சனி, 22 மே, 2010

தி.மு.கவில் குஷ்பு: வளரும் திராவிடக் கொள்கை?

E-mail Print PDF

பிரபல நடிகை குஷ்பு திமுகவில் சேர்ந்துவிட்டார் என்ற செய்தியால் திராவிடமே (?) மகிழ்ச்சி தாண்டவத்தில் திக்குமுக்காடிக் கொண்டிருக் கிறது.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, குஷ்பு அதிமுகவில் இணைவார் என பரபரப்பாகப் பேசப்பட்டது. சமீபகாலத்தில் கலைஞர் தொலைக்காட்சியில் அவர் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்த போது, திமுக வட்டாரத்தில் நல்ல தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இடையில் அவர் காங்கிரஸ் கட்சி குறித்து ஆதரவான வார்த்தைகளைக் கூற தமிழக காங்கிரஸ் தலைவர்கள், “அவர் வந்தால் வரவேற்போம்“ எனக் கூறினர். விரைவில் அவர் ராகுல்காந்தி அல்லது சோனியா வை சந்திப்பார் என்றும், அதற்கான நேரம்கூட முடிவாகி விட்டதாகவும் பத்திரிகையாளர் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

இந்நிலையில்தான், திரைமறைவு வேலைகள் நடைபெற்றதாகவும், அதன் விளைவாக குஷ்பு திமுகவில் இணைய முடிவெடுத்ததாகவும் கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியில் இணையப் போனவரை வழிமறித்து திமுக&வின் பக்கம் இழுத்துக் கொண்டார்கள் என்று காங்கிரஸ் காரர்கள் பொருமிக் கொண்டி ருக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியை திமுக பலவகையிலும் விரும் பவில்லை. அதற்கு குஷ்பு சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு என காங்கிரஸ் புள்ளிகள் கூறுகிறார்கள்.

பெரியார் படத்தில் மணியம்மை யாக ஒன்றி நடித்தபோதே அவர் திராவிட இயக்கக் கொள்கைகளில் ஆழ்ந்தபற்றுள்ளவர் என்பதை அறிந்துகொண்டதாக முதல்வர் கலைஞர் கூறியிருக்கிறார்.

இது என்ன பகுத்தறிவு என்று தெரியவில்லை. பணம் கொடுத் தால், எந்த கதாபாத்திரத்திலும் யாரும் ஒன்றிப்போய் நடிப்பார்கள் என்பது திரையுலகில் சாதாரண மான விஷயம்.

போபாலில் பிறந்த குஷ்பு தமிழச்சியும் அல்ல; தமிழருக்காகப் போராடியவரும் அல்ல; தமிழ் நாட்டுக்காக உழைத்தவரும் அல்ல.

இவர் எப்போது திராவிடக் கொள்கைகளுக்காக வாதாடினார்; போராடினார் என தெரிய வில்லை. திராவிடக் கொள்கை என்னவென்றும் தெரியவில்லை. கொள்கைக்கும் பணம் வாங்கி நடிப்பதற்கும் என்ன தொடர்பு என்றும் தெரியவில்லை.

இந்தக் கூற்றுப்படி பார்த்தால், ஊழல் அரசியல்வாதிகளை எதிர்த்து விஜயகாந்த் பல படங் களில் நடித்திருக்கிறார். விஜயகாந்தை தூய்மையான அரசியல் தலைவர் என்று கலைஞர் ஒப்புக்கொள்வாரா?
எது எப்படியாயினும் குஷ்பு இனி திராவிட இயக்கக் கொள்கை(!)களை கிராமங்கள் தோறும் பிரச்சாரம் செய்வார். விரைவில் அவருக்கு கட்சியில் கொள்கை பரப்புச் செயலாளர் பதவிகூட கிடைக்கலாம். மேலவை உறுப்பினர் அங்கீகாரம் ஏற்கனவே உறுதியாகிவிட்டதாகக் கூறுகிறார்கள்.

லட்சியங்களைக் கூறியும், தத்து வங்களைக் காட்டியும் வளர்ந்த ஒரு இயக்கம், கவர்ச்சி அரசிய லுக்கு பலியாவது வேதனைக் குரியது.

எம்.ஆர்.ராதா இயக்கவாதியாக இருந்ததால் தி.க. அவரை ஆதரித் தது. எம்.ஜி.ஆர். கட்சியில் உணர்வுப்பூர்வமாக உழைத்ததால் திமுக அவரை ஏற்றது. ஆனால், எந்த உழைப்பும் இல்லாமல், எந்த சிந்தனையும் இல்லாமல், கூட்டம் சேர்ப்பதற்காக கவர்ச்சி நடிகைகளை கட்சியில் சேர்ப்பது என்ன கொள்கையோ? வெங்காயமோ...?

-கதிரவன்

கருத்துகள் இல்லை: