வியாழன், 17 ஜூன், 2010

ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் தேர்தல் கூட்டத்தில் CPI(M) குண்டர்கள் தாக்குதல்

கோழிக்கோடு:ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த்-ன் தலைமையில் ஜனகிய விசாக முன்னணியினால் கோழிக்கோடு கக்கோடில் நேற்று நடத்தப்பட்ட தேர்தல் கூட்டம் CPI(M) குழுவினரால் தாக்கபட்டது.

பஞ்சாயத் கமுநிஸ்ட் ஹாலில் நடத்தப்பட்ட கூட்டத்தில் ஜமாத்தின் அரசியல் செயலாளர் ஹமீத் வநிமல் மற்றும் காவல் துறையினர் உட்பட பலர் காயமடைந்தனர்.

பெண்கள் குழைந்தைகள் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட கூடத்தில் 50 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தினர். அங்கு நிறுத்தி வைக்கப் பட்டிருந்த வாகனங்களையும் சேதப்படுத்தினர்.




காயமடைந்தவர்கள் கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் சேர்க்கப்பட்டனர்.

ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் தலைமையில் புதிதாக உருவாக்கப்பட்ட ஜனகிய விகாச முன்னணனி எதிர்வரும் பஞ்சாயத் தேர்தலை முன்னிட்டு மாலை 3.30 மணியளவில் இந்த அக்கூட்டத்தை நடத்தினர்.

ஹமீத் வநிமல் இக்கூட்டத்தை தலைமை தாங்கி துவக்கி வைத்தார். ஷாலிக் பஞ்சாயதிற்காண வளர்ச்சி திட்டம் பற்றிய அறிக்கையை சமர்பித்தார்.

சுமார் 5 மணியளவில் பிரமோத் சமீர் பேசிக் கொண்டிருக்கும் போது கூட்டத்தின் ஒரு பகுதியினர் எழுந்து நின்றனர். இந்நிகழ்ச்சியில் கேள்வி பதில் பகுதி எதுவும் இல்லை என இக்கூட்டத்தின் தலைவர் கூறிக் கொண்டிருக்கும் பொழுதே எழுந்து நின்ற அந்த அக்கூட்டத்தினர் தாக்க ஆரம்பித்தனர்.

வெளியில் இருத்தும் அதிகமான நபர்கள் வந்து இருக்கைகள் மற்றும் மைக் ஆகியவற்றை சேதப்படுத்தி தாக்குதலில் ஈடுபட்டனர்.

தாக்குதல்காரர்களின் ஒரு குழுவினர் கட்டிடத்திற்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களையும் சேதப்படுத்தினர்.

இந்தக் கூட்டம் ஆரம்பிக்கும் போது மிகவும் குறைந்த அளவு காவல் துறையினரே இருந்தனர். அந்த கும்பல் 15 நிமிடங்கள் தாக்குதல் நடத்தி விட்டு சென்ற பிறகு அதிகளவிலான காவல் துறையினர் அங்கு வந்தனர்.

இத்தாக்குதல் தொடர்பாக இக்கூட்டத்தின் ஒருங்கிணப்பாளர்கள் காவல் துறையினரிடம் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தாக்குதலில் ஈடுபட்ட 50 நபர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் CPI(M) உறுப்பினர்கள் ஆவர்.

ஜமாத்தே இஸ்லாமின் அரசியல் செயலாளர் ஹமீத் வநிமல், மாவட்ட தலைவர் ரசாக் பல்லேறி மற்றும் பெண்கள் காவல் துறையினரின் உதவியுடன் 6-மணியளவில் பாதுகாப்பாக வெளியே கொண்டுவரப்பட்டனர்.காயமடைந்த 10 நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு காரணம் CPI(M) என ஜனகிய விகாச முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.

"கூட்டம் நடப்பதற்கு முன்பு பேருந்தில் காவல்துறையினர் அங்கு வந்துள்ளனர். காவல்துறையினருக்கு இத்தாக்குதல் பற்றிய தகவல் முன்பே கிடைத்துள்ளது. ஆனால் காவல் துறையினர் அதை இந்தக் கூட்ட ஒருங்கிணப்பாளர்களுக்கு தெரிவிக்கவில்லை" எனவும் கூறினார்.

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட நிர்வாகி KP.முஹம்மத் அஸ்ரப் ஜனகிய விகாச முன்னணியின் மீதான CPI(M)-ன் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார்.

"கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் மீதும் வாகனங்கள் மீதும் ஒரே சமயத்தில் தாக்குதல் நடந்திருப்பதை பார்க்கும் போது இந்த தாக்குதல் முன்பே திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது என்பதை காண்பிக்கிறது.CPI(M)-ன் இத்தகைய பாசிச நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்" எனவும் அவர் கூறினார்.

ஜமாத்தே இஸ்லாமி தலைவர்களின் மீதான CPI(M)-ன் இந்த தாக்குதல் கேரளாவிற்கு களங்கத்தை ஏற்ப்படுதியுள்ளது என வழக்கரிஞரான KP.முஹம்மத் ஷரீப் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: