புதன், 2 ஜூன், 2010

ராஜஸ்தான் கிராமத்தில் கலவரம்: ஈத்கா உட்பட முஸ்லிம் சொத்துகள் நாசம்

E-mail Print PDF
idgah  damaged in jodhpur

‍இடிக்கப்பட்ட ஈத்கா



ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலோட்;டின் சொந்த மாவட்டமான ஜோத்பூரில் உள்ள பல்சார் துர்கவாடே கிராமத்தில் நடைபெற்ற கலவத்தில் ஈத்கா உள்பட பல முஸ்லிம் வழிப்பாட்டுத்தலங்கள் தாக்கப்பட்டு பல முஸ்லிம் கடைகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் கெலோடின் சாதிக்காரர்களான பந்து மாலி சாதியினர் தான் இந்த கலவரத்தில் ஈடுபட்டனர். இவர்களை அடக்குவதற்காக காவல்துறையினர் முயன்ற போது அவர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதன் விளைவாக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் கலவரக்காரர்களில் ஒருவர் பலியானார்.
கடந்த மே 22 அன்று பல்சார் துர்கவாடே கிராமத்தில் முஸ்லிம்களுக்கும் பந்து மாலி சாதியினருக்கும் இடையே மோதல் வெடித்தது. ஜோத்பூரில் இருந்து 75 கீ.மீ. தொலைவில் உள்ள இந்த கிராமத்தில் தேசீய ஊரக வேலைவாய்ப்பு திட்;டத்தின் கீழ் சாலை அமைப்பது தொடர்பாக இரு சமூகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த கிராமத்தின் நடுவே வற்றிய ஒரு ஆறு ஒடுகின்றது. இந்த ஆற்றின் ஒரு பகுதியில் முஸ்லிம்கள் மற்றொரு பகுதியில் பந்து மாலி சாதியினர் வாழ்ந்து வருகின்றார்கள். ஊரில் சாலை அமைக்கும் திட்டத்திற்கு முஸ்லிம்களும் இந்து சாதியினரும் தங்கள் பகுதியில் இருந்து சமமான அளவு நிலம் தருவதாக முதலில் ஒப்புக் கொண்டனர். ஆனால் இதன் பிறகு முஸ்லிம் பகுதியில் இருந்து மட்டும் நிலத்தை எடுத்துக் கொண்டு சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. முஸ்லிம்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போது முஸ்லிம்கள் மீது கல்வீச்சில் மாலி சாதியினர் ஈடுபட்டனர். இதன் பிறகு ஈத்கா உட்பட சில முஸ்லிம் வழிப்பாட்டுத் தலங்களை கலவரக்காரர்கள் அடித்து நொருக்கியதுடன் முஸ்லிம்களின் கடைகளுக்கு தீயும் வைத்தனர்.
gutted shops in jodhpur

எரிக்கப்பட்ட கடைகள்


நிலைமை மோசமான நிலையில் அங்கு வந்த காவல்துறையினர் கலவரக்காரர்கள் மீது தடியடி நடத்தியும் கலவரம் ஒயாதநிலையில் காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தி கிராமத்தில் அமைதியை ஏற்படுத்தினர்.
இக்கிராமத்தில் அமைதியை நிலைநாட்ட அமைதி குழு ஏற்படுத்தப்பட்டது. கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடும் மாநில அரசு வழங்கியது. ஆனால் இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக முஸ்லிம்கள் இழப்பீடு தொகையை வாங்க மறுத்துள்ளனர். கலவரத்தில் உயிர் இழந்த பாலி சாதியைச் சேர்;ந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ5 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ2 லட்சம ரூ1 லட்சம், ரூ50 ஆயிரம் வழங்கப்பட்டது. ஆனால் இடிக்கப்பட்ட ஈத்காவிற்கு ரூ10 ஆயிரமும், காயமடைந்த முஸ்லிம்களுக்கு சேதமடைந்த கடைகளுக்கு ரூ 2-3 ஆயிரம் மட்டும் வழங்கப்பட்டது.
இது குறித்து நேரில் விசாரிக்கச் சென்ற முஸ்லிம் முசாவரத் குழுவினர் அசோக் கெலோட் ஆட்சியில் வகுப்புவாதிகள் ஆதிக்கம் அதிகரித்து வருவதாகவும் நீதி கிடைக்காத நிலையில் முஸ்லிம்கள் நிர்க்கதியான நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

செய்தி மற்றும் படங்கள் நன்றி: டூ சர்கிள்ஸ்

கருத்துகள் இல்லை: