புதன், 30 ஜூன், 2010

லண்டன் அருகே பச்சிளம் குழந்தைகள் புதைக்கப்பட்ட மயானம்

லண்டன் அருகே உள்ள பக்கிங்காம்ஷயர் பகுதியில் ஹேம்லிடன் என்ற இடத்தில் 100 ஆண்டுகளுக்கு முன் அகழ்வராய்ச்சி செய்யப்பட்டது. அங்கிருந்த ரோமானியர்களின் பங்களா அருகே மயானம் ஒன்றும் இருந்தது. அங்கு பச்சிளம் குழந்தைகள் அதிகளவில் புதைக்கப்பட்டிருந்தன.

மொத்தம் 97 குழந்தைகளின் எலும்புக் கூடுகள் இருந்தன. அனைத்து எலும்பு கூடுகளும் ஒரே அளவாக இருந்தன. கருவில் உருவாகி 40 வாரங்கள் ஆன குழந்தைகளின் எலும்புகள் போலவே அவை இருந்தது.இது ஆராய்ச்சியாளர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.இயற்கை காரணங்களால் குழந்தைகள் இறந்திருந்தால், அவர்களின் வயது வித்தியாசம் வேறுபட்டிருக்கும். ஆனால் பிறந்த சில நாட்களில் இந்தக் குழந்தைகள் இறந்தது எப்படி என்ற ஆராய்ச்சியில் இறங்கினர்.

இது குறித்து விளக்கம் அளித்த ஆராய்ச்சியாளர் ஜில் அயர்ஸ், "அந்த மாளிகை விபசாரம் நடைபெறும் இடமாக இருந்திருக்க வேண்டும். கருத்தடை சாதனங்கள் அந்தக் காலத்தில் இல்லாததால், பாலியில் தொழிலாளர்களுக்கு விருப்பமில்லாமல் குழந்தைகள் பிறந்திருக்கும். அந்தக் குழுந்தைகளை ரோமானியர்கள் கொன்று புதைத்திருக்கலாம்" என கூறியுள்ளார்.

இஸ்ரேலின் ஆஸ்கிலன் நகரில் கடந்த 1988ம் ஆண்டு நடந்த அகழ்வாராய்ச்சியில் இதே போல் பச்சிளம் குழந்தைகள் புதைக்கப்பட்ட மயானம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த இடத்திலும் ரோமானியர்களின் விபசார விடுதி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

"இந்த அளவுக்கு குழந்தைகளின் உடல்கள் புதைக்கப்பட்ட மயானம் உலகில் வேறு எங்கும் கண்டுபிடிக்கப்படவில்லை" என்கிறார் எலும்புக் கூடு ஆராய்ச்சியாளர் சிமன் மேஸ்.

கருத்துகள் இல்லை: