செவ்வாய், 15 ஜூன், 2010

மதானியின் மீதான பொய் வழக்குகளின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் - பாப்புலர் ஃபிரண்ட்

கோழிக்கோடு:பெங்களூர் தொடர் குண்டுவெடிப்பில் அப்துந்நாசர் மதானியும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டதற்கு பி.ஜே.பி மற்றும் போலிஸூடனான ஆர்.எஸ்.எஸ். பின்னணியிலே நடந்துள்ளது என்று பாப்புலர் ஃபிரண்ட் குற்றம் சாட்டியுள்ளது.

மதானியின் மேல் சுமத்தப்பட்டுள்ள பொய் வழக்கைப் பற்றி பாப்புலர் ஃபிரண்ட் பொதுச் செயலாளர் பி.அப்துல் ஹமீது கூறுகையில், இந்தியாவில் பெரும்பாலான குண்டுவெடிப்பு வழக்குகளில் ஆங்காங்கே இந்துத்துவ தீவிரவாதிகள் பிடிபடும் இத்தருணத்தில், இதை மறைப்பதற்கும், திசைதிருப்புவதற்காகவும் தான் முஸ்லீம் தலைவர் அப்துந்நாசர் மதானி கர்நாடகா பி.ஜே.பி அரசால் அநியாயமாக பழி சுமத்தப்பட்டுள்ளார் என்றார்.
ஹிந்துத்துவ தீவிரவாதிகளின் கைது ஆர்.எஸ்.எஸ்ஸை மிக மோசமாக பாதித்துள்ளது. மலேகான், நண்தீத், மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா போன்ற இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் முதலில் முஸ்லீம்கள் தான் பலிகடாவாக்கப் பட்ட்டனர் என்றும் ஆனால் நீதி விசாரணைக்கு பிறகு இது ஹிந்துத்துவ தீவிரவாதிகளின் சதி வேலை என்று நிரூபணமானது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதை மூடி மறைபதற்காகத்தான் ஆர்.எஸ்.எஸ் பின்னணியில் இயங்கும் பி.ஜே,பி அரசு தற்போது முஸ்லீம்களுக்கெதிராக தலை சாய்த்துள்ளதாக ஹமீத் கூறினார்.

யாரோ ஒருவரின் வாக்குமூலத்தை வைத்து அப்பாவிகளை கைது செய்வது இன்றைய காலத்தில் சகஜமாக ஆகிவிட்டதாக கூறிய ஹமீத், இது ஜனநாயக விதிகளை துஷ்பிரயோகம் செய்வதே தவிர வேறில்லை என்றார்.

இதே போல் தான் சில ஆண்டுகளுக்கு முன், மத்தியில் பி.ஜே.பி ஆட்சி நடக்கும் வேளையில், அதன் கூட்டணியில் அங்கம் வகித்த அ.தி.மு.கவின் ஜெயலலிதாவை பயன்படுத்தி, மதானி எந்த தப்பும் செய்யாமல் சுமார் 10 ஆண்டுகள் சிறையில் களித்ததை அவர் நினைவுப்படுத்தினார்.

இந்த அநீதியையும், அதிகார துஷ்பிரயோகத்தையும் தட்டிக் கேட்க அனைத்துக் கட்சிகளும், வகுப்பினரும் முன்வர வேண்டும் என்று ஹமீத் அழைப்பு விடுத்தார்.

இவ்வழக்கை குறித்து, மதானி அவர்கள் கருத்து தெரிவிக்கையில், "ஐ.பி எனப்படும் உளவுத்துறையில் உள்ள சில விஷமிகளாலே தான் நான் பலிகடாவாக்கப்பட்டுள்ளேன்" என்று தெரிவித்தார்.

அதே சமயம், "நான் ஜாமீன் மனுவும் தாக்கல் செய்வேன்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: