ஞாயிறு, 27 ஜூன், 2010

ஃபலஸ்தீன்:ஆர்ப்பாட்டத்தில் இஸ்ரேல் துப்பாக்கிச்சூடு, ஒருவர் படுகாயம்

மத்திய மேற்குகரையின் பில்இன் கிராமத்தில் கட்டப்பட்டிருக்கும் தடுப்புச் சுவற்றை எதிர்த்து நடத்தப்பட்ட அமைதியான ஆர்ப்பாட்டத்தில் இஸ்ரேலிய வீரர்கள் சுட்டதில் ஒரு பாலஸ்தீனர் படுகாயமடைந்தார்.

கிழக்கு குத்ஸிலுள்ள அல் புஸ்தான் பகுதியில் தொல்பொருள் பூங்காவிற்கு வழியமைக்கும் பணியில் 22 பாலஸ்தீனர்களின் வீடுகள் இடிக்கப்படும் திட்டத்தை எதிர்த்து வெள்ளியன்று தொழுகைக்குப் பின் ஃபலஸ்தீன போராளிகளும் இஸ்ரேலிய இடது சாரி போராளிகளும் அல்குத்ஸ்(ஜெருசலம்) நகராட்சியை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.

பாலஸ்தீன கிராமங்களுக்கும் அவர்களின் நிலங்களுக்கும் இடையே உள்ள பிரிவினை சுவற்றை நோக்கி அணிவகுப்பு நடத்தியும், கிழக்கு குத்ஸ் ஃபலஸ்தீனர்களை குறிவைக்கும் இஸ்ரேலிய போலீஸிற்க்கு எதிராக முழு அடைப்புக்கும் அழைப்பு விடுத்தனர்.

போராட்டக்காரர்கள் சுவற்றின் வாயிலை அடைந்ததும் இஸ்ரேலிய வீரர்கள் கண்ணீர் புகை, ரப்பர் குண்டுகளாலும் சுட்டனர். ஒரு குண்டு 50 வயது பல்கலைகழக ஆசிரியரின் கையில் அடித்ததால் அவர் காயமடைந்தார். நிறைய மக்கள் கண்ணீர் புகை குண்டுகளால் பாதிக்கப்பட்டனர்.
presstv

கருத்துகள் இல்லை: