வியாழன், 17 ஜூன், 2010

நிதிஷ்குமார்&மோடி மோதல்: சிறுபான்மை ஓட்டுக்காக நாடகம் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கும் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமா ருக்கும் இடையே மோதல் முற்

குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கும் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமா ருக்கும் இடையே மோதல் முற்றி வருகிறது. ஒரே கூட்ட ணியில் உள்ள இரு வரின் மோதலும் பெரும் பரபரப்பான நிகழ்வாக அர சியல் அரங்கில் பார்க் கப்படுகிறது.


குஜராத் மாநிலத்தில் தன து சாதனைகளாக மோடி பல் வேறு ‘கதைகளை’ விளம்பரப் படுத் தினார். அதில் பீகார் வெள்ள நிவாரணநிதிக்காக தமது அரசு வழங்கிய நிதி குறித்து அதில் மோடி விளம்பரப்படுத்தினார். குஜராத் மோடியின் சாதனை விளம்பரம் பீகார் பத்திரிகைகளில் வெளிவந்தது நிதிஷ் குமாருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

மோடியுடன் கைகுலுக்குவது போன்று வெளியான புகைப்படம் நிதிஷ்குமாரின் கோபத்தை அதிகப்படுத்தியது. மோடியுடன் கைகு லுக்குவது போன்ற தனது படம் வெளியானது நாகரீகமற்றது என இச்செயலை நிதிஷ்குமார் கண்டித்தார்.

நரேந்திரமோடியோடு தாம் கை குலுக்கவே இல்லை என நிதிஷ் குமார் கூறுகிறாரா என்றால் இல்லை. நரேந்திரமோடியோடு பல்வேறு சந்தர்ப்பங்களிலும் கை குலுக்கியிருக்கிறார், கட்டி அணைத் திருக்கிறார். ஆனால் பீகார் தினசரி விளம்பரங்களில் மட்டும் மோடியோடு இருப்பது போன்ற படம் வெளியானதற்காக ஏற்ப ட்ட நிதிஷ்குமாரின் கோபம் உள் நோக்கம் கொண்டது என சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.

மோடியோடு, மோடியின் கட் சியோடு தான் வைத்துள்ள உற வை அவர் மறுக்கவில்லை. ஆனால் விள ம்பரங்களில் வந்ததை மட்டும் எதிர்க்கிறார்.

அதாவது மோடியின் எதிர்மறை புகழ் தனது வாக்கு வேட்டைக்கு வேட்டுவைக்கும் என்பதைக்கண்டு அஞ்சி தற்போது பரம யோக்கியர் போல நிதிஷ்குமார் வேடம் போடு வதாகவே படுகிறது.

பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்ற பழமொழிக்கு ஏற் ப நிதிஷ்குமாரின் செயல்பாடுகள் இருக்கின்றன.


விரைவில் பீகார் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற இருக்கின்ற நிலையில் கணிசமான முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட பீகா ரில் முஸ்லிம்களின் வாக்குகளைக் கவர நிதிஷ், ஸ்டன்ட் அடிக்கிறார்.

இன்னமும் உறவு வைத்திருந் தால் தாங்கள் உழைக்கும் மக்க ளால் அரசியல் அரங்கில் இரு ந்து அப்புறப்படுத்தப் படுவோம் என்ற அச்சத்தில் திடீரென இந்த நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்.

நிதிஷ்குமார் உடனடியாக பாஜக கூட்டணியை விட்டு விலக வேண்டும். சட்டமன்றத் தேர்தல் சமீபத்தில் வருவதால் நிதிஷ்குமார் நாடகம் ஆடுகிறார்.

மோடிக்கும் நிதிஷ்குமாருக்கும் இடையில் வேறுபாடு இல்லை. இருவரும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்தான் என லாலு பிரசாத் யாதவ் சாடியுள்ளார்.

நிதிஷ்குமார் பாஜக தலைவர் களுக்கு வழங்க இருந்த விருந்தையும் ரத்து செய்துவிட்டார். இருப்பினும் ஒடுக்கப்பட்ட மக்கள் இதனை எந்த அளவு நம்புவார்கள்?

இதெல்லாம் ஒரு பொழப்பா?


மோடி தனது சாதனை விளம்பரத்தில் தனது தீமை குணத்தை அமல்படுத்தி இருக்கிறார். நிதிஷ் குமார் நாடகத்தில் சிரிப்பாய் சிரிக்கும் பாஜக மோடியின் தற் போதைய வேஷத்தில் சந்தி சிரிக்கிறது.

குஜராத்தில் தான் பெரிய சா தனை செய்து விட்டதாக பீற்றிக் கொள்ளும் மோடியின் அரசு விளம்பரத்தில் சிறுபான்மை மக்களுக்கு தனது அரசு செய்த (!) நன் மைகளை பட்டியலிட்டிருக்கிறார்.

அதில் முஸ்லிம் மாணவிகள், கம்ப்யூட்டர் கல்வி கற்பது போன்று ஒரு படமும் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அந்தப்படம் உத்திரப்பிரதேச மாநிலம் ஆஜம்கரில் உள்ள தேசிய கல்லூரி மாணவிகளின் படமாகும்.

இந்தப்படத்தின் வாயிலாக மோடிக் கூட்டம் ஒன்றை இந்த நாட்டிற்கு தெளிவாக சொல்லி விட்டது. தாங்கள் எந்த முஸ்லிமுக்கும் எவ்வித நன்மையையும் செய்ததில்லை.(செய்திருந்தால் தானே ஆதாரத்திற்கான படம் இருக்கும்) ஆனால் நன்மைகள் செய்யமாட்டோம்; செய்ததைப் போல் பசப்புவோம். அதையெல் லாம் நம்ப வேண்டியது உங்கள் விதி என்பதைப் போல பாசிசக் கூட்டம் பசப்பித் திரிகிறது.

தங்கள் கல்லூரி மாணவிகளின் படத்தைப்போட்டு அற்ப விளம்ப ரம் தேடும் செயலுக்கு ஆஜம்கார் தேசியக் கல்லூரியின் முதல்வர் இப்திகார் அகமது கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

அந்த விளம்பரத்தில் இடம் பெற்ற படம் குஜராத்தில் எடுத்தது என தாங்கள் சொல்லவே இல்லை யே என இப்போது குஜராத் அரசு மழுப்புகிறது..
அடவெட்கங் கெட்டவங்களா?
- ஹபிபா பாலன்

கருத்துகள் இல்லை: