ஆஸ்திரேலியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆஸ்திரேலியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 3 ஜனவரி, 2011

ஆஸி. கிரிக்கெட் அணியில் முதல் முஸ்லிம் வீரர் உஸ்மான் காஜா

சிட்னி,ஜன.3:ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு வீரர் இடம் பிடித்துள்ளார். இவர் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவர். இஸ்லாமாபாத்தில் பிறந்தவர். 24 வயதேயாகும் அந்த இளம் வீரரின் பெயர் உஸ்மான் காஜா. இவர் இஸ்லாமாபாத்தில் பிறந்தவர். இவரது குடும்பம் ஆஸ்திரேலியாவில் செட்டிலாகி அந்த நாட்டு குடியுரிமைப் பெற்றதாகும்.

வளரும் கிரிக்கெட் வீரராக இருந்து வந்த காஜா ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடிக்கும் வேகத்துடன் தீவிரமாக கிரிக்கெட் ஆடி வந்தார். தற்போது அவருக்கு ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைத்துள்ளது, அதுவும் டெஸ்ட் அணியில். அதை விட முக்கியமாக இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் பெருமையைப் பெற்றுள்ளார் காஜா.

இரு நாடுகளுக்கும் இடையிலான 5வது டெஸ்ட்போட்டி இன்று சிட்னியில் தொடங்கியது. இதில் காஜாவும் இடம் பெற்றுள்ளார்.

இங்கிலாந்து பந்து வீச்சு குறித்து சற்றும் பயமில்லாமல் மிகவும் தைரியமாக ஆடி வருகிறார் காஜா. தேநீர் இடைவேளையின் போது அவர் ஆட்டமிழக்காமல் 24 ரன்கள் எடுத்திருந்தார்.

வியாழன், 23 டிசம்பர், 2010

தீவிரவாதி என அபாண்டம்- டாக்டர் ஹனீஃபிற்கு 10 லட்சம் டாலர் இழப்பீடு வழங்க ஆஸி. சம்மதம்

மெல்போர்ன்,டிச.22:ஆஸ்திரேலிய அரசு தன்னை தீவிரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து, சட்டவிரோதமாக சிறையில் அடைத்ததை எதிர்த்து அங்குள்ள கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்த இந்திய டாக்டர் முகம்மது ஹனீப், தற்போது ஆஸ்திரேலிய அரசுடன் சமரசமாகப் போக ஒப்புக் கொண்டுள்ளார். அவருக்கு பெரும் தொகையை இழப்பீடாக வழங்க ஆஸ்திரேலியா முன்வந்துள்ளதைத் தொடர்ந்து இதுதொடர்பாக உடன்பாடு ஏற்பட்டது.

ஹனீப்புக்கு ஆஸ்திரேலிய அரசு 10 லட்சம் டாலர் இழப்பீடுத் தொகையை வழங்கும் என்று தெரிகிறது.

பெங்களூரைச் சேர்ந்தவர் முகம்மது ஹனீப். டாக்டரான இவர் ஆஸ்திரேலியாவில் பணியாற்றி வந்தார்.கடந்த 2007ம் ஆண்டு இங்கிலாந்தின் கிளாஸ்கோ நகரில் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இதுதொடர்பான விசாரணையின்போது, டாக்டர் ஹனீப்பை ஆஸ்திரேலிய காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவருக்கும், கிளாஸ்கோ சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கும் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்தக் கைது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் ஹனீப்புக்கு எதிரான எந்த ஆதாரமும் ஆஸ்திரேலியாவுக்குக் கிடைக்கவில்லை. மேலும் அவர் மீது தவறான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதும் அம்பலமானது. இதையடுத்து ஆஸ்திரேலிய அரசுக்கு பெரும் அவமானமும், தர்மசங்கடமும் ஏற்பட்டது. இதையடுத்து ஹனீப் விடுவிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து ஹனீப் நாடு திரும்பி விட்டார். ஆனால் தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி, தவறான வழக்கில் கைது செய்து, தனது வாழ்க்கையையும், வேலையையும் கெடுத்த ஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக, அந்த நாட்டின் முன்னாள் குடியேற்றத் துறை அமைச்சர் கெவின் ஆண்ட்ரூஸ் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் தற்போது ஆஸ்திரேலிய அரசுக்கும், ஹனீப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இதற்காக கடந்த வாரம் ஆஸ்திரேலியா வந்தார் ஹனீப். 10 நாள் விடுமுறையில் வந்த ஹனீப், ஆஸ்திரேலிய தரப்புடன் தனது வக்கீல்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு கண்டுள்ளார்.

இதுகுறித்து ஹனீப் கூறுகையில், இந்த உடன்பாடு எனது வேலையை திரும்பப் பெறும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எனது கெளரவமும் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் ஆஸ்திரேலியா திரும்புவது குறித்து பரிசீலிக்கவுள்ளேன் என்றார்.

ஹனீப்புடன் அவரது மனைவி பிர்தோஸ் மற்றும் 3 வயது மகள் ஹனியா ஆகியோரும் வந்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்திற்குப் பிறகு நாடு திரும்பிய ஹனீப் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹனீப் தொடர்ந்து கூறுகையில், இந்த பிரச்சினை இத்துடன் முடிவுக்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. தவறான குற்றச்சாட்டின் பேரில் நான் கைது செய்யப்பட்டது எனக்கு பெரும் வேதனையான அனுபவத்தைக் கொடுத்தது. இன்று ஏற்பட்டுள்ள உடன்பாடு எனக்கு பெரும் நிம்மதியைக் கொடுத்துள்ளது. எனது குடும்பத்தினருடன் இனி நிம்மதியான வாழ்வைத் தொடர்வேன்.

விரைவில் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்புவோம் என்று கருதுகிறேன். அதுகுறித்து பரிசீலிக்கவுள்ளேன். ஏற்கனவே வேலை பார்த்து வந்த கோல்ட் கோஸ்ட் மருத்துவமனையில் மீண்டும் சேரும் வாய்ப்புகளை மறுக்க முடியாது. இதுகுறித்து எனது குடும்பத்தினருடன் விவாதித்த பின்னரே முடிவெடுப்பேன் என்றார்.

ஹனீப்புக்கு எவ்வளவு தொகை கிடைக்கும் என்பது குறித்து அவரது வக்கீல்கள் தெரிவிக்க மறுத்து விட்டனர். ஆனால் அவருக்கு கணிசமான தொகை கிடைக்கும் என்று மட்டும் தெரிவித்தனர். இருப்பினும் ஹனீப்புக்கு 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் இழப்பீட்டுத் தொகை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

பிரிஸ்பேனில் அரசுத் தரப்புடன் கடந்த 2 நாட்களாக இறுதிக் கட்ட நஷ்ட ஈடு பேச்சுவார்த்தையில் ஹனீப்பும் அவரது வக்கீல்களும் ஈடுபட்டிருந்தனர். அது இன்று சமரசமாக முடிந்துள்ளது. இதையடுத்து முன்னாள் குடியேற்றத் துறை அமைச்சர் கெவின் ஆண்ட்ரூஸ் மீது ஹனீப் தொடர்ந்த வழக்கு கைவிடப்படுகிறது.

மன உளைச்சல், வேலை பறிபோனது, வருமானம் பாதிக்கப்பட்டது, கெளரவம் பாதிக்கப்பட்டது உள்ளிட்டவற்றுக்காக தற்போது ஹனீப்புக்கு இழப்பீடு தரப்படவுள்ளது. ஆஸ்திரேலிய சட்ட வரலாற்றில் இப்படி ஒரு இழப்பீடு விவகாரம் இதுவரை நடந்ததே இல்லை என்று ஹனீப்பின் வக்கீல்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் நீதிபதி டோனி பிட்ஜெரால்ட் முன்னிலையில் இந்த இழப்பீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன.
தட்ஸ் தமிழ்

புதன், 22 செப்டம்பர், 2010

ஆஸ்திரேலியாவில் ஹிஜாபிற்கு விதிக்கவிருக்கும் தடையை எதிர்த்து முஸ்லிம் பெண்கள் பேரணி.


சிட்னி,செப்.21:ஆஸ்திரேலியாவில் நூற்றுக்கணக்கான முஸ்லிம் பெண்கள் உட்பட பலர், அரசு விதிக்கவிருக்கும் ஹிஜாப் தடையை எதிர்த்து பேரணியில் ஈடுபட்டுள்ளனர். ஆஸ்திரேலிய அரசுக்கு செனட் உறுப்பினர் கோரி பெர்னார்டி பரிந்துரைத்துள்ள 'ஹிஜாப்' என்னும் ஆடைக்கு விதிக்கவிருக்கும் தடையை எதிர்த்து பேரணியில் ஈடுபட்டனர்.

ஹிஸ்புத் தஹ்ரீர் (Hizbut Tahrir) என்னும் இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் சிட்னி சன்டே ஹெரால்ட் என்னும் பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில் "பெண்களை இஸ்லாம் சிறுமைப்படுத்துகிறது என்று திட்டமிட்டு பரப்பிவரும் அவதூறுகளை பரப்புவர்கள் நிறுத்திக் கொள்ளவேண்டும்" என்று கூறியுள்ளார். மேலும் "உலகம் முழுவதும் மதம் மாறும் பெண்களின் எண்ணிக்கையை எடுத்துக் கொண்டால், அதிகமாக அளவில் முஸ்லீம் மதத்தையே ஏற்றுக்கொண்டு, இஸ்லாம் அறிவுறுத்தும் கண்ணியமான ஆடை முறைகளையே விரும்பிப் பின்பற்றுகிறார்கள்" என்றும் கூறியுள்ளார்.

மேற்கு உலகம் நடைமுறைப்படுத்தும் சமத்துவத்தை விட, இஸ்லாம் போதிக்கும் மனித மதிப்பு சிறந்தது என்று சவால் விட்டுள்ளார்."தன்னுடைய உடலை அந்நிய ஆண்கள் பார்க்க கூடாது என நான் விரும்புவது எனது சுதந்திரம். இந்த ஆடையின் மூலம் சமுகத்தில் அந்நிய ஆண்கள் கண்களில் இருந்து எனது உடலை மறைத்து என்னால் சுதந்திரமாக செயல் பட முடியும்" என்று ஏழு தலைமுறைகளாக ஆஸ்திரேலியாவில் வாழ்ந்துவரும் உம்மு ஜமாலுதீன் என்ற பெண் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், பெண்கள் எப்படி தோற்றமளிக்க வேண்டும், கூடாது என்று நிர்ணயிக்கும் தற்போதைய ஆணாதிக்கத்தில் உள்ள நவீன ஆடை உலகத்திற்கு நாங்கள் அடிமையாக முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
செனட் உறுப்பினர் கோரி பெர்னார்டி பரிந்துரைத்த 'ஹிஜாப்' தடைக்கு ஆதரவு அளிக்காத மற்ற பெரும்பான்மை செனட் உறுப்பினர்களுக்கு இந்தப் பேரணியில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

வியாழன், 8 ஜூலை, 2010

டாக்டர் முஹம்மது ஹனீஃப் ஆஸ்திரேலிய அரசுக்கெதிராக வழக்கு

எந்த குற்றமும் செய்யாத அப்பாவி டாக்டர் முஹம்மது ஹனீஃபை பயங்கரவாத வழக்கில் கைது செய்து அலைக்கழித்தது ஆஸ்திரேலிய அரசு. இது நடந்தது ஜூலை 2007ல். மூன்று வாரங்கள் அவரைக் கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கிய ஆஸ்திரேலிய அரசு, அதன் பின் அவரை விடுதலை செய்தது.

பெங்களூரைப் பூர்வீகமாகக் கொண்ட டாக்டர் முஹம்மது ஹனீஃப் ஆஸ்திரேலியாவில் மருத்துவப் பணிகள் செய்து வந்தார்.

ஸ்காட்லாந்தில் கிளாஸ்கோ விமான நிலையத்தில் கார் குண்டு வெடிப்புக்கு திட்டம் போட்ட 'தீவிரவாதிகளுக்கு' இவர் மொபைல் சிம் கார்ட் கொடுத்து உதவினார் என்பது தான் இவர் மீதுள்ள 'பயங்கரவாத' குற்றச்சாட்டு.

இப்பொழுது டாக்டர் முஹம்மது ஹனீஃப் அமீரகத்தில் உம்முல் குவைனில் மருத்துவ சேவையாற்றி வருகிறார்.

தன்னை சட்ட விரோதமாகக் கைது செய்து சிறையிலடைத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கி, தனது பெயருக்கும் களங்கம் ஏற்படுத்திய முன்னால் ஆஸ்திரேலியாவின் குடிபெயர்தல் (immigiration) அமைச்சர் கெவின் ஆண்ட்ரூஸ் மீது பிரிஸ்பேனில் உள்ள ஆஸ்திரேலிய உச்சநீதிமன்றத்தில் டாக்டர் ஹனீஃப் வழக்கு தொடுத்துள்ளார்.

முஸ்லிம்கள் மேல் இந்த ஆண்ட்ரூஸ் எந்த அளவுக்கு வெறிபிடித்திருந்தார் என்றால் ஹனீஃபுக்கு ஒரு மாஜிஸ்திரேட்டு பிணை கொடுத்து ஒரு சில மணி நேரங்களில் இவர் ஹனீஃபின் விசாவை ரத்து செய்தார். இதனால் அவர் கடும் விமர்சனத்திற்குள்ளானார்.

வியாழன், 24 ஜூன், 2010

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த முதல் முஸ்லீம் வீரர்

சிட்னி:இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உஸ்மான் காஜா என்பவர் இடம் பெற்றுள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் இடம் பெற்ற முதல் முஸ்லீம் வீரர் என்ற பெருமையை இவர் பெறுகிறார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான 14 பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ளது. இதில்தான் உஸ்மான் இடம் பிடித்துள்ளார்.

முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான அணி இது. இதில் இடம் பெற்றுள்ள உஸ்மானுக்கு 23 வயதாகிறது. இடது கை பேட்ஸ்மேன் ஆவார்.

காயமடைந்துள்ள பிலிப் ஹ்யூக்ஸுக்குப் பதிலாக உஸ்மானுக்கு இடம் கிடைத்துள்ளது. உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியதற்காக உஸ்மானுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.

உஸ்மான் காஜா, 1986ம் ஆண்டு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

செவ்வாய், 25 மே, 2010

ஹமாஸ் தலைவர் படுகொலை:இஸ்ரேல் தூதரை ஆஸ்திரேலியா வெளியேற்றியது

கான்பெர்ரா:ஹமாஸ் தலைவர்களில் ஒருவரான மஹ்மூத் அல் மப்ஹூஹ் கடந்த ஜனவரி மாதம் துபாயில் வைத்து இஸ்ரேலிய மொசாத் ஏஜண்டுகளால் கொல்லப்பட்டார்.

அவருடைய கொலையாளிகள் ஆஸ்திரேலிய பாஸ்போர்ட்டை போலியாக பயன்படுத்தியதை துபாய் போலீஸ் கண்டறிந்திருந்தது.

இந்நிலையில் இஸ்ரேலின் இத்தகைய மோசமான நடவடிக்கையை கண்டித்து ஆஸ்திரேலியா இஸ்ரேலின் தூதரக அதிகாரியை நாட்டைவிட்டு வெளியேற்றியது.

மொசாத் உளவாளிகள் மப்ஹூஹை கொல்வதற்காக ஆஸ்திரேலியாவின் 4 பாஸ்போர்ட்டுகளை போலியாக பயன்படுத்தி மோசடிச் செய்துள்ளனர்.

'ஒரு நட்பு நாட்டின் நடவடிக்கை அல்ல இஸ்ரேல் செய்தது’ என ஆஸ்திரேலியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்டீஃபன் ஸ்மித் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஏற்கனவே பிரிட்டன் மப்ஹூஹ் கொலையில் அந்நாட்டு பாஸ்போர்ட்டுகளை போலியாக பயன்படுத்தி மோசடிச் செய்த இஸ்ரேலின் நடவடிக்கையை கண்டித்து பிரிட்டனின் இஸ்ரேலிய தூதரக அதிகாரியை வெளியேற்றியிருந்தது.

இஸ்ரேலில் வசிக்கும் ஆஸ்திரேலியக்காரர்களின் பாஸ்போர்ட்டைத்தான் மோசடியாக மொசாத் உளவாளிகள் பயன்படுத்தியுள்ளனர்.

இஸ்ரேலிய அதிகாரிகளின் துணையில்லாமல் இச்சம்பவம் நடக்க வாய்ப்பில்லை என ஆஸ்திரேலிய அரசு கருதுகிறது. ஆஸ்திரேலியா நாட்டு ஃபெடரல் போலீஸ் இஸ்ரேலுக்குச் சென்றிருந்தது. ஆனால் மப்ஹூஹ் கொலைக்கு காரணம் நாங்கள் என்பதற்கு ஆதாரம் இல்லை என இஸ்ரேல் கூறுகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

வியாழன், 4 ஜூன், 2009

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவதன் காரணம் என்ன?

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியர்களின் கருத்து

[ ஆஸ்திரேலியாவில் மொத்தம் 4 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் படிக்கின்றனர். சீனா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இந்த மாணவர்களில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 90 ஆயிரம். ]

o இங்கிருக்கும்வரை உழைக்க முடியுமானதை உழைத்துவிட்டு இறுதியில் உங்களுக்கு நாகரீகம் தெரியாது, உங்கள் கலாச்சாரத்தில் வாழ எங்கலுக்குப் பிடிக்கவில்லை என்று கூறிவரும் இந்தியர்களை வெள்ளைக்காரர்கள் எதிர்க்கிறார்கள். இந்தியா தரமான நாடென்றால் அங்கேயே இருந்திருக்க வேண்டியதுதானே, எதற்கு இங்கே வந்தீர்கள் என்று அவர்கள் கேட்கும் கேள்வியிலும் நியாயம் இருப்பதாகவே எனக்குப் படுகிறது.

o "இங்கு பல இந்தி பேசும் இந்தியர்கள் இருக்கிறார்கள், ஏன் நீங்களும் இந்தி கற்கக் கூடாது" என்று என்னிடம் அடிக்கடி இவர்கள் கேட்பதுண்டு. பலமுறை இதனால் என்னுடன் இவர்கள் தர்க்கித்திருக்கிறார்கள். ஆஸ்திரேலியர்களும் சில வேளைகளில் இவர்களது தொல்லை தாங்க முடியாது இவர்களுடன் தர்கிப்பார்கள். அப்போதெல்லாம்" இந்த நாடு சரியில்லை, இங்கிருக்க எமக்குப் பிடிக்கவில்லை, உங்கள் கலாச்சாரம் கேவலமானது" என்று ஆஸ்திரேலியர்களிடம் ஆவேசமாக இவர்கள் கூறும்போது "அப்படியானால் உங்கள் நாட்டிற்குச் சென்று வாழ்வதுதானே? எதற்கு எங்கள் வரிப்பணத்தில் இருந்துகொண்டு எங்களைச் சாகடிக்கிறீர்கள்?" என்று பதிலுக்கு ஆஸ்திரேலியர்கள் சொல்வதையும் பலமுறை கண்டிருக்கிறேன்.

o வேலை செய்யுமிடங்களில் அவர்கள் நடந்துகொள்ளும் விதம். எங்கு ரெண்டு இந்தியர்கள் கூடிவிடுகிறார்களோ அங்கு உடனேயே கிந்தியில் சத்தமாக பேச ஆரம்பித்து விடுகிறார்கள். தம்மைச் சுற்றி அந்த அலுவலகத்தில் கிந்தி தெரியாத மற்ற மொழிக்காரர்களும் இருக்கிறார்களே என்கிற சிந்தனை கொஞ்சமும் இல்லாமல் இவர்கள் தம்பாட்டிற்கு சத்தமாக பெசுவார்கள். இதனால் இவர்களுடன் ஒரே மேசையிலிருந்தோ அல்லது ஒரே அறையிலிருந்தோ வேலைபார்க்கும் வேற்று மொழிக்காரர் சங்கடப்பட்டு நெழிவதும், என்ன பேசுகிறார்கள் என்று தெரியாமல் முளிப்பதும் இங்கு சர்வ சாதாரனம். எவரும் தட்டிக்கேட்டால், "எமக்கு கிந்தியில் ம்பேசுவதுதான் சுலபம், ஆகவே நீங்கள் வேண்டுமான நாங்கள் பேசி முடியும்வரை வெளியே இருந்து விட்டு வாருங்கள்" என்று மிக அலட்சியமாகச் சொல்லி விடுகிறார்கள்.

o இதேபோல் தாம் குடியிருக்கும் பகுதிகளில் இரவு வேளைகளில் மதுபோதையில் இவர்கள் அடிக்கும் கும்மாளம். சில வேளைகளில் காலை 2 அல்லது 3 மணிவரை இந்தியில் உச்ச ஸ்த்தானியில் பாடலும், கூச்சல்களும் தொடரும். ஆஸ்திரேலியர்கள் மது அருந்துவதென்றால் மதுக்கடைகளுக்கே செல்வது வழமை. எவரும் வீடுகளில் மது அருந்திக்கொண்டு மற்றவர்களைக் குழப்புவதில்லை.இரவு 10 மணிக்குப் பின்னர் எவரும் கூச்சல் போடக்கூடாதென்று ஒரு விதியிருக்கு. அயலவர்கள் பொலீசிடம் முறையிட்டால் நடவடிக்கை எடுக்கும் அதிகாரமும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கு. அப்படியிருந்தும் இவர்களின் அட்டகாசம் குறைவதில்லை.

o தம்மைச் சுற்றி எத்தனை பேர் இருக்கிறார்கள், எத்தனை பேருக்கு நாம் சங்கடமாக இருக்கிறோம் என்ற யோசனை கொஞ்சம் கூட இல்லாமல் தனது வீட்டில் இந்தியாவில் இருப்பது போன்ற பிரமையில் தம்மையறியாது கூக்குரலிடும் வட இந்திய மாணவர்கள். இவ்வலவிற்கும் அந்த மாணவர்கள் ஆங்கிலம் தெரியாதவர்களில்லை. ஆனால் வேண்டுமென்றே தமது வட இந்திய மொழியில் சத்தமாக மற்றவர்கள் முன்னால் சத்தமாகப் பேசுவதை கவுரவமாக நினைப்பதால் இது நடக்கிறது. எவரும் இதைத் தட்டிக் கேட்டாலோ அல்லது சத்தம் போட வேண்டாம் என்று சொன்னாலோ அவரை நோக்கி இரு வாரத்தைகலை வீசிவிட்டு மீண்டும் தமது பேச்சைத் தொடர்வார்கள்.

o வட இந்திய மாணவர்கள் இங்குநடந்து கொள்ளும் விதம் பற்றியது. இங்கு பலராலும் சுட்டிக்காட்டப்படும் ஒரு விடயம் என்னவென்றால், பொது இடங்களிலோ அல்லது புகையிரதம், பேரூந்து போன்ற மக்கள் அதிகமாக பயணம் செய்யும் சந்தர்ப்பங்களில் இந்திய மாணவர்களின் செயல் எவ்வாறான முகச்சுளிப்புகளுக்கு ஆளாகிறதென்பது. பொது இடங்களில் கூடும் இந்தியர்கள், குறிப்பாக இந்திய மாணவர்கள் மிகவும் உச்ச தொணியில் தமக்குல் பேசிக்கொள்வதும், தொலைபேசியில் உரையாடுவதுமான நிகழ்வுகள். காலை மற்றும் மாலை நேரங்களில் வெலை நிமித்தம் புகையிரதங்களில் பயணம் செய்யும் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் தினமும் சந்திக்கும் இந்த "இந்திக் கூச்சல்கள்". நூற்றுக்கணக்கான பயணிகள் அமைதியாக மர்ந்திருக்கும் ஒரு புகையிரதப் பெட்டியில் எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு அந்தப் பெட்டி முழுவதற்குமே கேட்குமளவிற்கு உச்ச ஸ்த்தானியில் பேசும் இரு இந்தியர்கள், அல்லது தொலைபேசியில் காதலியுடனோ அல்லது காதலனுடனோ ரசித்து உரையாடும் இந்திய இளைஞர்கள்.

o 8 அல்லது 10 இந்திய மாணவர்களால் போட்டி மூலம் ஏலம் எடுக்கப்படும் இந்த வீட்டு வாடகையை இவர்கள் தமக்குள் பகிர்ந்துகொள்வதால் ஒருவருக்கு வெறும் 40 அல்லது 50 டாலர்கள் தான் வாரத்துக்கு செலவாகிறது. இவ்வாறே வீடுகள் வாங்கும்போது நடக்கிறது. ரெண்டு அல்லது மூன்று குடும்பங்கள் சேர்ந்து ஒரு வீட்டைக் கொள்வனவ்யு செய்வதால் வீடுகளின் விலையும் இப்பகுதிகளில் கடுமையாக அதிகரித்து வருகிறது. இவ்வாறான விலையேற்றங்கள் மற்ற ஆஸ்திரேலியர்களை இப்பகுதிகலை விட்டு போகச் செய்வதுடன், அவர்களின் வருமானத்துக்கு மிஞ்சிய செலவுகளையும் ஏற்படுத்தி விடுகிறது. இதுவும் ஒரு காரனம் இந்த வட இந்திய மாணவர்கள் மீதான் தாக்குதல்களுக்கு.

o இங்கு பலர் வாதாடலாம், இந்திய மாணவர்கள் மட்டும்தானா இங்கு வருகிறார்கள் என்று, உண்மையிலேயே இன்றைய நிலவரப்படி படிக்கவென்று ஆஸ்திரேலியாவை நோக்கிப் படையெடுக்கும் மாணவர்களில் 90 வீதமானவர்கள் வட இந்தியாவிலிருந்தே வருகின்றனர் என்பது புள்ளிவிபரப்படி உறுதிப்படுத்தப்படுகிறது. இதனால் ஆஸ்திரேலிய அரசு மீது பல சமூக வியல் அமைப்புகள் இவ்வாறான வீசா அனுமதிகளைக் குறைக்குமாறும், முழுவதுமாக ரத்துச் செய்யுமாறும் அழுத்தம் கொடுத்து வருகிறன. இதன் வெளிப்பாடுதான் அண்மையில் அரசு முன்மொழிந்திருக்கும் ""தொழில்சார் வீசாக்களுக்கான கட்டுப்பாடு" என்ற தீர்மானத்தைப் பார்க்கலாம். ஆகவே தமது வேலை வாய்ப்பிண்மைக்குக் காரணம் இந்த வட இந்தியர்கள் தான் என்கிற மனநிலை சாதாரண அவுஸ்த்திரேலியக் குடிமகனிடம் காணப்படுகிறது. ஆகவே இதுவே இந்திய மாண்வர்கள் மீதான தாக்குதலை உக்குவித்திருக்கலாம்.

o முதலாவதாக, இன்றைய பொருளாதார தேக்க நிலையில் ஆஸ்திரேலியாவின் வேலை வாய்ப்பிண்மை 4 % இலிருந்து சடுதியாக 8% ஆக அதிகரித்திருக்கிறது. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பல குடும்பங்கள் இன்று வேலையிழந்து நடுத்தெருவிற்கு வந்திருக்கின்றன. பல தொழிலதிபர்கள் தமது செலவினைக் குறைக்கும் முகமாக பல தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்கின்றனர். அவ்வாறான இடங்களுக்கு பகுதிநேர தொழிலாளர்கள் என்ற பெயரில் இந்திய மாணவர்களை அமர்த்த இந்த தொழில் அதிபர்கள் விரும்புகின்றனர். சராசரியாக 22 டால மணித்தியாலத்துக்கு கொடுக்க வேண்டிய இடத்தில் வெறும் 7 அல்லது 8 டாலருக்கு இந்திய மாணவர்கள் வேலை செய்ய விரும்புவதால் இவ்வாறான வேலை வாய்ப்பிண்மை அதிகரித்துக்கொண்டு போகிறது.

o "அண்மைக்காலமாக ஆஸ்திரேலிய நகரங்களான சிட்னி மற்றும் மெல்பேணில் "இந்திய மாணவர்களுக்கெதிரான தாக்குதல்கள்" என்ற செய்தியை பலரும் கேட்டிருப்போம். ஆனால் இந்திய தேசியம் என்ற வட்டத்திற்குள் இருந்து இந்தப் பிரச்சனையை அணுகுவதால்த்தான் இவ்வாறான சம்பவங்கள் இந்தியர்களை மட்டுமே குறிவைத்து நடப்பதுபோன்ற பிரமையை ஏற்படுத்தி விடுகிறது. உண்மையிலேயே இவ்வாறான சம்பவங்கள் எந்தப் பிண்ணணியில் நடக்கின்றன என்று ஆராய்வது மிகவும் அவசியமானதாகும். "

உழைத்தால் உறுத்துகிறது

ஆஸ்திரேலியாவில், சிட்னி மற்றும் மெல்போர்ன் நகரங்களில் கடந்த சில நாள்களாக இந்திய மாணவர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். இவர்களில் இருவர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்காக இந்தியத் தலைவர்களும், மாணவர் அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆஸ்திரேலிய அரசும் இது தொடர்பாக ஒரு சிலரை கைது செய்து விசாரித்து வருகிறது.

இது ஏதோ இப்போதுதான் நடைபெறத் தொடங்கியுள்ளதைப் போன்று பேசப்பட்டாலும், உண்மையில், இந்திய மாணவர்கள் தாக்கப்படுவது என்பது உலகம் முழுவதிலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. வெறும் வழிப்பறி என்ற அளவில் முடிந்துபோகின்றவை நிறைய. தற்போது தொடர்ச்சியாக சில சம்பவங்கள் நடந்திருப்பதும், ஒரு மாணவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதும்தான் பிரச்னையை இந்த அளவுக்கு அனைவரும் அறியும்படியாகச் செய்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் மொத்தம் 4 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் படிக்கின்றனர். சீனா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இந்த மாணவர்களில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 90 ஆயிரம்.

இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியா போய்த்தான் படிக்க வேண்டுமா? இந்தியாவில் இத்தகைய படிப்புகள் இல்லையா? என்று கேட்டால், இந்தியாவிலேயே இவர்கள் படிக்க முடியும் என்று பதில் சொல்வது எளிது. ஆனால், மிகக் குறைவான வசதிகளுடன் இங்குள்ள பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் வசூலிக்கும் கல்விக் கட்டணத்தை ஒப்பிடும்போது, ஏறக்குறைய இதே கல்விக் கட்டணத்தில் ஆஸ்திரேலியாவில் படிக்கவும், அயல் நாடுகளில் பணிபுரியும் வாய்ப்புகளை உடனடியாகத் தேடிக்கொள்ளவும் முடிகிறது.

உதாரணமாக, ஆஸ்திரேலியாவில் விமானியாக பயிற்சி பெற வேண்டும் என்றால் இந்திய மதிப்பில் ரூ.25 லட்சம் தேவைப்படுகிறது. இதே பயிற்சியை இந்தியாவில் தனியார் அமைப்புகளில் பெற வேண்டுமானால் ரூ.20 லட்சம் வரை ஆகிறது. ஆகவே, வெளிநாடு போய் படித்தால் என்ன என்ற ஆர்வம் தவிர்க்க இயலாததாக இருக்கிறது. இதைப் போன்றுதான் மற்ற படிப்புகளுக்கான செலவுகளும் அமைந்துள்ளன.

அதைவிட முக்கியமானது என்னவென்றால், படிக்கும் காலத்தில் பகுதிநேரம் வேலை செய்து வாழ்க்கைச் செலவை சமாளிக்கவும் முடிகிறது. இந்தியாவுக்கு வரும் அயல்நாட்டு மாணவர்களால் இந்தியாவில் பகுதி நேரமாகப் பணியாற்றி வாழ்க்கைச் செலவை ஈடுசெய்தல் என்பது வெறும் கனவாகத்தான் முடியும். ஆனால் ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களுக்கு இது நனவாகும் கனவு.

ஆஸ்திரேலியாவுக்கு படிக்கச் செல்லும் வெளிநாட்டு மாணவர்களுக்கு "நோ வொர்க்' என்று விசா கொடுக்கப்பட்டாலும், படிப்புக்காலம் தொடங்கியபிறகு, பெரும்பாலும் இரண்டாம் ஆண்டு முதலாக, பகுதிநேர ஊழியம் செய்ய அனுமதி கிடைத்துவிடுகிறது. இந்த வகையில் இந்திய மாணவர்கள் குறைந்தபட்சம் மாதம் ரூ.450 டாலர் வரை சம்பாதிக்க முடிகிறது. ஆஸ்திரேலிய நாட்டு சட்டத்தின்படி ஆண்டுக்கு 6000 டாலர் சம்பாதிக்கும் அனைவரும் வருமான வரி செலுத்த வேண்டும் என்றாலும், இந்த மாணவர்கள் தாங்கள் செலுத்தும் வரியில் குறைந்தது 2500 டாலர் வரை திரும்பப் பெறவும் முடிகிறது. ஆஸ்திரேலியாவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் பகுதிநேர வேலை பார்ப்போரில் பெரும்பான்மையோர் இந்திய மாணவர்கள்தான். பகுதி நேர வேலை முடித்து ரயிலிலும் டிராம்களிலும் மனிதர்கள் அதிகம் இல்லாத வேளையில் தனித்து வரும்போதுதான் இந்திய மாணவர்கள் குறிவைத்துத் தாக்கப்படுகிறார்கள். வழிப்பறிக்கு ஆளாகிறார்கள். ஆஸ்திரேலியாவில் வாழும் திறமையற்ற, வேலைசெய்யாத இளைஞர்களால் இத்தாக்குதல் நடத்தப்படுகிறது.

வெளிநாட்டு மாணவர்களை தங்கள் நாட்டுக்கு படிக்க அழைப்பதன் மூலம் ஆஸ்திரேலிய அரசுக்கு பெரும் அன்னியச் செலாவணியுடன், அறிவுசார்ந்த மனிதவளமும் கிடைக்கிறது. ஆகவே, இந்திய மாணவர்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்க வேண்டியது அந்நாட்டு அரசின் கடமை. அதைவிடுத்து, "இந்திய மாணவர்கள் பாதுகாப்பான புறநகர்ப் பகுதிகளுக்கு இடம்பெயர்வதுதான் ஒரே வழி' என்று ஆஸ்திரேலிய அரசு சொல்வது, தனது பொறுப்பை தட்டிக் கழிப்பதாகவே அமையும்.

ஆஸ்திரேலியாவில், சிட்னி மற்றும் மெல்போர்ன் நகரங்களில் கடந்த சில நாள்களாக இந்திய மாணவர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். இவர்களில் இருவர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்காக இந்தியத் தலைவர்களும், மாணவர் அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆஸ்திரேலிய அரசும் இது தொடர்பாக ஒரு சிலரை கைது செய்து விசாரித்து வருகிறது.

இது ஏதோ இப்போதுதான் நடைபெறத் தொடங்கியுள்ளதைப் போன்று பேசப்பட்டாலும், உண்மையில், இந்திய மாணவர்கள் தாக்கப்படுவது என்பது உலகம் முழுவதிலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. வெறும் வழிப்பறி என்ற அளவில் முடிந்துபோகின்றவை நிறைய. தற்போது தொடர்ச்சியாக சில சம்பவங்கள் நடந்திருப்பதும், ஒரு மாணவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதும்தான் பிரச்னையை இந்த அளவுக்கு அனைவரும் அறியும்படியாகச் செய்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் மொத்தம் 4 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் படிக்கின்றனர். சீனா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இந்த மாணவர்களில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 90 ஆயிரம்.

இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியா போய்த்தான் படிக்க வேண்டுமா? இந்தியாவில் இத்தகைய படிப்புகள் இல்லையா? என்று கேட்டால், இந்தியாவிலேயே இவர்கள் படிக்க முடியும் என்று பதில் சொல்வது எளிது. ஆனால், மிகக் குறைவான வசதிகளுடன் இங்குள்ள பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் வசூலிக்கும் கல்விக் கட்டணத்தை ஒப்பிடும்போது, ஏறக்குறைய இதே கல்விக் கட்டணத்தில் ஆஸ்திரேலியாவில் படிக்கவும், அயல் நாடுகளில் பணிபுரியும் வாய்ப்புகளை உடனடியாகத் தேடிக்கொள்ளவும் முடிகிறது.

உதாரணமாக, ஆஸ்திரேலியாவில் விமானியாக பயிற்சி பெற வேண்டும் என்றால் இந்திய மதிப்பில் ரூ.25 லட்சம் தேவைப்படுகிறது. இதே பயிற்சியை இந்தியாவில் தனியார் அமைப்புகளில் பெற வேண்டுமானால் ரூ.20 லட்சம் வரை ஆகிறது. ஆகவே, வெளிநாடு போய் படித்தால் என்ன என்ற ஆர்வம் தவிர்க்க இயலாததாக இருக்கிறது. இதைப் போன்றுதான் மற்ற படிப்புகளுக்கான செலவுகளும் அமைந்துள்ளன.

அதைவிட முக்கியமானது என்னவென்றால், படிக்கும் காலத்தில் பகுதிநேரம் வேலை செய்து வாழ்க்கைச் செலவை சமாளிக்கவும் முடிகிறது. இந்தியாவுக்கு வரும் அயல்நாட்டு மாணவர்களால் இந்தியாவில் பகுதி நேரமாகப் பணியாற்றி வாழ்க்கைச் செலவை ஈடுசெய்தல் என்பது வெறும் கனவாகத்தான் முடியும். ஆனால் ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களுக்கு இது நனவாகும் கனவு.

ஆஸ்திரேலியாவுக்கு படிக்கச் செல்லும் வெளிநாட்டு மாணவர்களுக்கு "நோ வொர்க்' என்று விசா கொடுக்கப்பட்டாலும், படிப்புக்காலம் தொடங்கியபிறகு, பெரும்பாலும் இரண்டாம் ஆண்டு முதலாக, பகுதிநேர ஊழியம் செய்ய அனுமதி கிடைத்துவிடுகிறது. இந்த வகையில் இந்திய மாணவர்கள் குறைந்தபட்சம் மாதம் ரூ.450 டாலர் வரை சம்பாதிக்க முடிகிறது. ஆஸ்திரேலிய நாட்டு சட்டத்தின்படி ஆண்டுக்கு 6000 டாலர் சம்பாதிக்கும் அனைவரும் வருமான வரி செலுத்த வேண்டும் என்றாலும், இந்த மாணவர்கள் தாங்கள் செலுத்தும் வரியில் குறைந்தது 2500 டாலர் வரை திரும்பப் பெறவும் முடிகிறது. ஆஸ்திரேலியாவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் பகுதிநேர வேலை பார்ப்போரில் பெரும்பான்மையோர் இந்திய மாணவர்கள்தான். பகுதி நேர வேலை முடித்து ரயிலிலும் டிராம்களிலும் மனிதர்கள் அதிகம் இல்லாத வேளையில் தனித்து வரும்போதுதான் இந்திய மாணவர்கள் குறிவைத்துத் தாக்கப்படுகிறார்கள். வழிப்பறிக்கு ஆளாகிறார்கள். ஆஸ்திரேலியாவில் வாழும் திறமையற்ற, வேலைசெய்யாத இளைஞர்களால் இத்தாக்குதல் நடத்தப்படுகிறது.

வெளிநாட்டு மாணவர்களை தங்கள் நாட்டுக்கு படிக்க அழைப்பதன் மூலம் ஆஸ்திரேலிய அரசுக்கு பெரும் அன்னியச் செலாவணியுடன், அறிவுசார்ந்த மனிதவளமும் கிடைக்கிறது. ஆகவே, இந்திய மாணவர்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்க வேண்டியது அந்நாட்டு அரசின் கடமை. அதைவிடுத்து, "இந்திய மாணவர்கள் பாதுகாப்பான புறநகர்ப் பகுதிகளுக்கு இடம்பெயர்வதுதான் ஒரே வழி' என்று ஆஸ்திரேலிய அரசு சொல்வது, தனது பொறுப்பை தட்டிக் கழிப்பதாகவே அமையும்.

நன்றி: தினமணி