வியாழன், 24 ஜூன், 2010

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த முதல் முஸ்லீம் வீரர்

சிட்னி:இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உஸ்மான் காஜா என்பவர் இடம் பெற்றுள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் இடம் பெற்ற முதல் முஸ்லீம் வீரர் என்ற பெருமையை இவர் பெறுகிறார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான 14 பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ளது. இதில்தான் உஸ்மான் இடம் பிடித்துள்ளார்.

முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான அணி இது. இதில் இடம் பெற்றுள்ள உஸ்மானுக்கு 23 வயதாகிறது. இடது கை பேட்ஸ்மேன் ஆவார்.

காயமடைந்துள்ள பிலிப் ஹ்யூக்ஸுக்குப் பதிலாக உஸ்மானுக்கு இடம் கிடைத்துள்ளது. உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியதற்காக உஸ்மானுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.

உஸ்மான் காஜா, 1986ம் ஆண்டு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: