியும், மூத்த தலைவர்களில் ஒருவருமான ஜஸ்வந்த் சிங் ஜின்னா-இந்தியா: பார்ட்டிசன், இன்டிபென்டன்ஸ் என்ற 674 பக்க சுயசரிதையை எழுதி இருக்கிறார். இந்த புத்தகத்தின் வெளியீடு இன்று (திங்கட்கிழமை) டெல்லியில் நடக்கிறது.
இந்த புத்தகத்தில், ஜஸ்வந்த் சிங், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு முகமது அலி ஜின்னா காரணம் அல்ல என்று அவரை புகழ்ந்தும் நேருவே இந்தியா உடைய காரணமாக இருந்தார் என குற்றம் சாட்டியும் உள்ளார்.நேரு விரும்பிய இந்தியாசர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த புத்தகம் குறித்து, ஜஸ்வந்த் சிங் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு, உயர் அதிகாரம் கொண்ட மத்திய ஆட்சி ஒருங்கிணைந்த இந்தியாவில் அமையவேண்டும் என்று விரும்பினார். அதுதான் அவர் விரும்பிய இந்தியாவாகவும் இருந்தது. ஆனால் முகமது அலி ஜின்னா, கூட்டு அதிகார ஆட்சி முறையை விரும்பினார். அதை மகாத்மா காந்தியும் கூட ஏற்றுக் கொண்டார். ஆனால் நேருவுக்கு இதில் உடன்பாடு கிடையாது. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நடக்கும் 1947ம் ஆண்டு வரை நேரு இதே நிலையைத்தான் கொண்டிருந்தார்.அப்போது காங்கிரஸ் மட்டும் கூட்டு அதிகாரப் பகிர்வு கொண்ட ஆட்சி முறைக்கு ஒப்புக் கொண்டிருந்தால் ஒருங்கிணைந்த இந்தியா என்ற நிலையை நாம் அடைந்திருப்போம். ஆனால் ஜவகர்லால் நேரு அதிக அதிகாரம் கொண்ட மத்திய ஆட்சி முறையை விரும்பியதால்தான் பிரச்சினையே ஏற்பட்டது.நேருவுக்கு பதிலாக, மகாத்மா காந்தி, ராஜாஜி அல்லது ஆசாத் ஆகியோர் இது குறித்து இறுதி முடிவை எடுத்திருந்தால் நிச்சயம் ஒருங்கிணைந்த இந்தியாவை நாம் அடைந்திருப்போம் என்றே நான் நம்புகிறேன்.வெறுப்பு கிடையாதுமுகமது அலி ஜின்னாவுக்கு இந்துக்கள் மீது வெறுப்பு கிடையாது. அப்படி நினைப்பது முற்றிலும் தவறானது. அவருக்கு காங்கிரசின் கொள்கைகளில்தான் கருத்து வேறுபாடு இருந்தது. மற்றபடி இந்துக்கள் மீது அவர் வெறுப்பு கொண்டிருக்கவில்லை.எனவே, பிரிவினையை ஏற்படுத்திய வில்லனாக முகமது அலி ஜின்னாவை கருதக் கூடாது. தவிர, பிரிவினைக்கான முதன்மையான காரண கர்த்தாவும் அவர் அல்ல.மேற்கண்டவாறு ஜஸ்வந்த் சிங் கூறினார்.
இந்தியா&பாகிஸ்தான் பிரிவினைக்கு ஜவகர்லால் நேருவும், காங்கிரசும்தான் முக்கிய காரணம் என்று ஜஸ்வந்த் சிங் கூறியிருப்பதால் புதிய அரசியல் சர்ச்சை உருவாகி இருக்கிறது.

நன்றி;தினத்தந்தி