புதன், 16 ஜூன், 2010

காட்டிக் கொடுத்த விளம்பரம், மாட்டி கொண்ட மோடி: புகைபடத்தில் இடம்பெற்றிருந்த இளம் பெண்களின் துணிச்சலான பேட்டி!

பாட்னா:அண்மையில் பீகார் தலைநகர் பாட்னாவில் பாரதீய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்க்கு வருகை தந்த முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலை நடத்தி புகழடைந்த குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடியை வரவேற்று குஜராத் மாநில அரசு சார்பாக பீகார் மாநிலத்தின் அனைத்து பத்திரிக்கைகளுக்கும் அளித்திருந்த விளம்பரத்தில் மோடியினை முஸ்லிம்கள் நண்பனைப் போல காட்டவும், பீகார் முஸ்லிம்களின் வாக்குகைளை பெற்று பாரதீய ஜனதா வாக்கு வங்கியை உயர்த்தி கொள்ளவும், குஜராத் மாநில அரசின் கணிப்பொறி பயிலகத்தில் முஸ்லிம் இளம்பெண்கள் பயில்வது போன்று புகைப்படத்தை வெளியிட்டிருந்தது.

குஜராத் மாநில அரசு சார்பாக வெளியிடப்பட்டிருந்த அவ்விளம்பர புகைப்படத்தில் இடம்பெற்றிருந்த இளம்பெண்கள் குஜராத் மாநிலத்தினை சார்ந்தவர்கள் இல்லை என்பதும் மோடி அரசின் கேடித்தனமும் 'Twocircles' பத்திரிக்கை மூலம் ஏற்கனவே வெளிக் கொண்டுவரப்பட்டது.

பா.ஜ.கவின் இந்த பித்தலாட்டத்தினை மேலும் உறுதிசெய்வது போன்று அண்மையில் நடைபெற்ற புகைபடத்தில் இடம்பெற்றிருந்த மூன்று இளம்பெண்களின் பத்திரிகையாளர் சந்திப்பு அமைந்தது.

ஜூன் 14 அன்று, ஆஷம்கரில் உள்ள சிப்லி கல்லூரி மாணவியான பார்ஹீன் முஹமது அளித்த பத்திரிக்கையாளர் பேட்டியில் "எனது கல்லூரி சார்பாக டூசர்கிள் பத்திரிக்கைக்கு அளிக்க பட்டிருந்த விளம்பர புகைப்படம் மோடி அரசால் அனுமதி இன்றி தவறாக பயன்படுத்தபட்டுள்ளது.

மேலும் எனது புகைப்படம் நரேந்திர மோடி அரசின் விளம்பரத்தில் இடம்பெற்றது எனக்கு பெரும் அவமானமாகவும் மனம் வருத்தம் அளிக்க கூடியதாகவும் அமைந்துள்ளது.

குஜராத் அரசு பீகார் முஸ்லிம்களின் மத்தியில் பா.ஜ.க வுக்கும், பா.ஜ.க வுடன் கூட்டணி சேர்ந்ததால் சரிந்து வரும் கூட்டணி கட்சியான பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சியின் செல்வாக்கை சரி செய்யவும் இது போன்ற உண்மைக்கு புறம்பான செயலை செய்துள்ளதாகவும், நரேந்திர மோடிக்கும், குஜராத் அரசுக்கும் எதிராக வழக்கு தொடுப்பது சம்பந்தமாக எனது பெற்றோரும் எனது கல்லூரியும் முடிவு செய்யும்" என கூறியுள்ளார்.

புகைப்படத்தில் இடம்பெற்றிருந்த மற்றொரு மாணவியான சிப்லி கல்லூரியின் முன்னாள் மாணவியும், அலிகார் பல்கலைகழகத்தில் தற்பொழுது முதுநிலை பட்டத்திற்கு நுழைவுத் தேர்வு எழுதியுள்ள ஷாக்ல முஸாபர் அளித்த பேட்டியில் 'மோடியின் பித்தலாட்டத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் முஸ்லிம்கள் குஜராத்தில் நிம்மதியாக இருப்பதை போன்று நாடகமாடுவதை ஓர் மோசமான காமெடி என காட்டமாக' கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை: