செவ்வாய், 25 மே, 2010

ஹமாஸ் தலைவர் படுகொலை:இஸ்ரேல் தூதரை ஆஸ்திரேலியா வெளியேற்றியது

கான்பெர்ரா:ஹமாஸ் தலைவர்களில் ஒருவரான மஹ்மூத் அல் மப்ஹூஹ் கடந்த ஜனவரி மாதம் துபாயில் வைத்து இஸ்ரேலிய மொசாத் ஏஜண்டுகளால் கொல்லப்பட்டார்.

அவருடைய கொலையாளிகள் ஆஸ்திரேலிய பாஸ்போர்ட்டை போலியாக பயன்படுத்தியதை துபாய் போலீஸ் கண்டறிந்திருந்தது.

இந்நிலையில் இஸ்ரேலின் இத்தகைய மோசமான நடவடிக்கையை கண்டித்து ஆஸ்திரேலியா இஸ்ரேலின் தூதரக அதிகாரியை நாட்டைவிட்டு வெளியேற்றியது.

மொசாத் உளவாளிகள் மப்ஹூஹை கொல்வதற்காக ஆஸ்திரேலியாவின் 4 பாஸ்போர்ட்டுகளை போலியாக பயன்படுத்தி மோசடிச் செய்துள்ளனர்.

'ஒரு நட்பு நாட்டின் நடவடிக்கை அல்ல இஸ்ரேல் செய்தது’ என ஆஸ்திரேலியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்டீஃபன் ஸ்மித் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஏற்கனவே பிரிட்டன் மப்ஹூஹ் கொலையில் அந்நாட்டு பாஸ்போர்ட்டுகளை போலியாக பயன்படுத்தி மோசடிச் செய்த இஸ்ரேலின் நடவடிக்கையை கண்டித்து பிரிட்டனின் இஸ்ரேலிய தூதரக அதிகாரியை வெளியேற்றியிருந்தது.

இஸ்ரேலில் வசிக்கும் ஆஸ்திரேலியக்காரர்களின் பாஸ்போர்ட்டைத்தான் மோசடியாக மொசாத் உளவாளிகள் பயன்படுத்தியுள்ளனர்.

இஸ்ரேலிய அதிகாரிகளின் துணையில்லாமல் இச்சம்பவம் நடக்க வாய்ப்பில்லை என ஆஸ்திரேலிய அரசு கருதுகிறது. ஆஸ்திரேலியா நாட்டு ஃபெடரல் போலீஸ் இஸ்ரேலுக்குச் சென்றிருந்தது. ஆனால் மப்ஹூஹ் கொலைக்கு காரணம் நாங்கள் என்பதற்கு ஆதாரம் இல்லை என இஸ்ரேல் கூறுகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: