வியாழன், 27 மே, 2010

ஊனமுற்ற முஸ்லிம் இளைஞரை போலி என்கவுண்டரில் சுட்டுக்கொன்ற உ.பி.போலீஸ்- சத்தியபிரமாணம் தாக்கல் செய்ய உ.பி. அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடெல்லி:ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் மாவட்டத்தைச் சார்ந்தவர் முஹம்மது சலீம். இவருக்கு கடந்த 2009 நவம்பர் 24 ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடந்த சாலைவிபத்தில் உடலின் வலது பகுதி முற்றிலுமாக செயலிழந்தது.

இந்நிலையில் கடந்த மே மாதம் 15 ஆம் தேதி தனது சகோதரர்கள் அலீம் மற்றும் சமாயிதீன் ஆகியோர் பைக்கில் சலீமை அழைத்துக் கொண்டு உ.பி.மாநிலம் மதுராவில் உள்ள ஹரிபன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர்.

இந்நிலையில் வழியில் வைத்து இவர்களை மறித்த உ.பி.போலீஸ் அவர்களிடம் ட்ரைவிங் லைசன்ஸ் கேட்டுள்ளது. அப்பொழுது அலீமும் சமாய்தீனும் லைசன்ஸை ராஜஸ்தானிலிலுள்ள வீட்டில் விட்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதற்கு போலீசார் சலீமை வலுக்கட்டாயமாக பிடித்து வைத்துக்கொண்டு லைசன்ஸை கொண்டு வந்துவிட்டு சலீமை மீட்டுச் செல்லுங்கள் எனக்கூறியுள்ளனர்.

இதனால் லைசன்ஸை எடுக்க மீண்டும் இவர்கள் ராஜஸ்தான் சென்றுள்ளனர். ஆனால் மறுநாள் காலை பத்திரிகையில் வந்த செய்தியைப் பார்த்ததும் ஃபர்ஹான் பகுதி போலீசாரால் சலீம் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட தகவல் அறிந்து பதறிப்போயுள்ளார்.

சலீம் காரைத் திருட முயன்றதாகவும், அவருடன் வேறு சில குற்றவாளிகள் இருந்ததாகவும், துப்பாக்கிச் சண்டையில் அவர் கொல்லப்பட்டார் என்றும் செய்திகள் கூறுகின்றன.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தின் பாரத்பூர் மாவட்டத்தைச் சார்ந்த பஞ்சாயத்து பிரதான்கள் 20 பேர் சலீமின் உடலைக் கேட்டபொழுது கொடுக்க மறுத்துள்ளனர்.

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டிலும் மோசடிச் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் சலீமின் தந்தை மனுத்தாக்கல் செய்ததையடுத்து சுப்ரீம் கோர்ட் சலீமின் உடலை ஒப்படைக்கவும் இந்த போலி என்கவுண்டர் தொடர்பாக சத்தியபிரமாணம் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

செய்தி:Zee நியூஸ்



கருத்துகள் இல்லை: