ஞாயிறு, 20 ஜூன், 2010

சேலத்தில் கூடியது கூட்டு செயற்குழு 25 தீர்மானங்கள் நிறைவேறியது

மாங்கனி மாநகர் சேலத்தில் கடந்த ஜுன் 15 தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் கட்டு செயற்குழு வெகு எழுச்சியாக நடைபெற்றது.


மாங்கனி மாநகர் சேலத்தில் கடந்த ஜுன் 15 தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் கட்டு செயற்குழு வெகு எழுச்சியாக நடைபெற்றது.


சேலம் என்றால் ஒரு சில அரசியல் கட்சிகளின் கோட்டை என மாறி, மாறி சொல்லப்படுவதுண்டு. அங்கேயும் எங்களுக்கு வலுவான களம் உண்டு என்பதை நிருபிக்கும் முகமாக கருப்பு வெள்ளை கொடிகள் காணுமிடமெல்லாம் கம்பீரமாக பறந்தது.

பேரா. ஜவாஹிருல்லாஹ் தலைமையில் தொடங்கிய செயற்குழுவில், மாநிலச் செயலாளர் ஜிப்ரி காஸிம் நீதி போதனை என்ற தலைப்பில் வகுப்பெடுத்தார்.

பின்னர் தலைமையுரை ஆற்றிய பேரா.ஜவாஹிருல்லாஹ் தமுமுக மற்றும் மமகவின் செயல்பாடுகள் குறித்து கருத்தாய்வு நடத்தினார். அதனடிப்படையில் களப்பணி, வளர்ச்சி, பணிப்பகிர்வு, நிர்வாகம் ஆகியன குறித்து ஒவ்வொருவரும் கருத்துகளை கூறினர்.

அனைவருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டதால், ஒருவர்பின் ஒருவராக வரிசைப்படியாக செயற்குழு உறுப்பினர்கள் அழைக்கப்பட்டனர்.


ஒவ்வொரும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை அருமையாக பயன்படுத்தி, பயனுள்ள கருத்துகளை கூறினார். ஏற்கனவே கூறிய கருத்துகளை, புதிதாக வருபவர்கள் கூறக்கூடாது என்ற விதியின்படி கருத்தாய்வு நடத்தப்பட்டதால் மேடைக்கு வந்த ஒவ்வொருவரும் புதிய கருத்துக்களை பதிவு செய்தனர். இதனால் நேரமும் மிச்சமாயிற்று.

மதிய உணவு, தொழுகை இடைவேளைக்குப் பிறகும் மிகுந்த உற்சாகத்துடன் தொடர்ந்த செயற்குழு மாலை 6 மணிக்கு நிறைவுப் பெற்றது. புதிய தெம்பையும், புத்துணர்வையும் பெற்ற உற்சாகத்தில் செற்குழு உறுப்பினர்கள் புறப்பட்டனர்.

செற்குழு முடிந்ததும் மாலை 6 மணியளவில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

செயற்குழுவுக்கான ஏற்பாடுகளை தமுமுகவின் சேலம் மாவட்ட தலைவர் பக்ஷ், மமகவின் மாவட்ட செயலாளர் ஷேக் ஆகியோர் தலைமையில் சேலம் மாநகர, மாவட்ட நிர்வாகிகளும், செயல் வீரர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.


கருத்துகள் இல்லை: