பெர்லின்:ஜெர்மனியில் இரண்டாம் உலகப்போரின் பொழுது பயன்படுத்திய வெடிக்குண்டை செயலலிழக்கச் செய்யும் வேளையில் அக்குண்டு வெடித்ததால் மூன்று பேர் மரணமடைந்தனர். ஆறுபேருக்கு காயம் ஏற்பட்டது.
கோயிற்றிங்கன் நகரில் விளையாட்டு அரங்கம் நிர்மாணிப்பதற்கிடையே வெடிக்குண்டு வெடித்துள்ளது.
ஏற்கனவே இங்கிருந்து கண்டெடுத்த வெடிக்குண்டு ஒன்றை செயலிழக்கச் செய்துள்ளனர். 500 கிலோகிராம் எடையுள்ள வெடிக்குண்டு வெடித்ததற்கான காரணம் தெரியவில்லை.
ஜெர்மனியின் மீது இரண்டாம் உலகப்போரின் பொழுது ஜெர்மனியின் எதிரி நாடுகள் வீசிய வெடிக்குண்டுகள் பின்னர் பல இடங்களிலிருந்து கண்டெடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இது முதல் முறையாக இப்பொழுது வெடிக்குண்டு வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக