செவ்வாய், 1 ஜூன், 2010

யாழ்ப்பாணம்-300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மஸ்ஜித்! மீண்டும் திறப்பு!

யாழ்ப்பாணம் பெரிய பள்ளி- The Jaffna Grand Mosque இன்று மீண்டும் 20வருடங்கலுக்கு பின்னர் திறந்துவைக்கப்பட்டு நிகழ்சிகள் நடைபெறுகின்றது என்று எமது யாழ் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர் இந்தப் பள்ளிவாசல் தற்பொழுது முழுமையாக புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளதுடன் சுமார் 3000 முதல் 4000 வரையிலான முஸ்லிம்கள் தொழக்கூடிய வசதியைக் கொண்டுள்ளது இன்று நண்பகல் இடம்பெற்ற ஜும்மா தொழுகையுடன் இந்த மஸ்ஜித் திறக்கப்பட்டுள்ளது .

1990ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிகள் புலிகளினால் வெளியேற்றப்பட்டிருந்த நிலையில், இந்த மஸ்ஜிதும் யாழ்ப்பாணத்தில் இருக்கும் ஏனைய 20 மஸ்ஜிதுகளும் கைவிடப்பட்டிருந்தது. தற்போது மஸ்ஜிதுகள் ஒன்றன் பின் ஒன்றாக மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளது இன்றைய நிகழ்ச்சியில் மௌலவி அப்துல் ஹாலிக் ஜும்மாஹ் குத்பாவை நிகழ்த்தியுள்ளார் , யாழ்ப்பாணம் மற்றும் பிறமாவட்ட ஆலிம்கள் மற்றும் பொது மக்கள் பலர் இதில் கலந்துகொண்டுதுள்ளனர்.

போர்த்துகீசர் காலத்தில் போத்துக்கீசர்கள் யாழ்பாணத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க சர்வதேச வியாபாரிகளாக முஸ்லிம்களை கண்டனர் கொழும்பு துறை பகுதியில் இருத்த முஸ்லிம்களில் அணைத்து கட்டிடங்களும் போத்துக்கீசர்களால் தகர்க்கபட்டது அதன் போது முஸ்லிம்களின் குடி இருப்புகள் , மஸ்ஜிதுகள் இறங்கு துறைகள் ,பண்டசாலைகள் , வியாபார கப்பல் என்பனவும் இவர்களால் அழிக்கப்பட்டதுடன் முஸ்லிம்கள் அந்த பகுதியில் இருந்து வெளியேற்றபட்டனர் பின்னர் மீண்டும் யாழ்ப்பாண முஸ்லிங்கள் தற்போது இருக்கும் முஸ்லிம் பகுதியில் ஒல்லாந்தர் (ஹாலந்த்) காலத்தில் 1713ல் மஸ்ஜித்தை நிர்மாணித்தனர் என்பது குறிபிடதக்கது பல்லவர் கால சிற்பத்தை ஒத்ததாக அமைக்கப்பட்டுள்ள இந்தப் பள்ளி 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததும் மிகப்பெரியதுமாகும்.

ஒற்றுமையையும், சமாதானத்தையும் வலியுறுத்தி முதலாவது ஜும்ஆப் பிரசங்கத்தை கொழும்பு பெரிய மர்க்கஸ், ரஷாதிய்யா அரபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் மெளலவி எம். ஜே. அப்துல் ஹாலிக் நிகழ்த்தியுள்ளார். பெண்களுக்கான விசேட பயான் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அஸர் தொழு கையைத் தொடர்ந்து உலமாக்களுடனான ஆலோசனைக் கூட்டமும் நடைபெறவுள்ளது.முஸ்லிம் கல்லூரி வீதியில் அமையப்பட்டுள்ள இந்தப் பள்ளிவாசலுக்குட்பட்ட பகுதியில் முஸ்லிம்கள் மீண்டும் மீளக்குடியமர்ந்ததையடுத்தே இந்த மஸ்ஜித் புனரமைக்கப்பட்டுள்ளது.
நன்றி - lankamuslim இணையத்தளம்

கருத்துகள் இல்லை: