இதையடுத்து ஷாருக்கானுக்கு சிவசேனா மிரட்டல் விடுத்தது. ஷாருக்கானுக்கு தேசப்பற்று இல்லையென்றும் அவரை தேசதுரோகி என்றும். பாகிஸ்தான் வீரர்களை ஆதரித்துப்பேசிய தற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிவசேனா எச்சரித்தது. ஷாருக்கான் படங்களை மும்பையில் திரையிட விட மாட்டோம் என்றும் எச்சரித்தது. ஆனால் ஷாருக்கான் திட்ட வட்டமாக மன்னிப்பு கேட்க மறுத்து விட்டார். இந்த நிலையில் ஷாருக்கான் இன்று மும்பை திரும்பினார். சிவசேனா போராட்டத்தை எதிர்க்கொள்ள தயார் என்று அவர் அறிவித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் ஷாருக்கானுக்கு இந்தி நடிகர், நடிகைகள் தங்களது ஒட்டு மொத்த ஆதரவை தெரிவித்துள்ளனர். “ஷாருக்கான் கருத்தில் எந்த தவறும் இல்லை” என்று நடிகர், நடிகைகள் கூறி உள்ளனர்.
நடிகை காஜோல், ஷாருக்கானுக்கு ஆதரவு தெரிவித்ததோடு மட்டுமின்றி சிவசேனா கட்சியையும் கடுமையாக சாடி உள்ளார் சிவசேனா கட்சி நமது நாட்டின் ஜோக்கர் கட்சியாக மாறி விட்டது. அவர்கள் எப்போதும் வெறுப்பை வெளியிட்டு வருகிறார்கள். சிவசேனாவை குரங்குகளின் கூட்டம் என்று தான் சொல்ல வேண்டும். அந்த குரங்கு கூட்டத்தால் எங்களை எதுவும் செய்ய இயலாது. தேர்தலில் தோல்வியை சந்தித்த பிறகும் அவர்கள் பாடம் கற்றுக் கொள்ள வில்லை. இப்படிப்பட்ட அசிங்கம் பிடித்த அரசியலால் தான் நாம் உலகில் பின்னணியில் இருக்கிறோம். நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். அதன் மூலம் தான் நாம் ஜனநாயக சக்தியை உலகுக்கு காட்ட முடியும் என்று நடிகை காஜோல் கூறியுள்ளார்.
நடிகர் சல்மான்கான் கூறுகையில், நாம் அரசியலையும், கிரிக்கெட் விளையாட்டையும் கலக்கக்கூடாது. திரைப்படம் என்பது ஒவ் வொருவருக்கும் உரியது. நாங்கள் தெருவில் இறங்கி எந்த கட்சிக்கும் ஓட்டுப்போடுங்கள், ஓட்டுப் போடாதீர்கள் என்று சொல்வது இல்லை. அதை சிவசேனா தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார். மேலும் இந்தி திரைப்பட நடிகர்கள் அபிஷேக் பச்சன், நானா படேகர் உள்பட பல நடிகர், நடிகைகள் ஷாருக்கானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக