தற்போதைய தடை நாளை முடிவடையக் கூடிய சூழலிதான் இத்தடை நீட்டிப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சட்டப்படி தடைக்கு அங்கீகாரம் கிடைப்பதற்கு உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான ட்ரிபியூனல் (தீர்ப்பாயம்) ஒரு மாதத்திற்குள் அரசு நியமிக்க வேண்டும். ட்ரிபியூனல் 6 மாதத்திற்குள் தீர்மானம் எடுக்கவும் வேண்டும்.
உத்தரபிரதேசம்,மத்திய பிரதேசம், பீஹார், டெல்லி, கேரள போன்ற மாநிலங்களில் சிமியின் செயல்பாடுகள் நடைபெறுவதாக மத்திய அரசு கூறுகிறது. 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்தான் தீவிரவாதச் செயல்பாடுகளில் ஈடுபடுவதாக கூறி பா.ஜ.க அரசு சிமியை தடைச்செய்தது.
பின்னர் 2003 ஆம் ஆண்டும், 2006 ஆம் ஆண்டிலும் இத்தடை நீட்டிக்கப்பட்டது.சிமியின் மீதான தடையை கடைசியாக நீட்டியது கடந்த 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதமாகும்.
இத்தடைக்கெதிராக சிமி(SIMI) சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டதை தொடர்ந்து நீதிபதி கீதா மிட்டல் தலைமையிலான ட்ரிபியூனல் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று சிமிக்கு எதிரான உளவுத்துறை மற்றும் சிமி வழக்கறிஞர்களின் வாதங்களை விசாரித்தது.இந்த ட்ரிபியூனல் தமிழகத்திற்கும் வருகை புரிந்தது.சென்னையில் ராஜீவ் காந்தி படுகொலையை விசாரிக்க அமைக்கப்பட்ட மல்லிகை அரசு மாளிகையில் நடை பெற்ற விசாரணையில் நாமும் கலந்து கொண்டோம்.சிமி சார்பில் இளம் வக்கீல்கள் தங்கள் வாதங்களை திறமையாக எடுத்து வைத்தனர்.சிமிக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாத மத்திய உளவுத்துறையும் மாநில காவல்துறையும் பொய் ஆவனங்களை சமர்ப்பித்து நீதிபதியிடம் கண்டனம் பெற்றனர்.
இறுதியாக பல்வேறு மாநிலங்களிலும் விசாரித்த ட்ரிபியூனல் சிமிக்கெதிராக மதிய மாநில அரசுகள் எவ்வித உறுதியான ஆதரங்களையும் அளிக்காததால் சிமி மீதான தடையை நீக்குவதாக அறிவித்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் அரசு ட்ரிபியூனல் சிமிக்கெதிராக தடையை நீக்கியதிற்கெதிராக சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனு தாக்கல் செய்தது.தடையை நீக்கியதற்கான அறிவிப்பு அதிகரபூர்வமாக சிமி நிர்வாகிகளிடம் தெரிவிக்கப்பட்டு அதற்கான ஆவணங்கள் அவர்களுக்கு கிடைப்பதற்கு முன்பாகவே சட்ட விரோதமாக மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை ஏற்று சட்ட விரோதமாக தடையை உறுதி செய்து தனது முஸ்லிம் வெறுப்புணர்வை மீண்டும் வெளிப்படுத்தியது உச்ச நீதிமன்றம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக